Monday, September 15, 2014

அன்னதானத்தின் அவசியம் தெரியுமா?





அனைவருக்கும் கேட்டவரம் அனைத்தையும் அளித்த கொடையாளி கர்ணன். தன் வாழ்நாளின் ஒருவரை அமர்வித்து உணவளித்து அன்னதானம் செய்ததில்லை. இறந்தபின் சொர்க்கம் அடைந்தான். அங்கு அனைவரும் பசி, தாகம் இன்றி சுகமாக இருந்தனர். ஆனால் கர்ணனுக்கு மட்டும் கடும் பசி எங்கு தேடியும், யாரை கேட்டும் உணவு கிடைக்கவில்லை. நாரதரை கண்டு, எனக்கு மட்டும் சொர்க்கத்தில் ஏன் இந்த அவல நிலை? எனக் கேட்டான். நாரதர், கர்ணா! உனது ஆள்காட்டி விரலை வாயில் இட்டு சுவை என்றார். கர்ணனும் அப்படியே செய்ய பசியும் தீர்ந்தது. ஆனால் வாயிலிருந்து விரலை எடுத்தாலோ மீண்டும் பசித்தது. காரணம் கேட்ட கர்ணனிடம் நாரதர் நீ உனது வாழ்நாளில் ஒருவருக்காவது அன்னதானம் செய்ததில்லை. ஒரு சமயம் துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடைபெற்றது. பசியால் வாடிய ஒருவன் உன்னிடம் வந்து விசாரித்த போது, அன்னதானம் நடக்கும் இடத்தை நீ உனது ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாய். அந்த பெரும் புண்ணியம் உனது ஆள் காட்டி விரலில் தொற்றியுள்ளது. அந்த விரலைச் சுவைத்தவுடன் பசி நீங்குகிறது. எனவே தான் தானத்தின் சிறந்தது அன்னதானம் என்றார். எனவே தான் கர்ணன், அன்னதானம் செய்வதற்காகவே மறுபிறவி எடுக்க விரும்பி, சிவனிடம் வரம் கேட்டுப் பெற்றான். கர்ணனின் மறுபிறவியே சிறுத்தொண்ட நாயனார். பக்தரின் அன்னதான அவசியத்தை உலகுக் உணர்த்தவே சிவன் வீர சைவ அடியாராக வந்து பிள்ளைக்கறி கேட்டு அருள் புரிந்தார். இக்கதையையே சீராளன் கதை என கிராமங்கள் தோறும் பல நூற்றாண்டுகளாக சிவபக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.


No comments:

Post a Comment