Saturday, September 6, 2014

ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள்





விக்னேஸ்வரர், சனீஸ்வரர், ராவணேஸ்வரன், சண்டிகேஸ்வரர் ஆகிய நால்வர் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்றவர்களாவர். ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் கோயிலில் உள்ள முருகப் பெருமான், பிரணவேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.சிவன் எல்லாம் அறிந்தவராக இருக்க, சிறியவனாகிய தான், தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி வருத்தம் கொண்டார் முருகன். எனவே, அவர், இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். சிவன் அவருக்கு காட்சி தந்து, நீயும் நானும் ஒன்றே எனக்கூறி மைந்தனை தேற்ற, மனம் தெளிவடைந்தார் முருகன். எனவே, பிரண வேஸ்வரர் என்று பெயர் பெற்றார். திக்குவாய் மன கஷ்டம் உள்ளவர்கள் இந்த முருகனை வேண்டிக்கொண்டால் மனஆறுதல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இத்தல முருகனை "தந்தை பட்டம் பெற்ற தனயன் என அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment