Saturday, September 6, 2014

சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்?

மனிதர்களின் உடல் அமைப்பு சைவ உணவினை உட்கொள்ள தகுந்தாற்போல் தான் அமைந்து உள்ளது. அதாவது குடலின் நீளம், பற்களின் அமைப்பு, செரிமானத்திற்கு உதவும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அமில தன்மை ஆகிய அனைத்தும் காய், கனி, கிழங்குகளை உட்கொள்ளும் தன்மைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதன் மூலம் இறைவன் நமக்கு விதித்த உணவு சைவ உணவே என்று அறிதல் வேண்டும்.
மேலும்
வள்ளல் பெருமான் அவர்கள் புலால் உண்பவர்கள் புறவினத்தார் என்றும் அவர்களுக்கு இறைஅருள் சிறிதும் கிட்டாது என்று தெளிவாக கூறி அசைவ உணவினை விட்டு , சுத்த சைவ உணவினை உட்கொள்ளுமாறு வழியுறுத்தி உள்ளார்கள்.
`அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு “ஜீவகாருண்யமே ” உண்மையான கடவுள் வழிபாடு என்று அருளுகிறார் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான்.
நோன்பு என்பது யாதெனின் “கொன்று திண்ணாமை” என்று அருளுகிறார் அவ்வை பிராட்டி.
“புலால் உண்ணாமை” என்று 10 அதிகாரங்கள் படைத்தது வாழும் நெறியினை நமக்கு அருளுகிறார் வள்ளுவர் பெரும்தகை.
புலால் உண்பவர்கள் புலையர்கள் என்று சாடுகிறார் திருமூலர் பெருமானார்.
அதனால் அரிதான மனித தேகத்தினை பெற்ற நாம் மற்ற உயிரின் மீது பரிவு காட்ட வேண்டுமே தவிர  கொன்று தின்ன கூடாது.
“முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கு தாமே யாம்” – அதாவது நாம் செய்த வினைகள் நமக்கு தான் திரும்ப வரும்.
உடலை விட்டு உயிர் பிரிவதே ஆன்மாவிற்கு ஏற்படும் மிக பெரிய வலி/ துன்பம் என்பதால் தான் கொலை என்பதை மிக பெரிய ஜீவஹிம்சை என்கிறார்கள் ஞானிகள்.  கர்ம விதிக்கு ஏற்ப உணவிற்காக கொல்லப்படும் விலங்குகளின் வலியினை உண்பவர்கள் அனுபவித்தே ஆகா வேண்டும் என்பது இறை நியதி. சற்று சிந்தியுங்கள் ஒருவர் வாழ்வில் அசைவத்தினை வாரம் ஒருமுறை மட்டுமே உண்டாலும் தனது வாழ்நாளில் எத்தினை உயிர் கொலை புரிகிறார். அத்தனை உயிர்கள் பட்ட வலியினை இவன் பல பிறவிகள் பட்டால் தான் தீரும்.
இதன் பொருட்டே எல்லா சித்தர்களும், ஞானிகளும் புலால் உண்பதை கண்டிக்கிறார்கள்.
இதனை உணர்ந்து உடனே அசைவம் உண்பதினை கைவிடுங்கள்.

No comments:

Post a Comment