Sunday, September 14, 2014

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்




ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா 
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே 
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க 
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,
உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும்,
கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக !

கந்தர் ஷஷ்டிக் கவசத்துப் பாடலின்
இவ்வரிகளை உண்மையான பக்தியோடு
தொடர்ந்து பாடினால் முருகனின்
அருட்காட்சி கிட்டும்.

ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் இயற்றிய கந்த குரு கவசம் வரிகள்...
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ

முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்......
........
மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையட
கலனை நீ ஜெயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தல் சுப்ரமணிய குருநாதன்
தன்னொலிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தனிருப்பன்
ஜகமையை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும்

No comments:

Post a Comment