Thursday, September 11, 2014

ராமநாமத்தின் மகிமை




நாரதர் மகாவிஷ்ணுவிடம், “”ராமநாமத்தின் மகிமையை மக்கள் மிகவும்
உயர்வாகப் பேசுகிறார்கள். அதன் பெருமையை நீங்கள் சொன்னால்
நன்றாக இருக்கும்,” என்றார்.
விஷ்ணு அவரிடம், “”நீ போய் ஒரு காகத்திடம் அதைச் சொல்,”
என்றார். நாரதரும் காகத்திடம் போய், “”பகிர்ந் துண்ணும் நற்குணம்
கொண்ட காகமே, “ராமாஎன சொல்என்றார். காகமும்ராமாஎன்றது.
உடனேயே இறந்து விட்டது. அதிர்ச்சியடைந்த நாரதர்,
“”
நாராயணா! இதென்ன விபரீதம்?” என்றார்.
“”சரி..அந்த மயிலிடம் போய் சொல்,” என்றார். “”ஆடும் மயிலே!
உன் அழகு தோற்றத்திற்கு மயங்காதவர் பூமியில் இல்லை.
எங்கேராமாஎன சொல்,” என்றார். மயிலும் ராமநாமம் சொல்லி
உயிர்விட்டது.
நாரதருக்கோ இன்னும் பேரதிர்ச்சி.””மாயவா! என்ன இது மாயங்கள்
செய்கிறாய். ராமநாமம் சொன்னால் இந்தக்கதியா ஏற்படும்,” என்றதும்,
சிரித்த அந்த மாயக்கள்வன், “”பயப்படாதே! அந்த பசு கன்றிடம்
போய் சொல்,” என்றார். பசுவின் கன்றைக் கொன்றால் பெரிய
பாவமாயிற்றே என பயந்த நாரதர், அந்த நாராயணன் மீதே
பாரத்தைப் போட்டு விட்டு, கன்றையும் ராமநாமம் சொல்லச் சொன்னார்.
கன்றும் அதைச் சொல்லிவிட்டு, கீழே சாய்ந்தது. நாரதர் வெலவெலத்துப்
போனார்.
“”நாராயணா! கலகக்காரனையே கலங்கடிக்கிறாயே! இது என்ன விந்தை,”
என்றதும், “”நாரதா! நீ அதோ அந்த நாட்டை ஆளும் மன்னனின்
மகனிடம் இதைச் சொல்,” என்றார். நாரதர் ஆடிப்போய்விட்டார்.
“”மாட்டேன் நாராயணா! உனக்கு விளையாட இன்று நானா கிடைத்தேன்!
அந்த மன்னனின் மகனுக்கு ஏதாவது ஆபத்து என்றால், மன்னன்
என்னைக் கொன்றுவிடுவான். முடியாது,” என்றார்.
மகாவிஷ்ணு கண்டிப்புடன் சொல்லவே, அவரது கட்டளையை மீற முடியாத
நாரதர், மன்னன் மகனிடமும் ராமநாமத்தைச் சொல்லச் சொன்னார்.
“”மகரிஷியே! மிக நல்ல மந்திரத்தை உச்சரிக்கச் சொன்னீர்.
காகமாகவும், மயிலாகவும், கன்றாகவும் பிறந்த நான் தங்கள் மூலம்
அம் மந்திரத்தைச் சொன்னதால் உடனே அந்தப் பிறவிகளை முடித்து,
இப்போது மானிடப் பிறவி எடுத்து மன்னன் மகனாக சுகவாழ்வு
வாழ்கிறேன்,” என்றதும், நாரதர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நாராயணனின் கருணையை எண்ணி அவர் வியந்தார்.

No comments:

Post a Comment