Thursday, September 4, 2014

கிருஷ்ணன் ஏன் அழுதான்?

வாத நோயால் வேதனை பட்டுக் கொண்டிருந்தார் நாராயண பட்டத்திரி. அவருடைய நோய் குணமடைய வேண்டுமானால் அவர் குருவாயூரப்பன் சந் நதிக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கே குருவாயூரப்பனான கிருஷ்ணனின் மகிமைகளை பாட வேண்டும் என்றும் ஒரு ஜோசியர் அவருக்கு அறி வுறுத்தினார். அதைக் கேட்டு திகைத்தார் நாராயண பட்டத்திரி. இத்தனைக்கும் அவர் அனைத்து வேத சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்.  ஏற்கெனவே பலராலும் எழுதப்பட்டும், சொல்லப்பட்டும் வந்திருக்கும் கிருஷ்ணனின் அற்புதத் திருவிளையாடல்களை தாமும் சொல்வது என்பது எந் தவகையில் புதுமையாக இருக்கும் என்று யோசித்தார் அவர். ஆகவே மாற்று யோசனை ஒன்றை அவர் மேற்கொண்டார்.

அதாவது, அந்தத் திருவிளையாடல்களை ஒவ்வொன்றாக சொல்லி குருவாயூரப்பனிடமே ‘அப்படியெல்லாம் நடந்ததா?’ என்று கேட்க வேண்டியது; அவன் ஆமென்று சம்மதிக்கும்  பட்சத்தில், அந்த தெய்வீக நிகழ்ச்சிகளை பாடல்களாக எழுதுவது என்று தீர்மானித்துக் கொண்டார். அதாவது, ஒரே விஷயம்தான் என்றாலும்  ஏற்கெனவே எழுதப்பட்டது போல இருந்துவிடக் கூடாது, தன் படைப்பு வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்ற அவருடைய புதுமை எண்ணம்  1580-ம் ஆண்டிலேயே அவருக்கு வந்துவிட்டதை இப்போது நாம் நினைத்து ஆச்சரியப்பட வேண்டும்.

ஆனால், பத்துப் பாடல்களை பாடிவிட்டு பட்டத்திரி நிமிர்வார். ‘இன்னும் பாடு’ என்பான் குருவாயூரப்பன். ‘பத்து பாட்டு பாடிவிட்டேனே, என் உடம்பை  குணப்படுத்து’ என்று கேட்பார் பட்டத்திரி. ‘மாட்டேன், உன்னை குணப்படுத்திவிட்டால் அப்புறம் நீ தொடர்ந்து பாடாமல் போய்விடுவாய்’ என்று  மறுப்பான் குருவாயூரப்பன். ‘உன்னைப் பாடுவதென்றால் எனக்கு கசக்கவா செய்யும்?’ என்று கேட்டுக் கொண்டு, தொடர்ந்து பாடுவார். ஆனால், சில  பாடல்களுக்கு பிறகு மீண்டும் அதே கேள்வி, அதே பதில்... நாராயணீயம் முழுமை பெற்ற போதுதான் பட்டத்திரியும் முழுமையாக குணமானார்!

நாட்டு வைத்தியத்தில் ‘ஏழு கடுக்காய்’ வைத்தியம் என்று ஒரு சிகிச்சை முறையை அந்த காலத்தில் பின்பற்றி வந்தார்கள். அது எந்த அளவுக்குப்  போயிற்று என்றால், வயிற்று வலியா, ஏழு கடுக்காய் சாப்பிடு, பொருள் திருடு போய்விட்டதா, ஏழு கடுக்காய் எடுத்துக்கொள், மனைவி பிரிந்து போய்  விட்டாளா, அதே ஏழு கடுக்காய். இப்படி தன் ஆசான் ‘சிகிச்சை’ அளிப்பதைக் கண்ட ஒரு சீடன், குருவிடம், ‘‘அது என்ன உடல் உபாதைக்கும்  அதே வைத்தியம்; பொருள் களவு போனதற்கும் அதுவேவா? எப்படி இது  சாத்தியம்?’’ என்று கேட்டான். ‘‘போய், ஏழு கடுக்காய் சாப்பிட்டுப் பார், உனக்கே தெரியும்’’ என்றார் குரு!

பத்மவியூகத்துக்குள் புகுந்து விட்டான் அபிமன்யு. தன் தாய் திரௌபதியின் கர்ப்பத்திலிருந்த போது, பொதுவான போர் முறைகளையும், அதில் பத் மவியூக தந்திரத்தையும் கிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டபடி இருந்தான் அபிமன்யு. ஆனால், அந்த வியூகத்திலிருந்து வெளியே வரும்  உத்தியை கிருஷ்ணன் சொல்ல ஆரம்பித்தபோது திரௌபதி அங்கிருந்து ஏதோ வேலையாக எழுந்து போய்விட்டாள். ஆகவே தப்பிக்கும் சூட்சுமத்தை  அவன் அறியவில்லை. அதனாலேயே அவனை துரியோதன படைகள் எளிதாகக் கொன்றுவிட்டன. மகன் இறந்த செய்தி கேட்ட அர்ஜுனன் புத் திரசோகம் தாங்காமல் கதறினான். அருகிலிருந்தபடி அதைப் பார்த்த கிருஷ்ணன், அர்ஜுனனை விட பெரிதாகக் குரலெடுத்து அழுதான்.

இது என்ன வேடிக்கை? பரமாத்மா கிருஷ்ணன் ஏன் அழவேண்டும்? தான் கூடுதலாக அழுதால் அர்ஜுனன் அந்த ஆறுதலில் மனம்  அமைதியடைவான் என்று எண்ணினானோ? இது எப்படி இருக்கிறதென்றால், தன் பர்ஸிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் திருட்டு போய்விட்டதே என்று ஒருவன் கதறினானாம். உடனே பக்கத்திலிருந் தவன், ‘என் பர்ஸிலிருந்தும்தான் பத்தாயிரம் ரூபாய் களவு போய்விட்டது. நான் கவலைப்படுகிறேனா, பார்’ என்றானாம். அட, தன் துக்கத்தை விட  இவனுடையது பெரிதாக இருக்கிறதே என்று முதலாமவன் கொஞ்சம் ஆறுதலடைந்தானாம். இப்படித்தான் இருக்கிறது கிருஷ்ணன் அழுததும். ஆனால், உண்மைக் காரணம் என்ன தெரியுமா?

‘இந்த இழப்புக்காக அழும் உனக்குப்போய் மன ஒருநிலைப்பாடு, துன்பம் - இன்பம் இரண்டையும்  ஒன்று போல பாவிக்கும் மனப்பக்குவம் என்று கீதையை உபதேசித்தேனே’ என்று நினைத்து, அதற்காக அழுதானாம் கிருஷ்ணன்! குருக்ஷேத்திர யுத்தத்தின் கடைசி நாள். துரியோதனன் வீழ்ந்தான். வெற்றிவாகை சூடிய அர்ஜுனனை கிருஷ்ணன் தேரிலிருந்து இறங்கச் சொன்னான்.  அதுநாள்வரை அர்ஜுனனுக்கு தேரோட்டியாக பணியாற்றி வந்த கிருஷ்ணன், தான் முதலில் கீழிறங்கி, பிறகு கதவைத் திறந்துவிட்டு அர்ஜுனனை  இறங்குமாறு சொல்வதுதான் வழக்கம். இப்போதென்ன வழக்கத்திற்கு மாறாக?

துரியோதனன் இறந்துவிட்டதால், போரில் வெற்றி உறுதியாகிவிட்டதால்  தேரோட்டி தன் நிலையை மறந்துவிட்டானா என்று அர்ஜுனன் திகைத்தான். ஆனால், கிருஷ்ணன் பிடிவாதமாக முதலில் அவன்தான் இறங்க வேண் டும் என்று வற்புறுத்தி அர்ஜுனனை இறங்க வைத்தான். பிறகு, தான் இறங்கியவுடன் தேர் அப்படியே குப்பென்று தீப்பற்றி சாம்பலாகியது. திடுக்கிட் டான் அர்ஜுனன். அவனைப் பார்த்து மென் சிரிப்புடன் சொன்னான் கிருஷ்ணன். “ஆமாம், அர்ஜுனா... இத்தனை நாள் வரை நடைபெற்ற போரில் எ த்தனையோ வகையான அம்புகள் இந்தத் தேரை நோக்கி வீசப்பட்டன.

அவற்றின் உக்கிரங்களையெல்லாம் நான் தாங்கிக் கொண்டேன். போர்  முடிவடைந்துவிட்ட இத்தருணத்தில் அந்த உக்கிரங்கள் எல்லாம் கனன்று, தீயாய் மூளக் காத்திருந்தன. நான் முதலில் இறங்கிவிட்டால் நீயும் இந்தத்  தேரோடு பஸ்மமாகியிருப்பாய், தெரியுமா?” என்று விளக்கினார். உடல் சிலிர்த்தபடி உண்மையையும் பகவானையும் உணர்ந்தான் அர்ஜுனன். ‘‘மகனே, ஜாக்கிரதை. ஊர் உலகம் ரொம்பவும் கெட்டு கிடக்குது. விழிப்போடு இரு. அலட்சியமாக இருந்து ஆபத்தைத் தேடிக் கொள்ளாதே’’ என்று  ஒரு தாய் தன் மகனுக்கு அறிவுறுத்துவது இயல்பு. ஆனால், பெரிய போலீஸ் அதிகாரி ஒருவருக்கு இப்படி ஒரு தாய் அறிவுறுத்தினால் எப்படி இ ருக்கும்! அதேபோல தான் யசோதை, தன் பிள்ளை கிருஷ்ணனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள், ‘பகவானே என் குழந்தையை காப்பாற்று’ என்று  வேண்டிக் கொள்ளவும் செய்தாள்!

No comments:

Post a Comment