தேவையான பொருட்கள்:
ஒரு மஞ்சள் துண்டு, மஞ்சள் நிற வேட்டி, இரண்டு 5 முக ருத்ராட்சங்கள், இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்கள், நாட்டு சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறு
தொடங்க வேண்டிய காலம்:
அமாவாசை திருநாள் – குரு ஓரை
தொடங்க வேண்டிய இடம்:
பாடல் பெற்ற சிவத்தலம் அல்லது ஜீவ சமாதி அல்லது பசு கட்டப்பட்டிருக்கும் தொழுவம் அல்லது உயரிய மலைக்கோவில் அல்லது நீர்நிலைகளுக்கு அருகே உள்ள இடம் அல்லது வீட்டின் பூசையறை
தொடங்க வேண்டிய முறை:
1. மஞ்சள் வேட்டியை இடுப்பில் தொப்புள் தெரியாத அளவிற்கு கட்டிக் கொள்ளவும். மஞ்சள் துண்டை தரையில் விரித்து அதில் அமரவும்.
2. இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்களை ஏற்றி அதன் முன்னர் எலுமிச்சைப் பழச்சாறு வைக்கவும்.
3. முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கவும். (உதாரணமாக ஓம் ரேணுகா பரமேஸ்வரியை நமஹ – 1 முறை)
4. இரண்டாவதாக விநாயகரை வணங்கவும். (ஓம் கம் கணபதயே நமஹ – 1 முறை)
5. மூன்றாவதாக உங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கவும். (உதாரணமாக ஓம் மஹா முனீஸ்வராய நமஹ – 1 முறை)
6.
பின்பு “ஓம் தக்ஷிணாமூர்த்தயே நமஹ” என 108 முறை செபிக்கவும்.
7. பின்பு “ஓம் சிவ சிவ ஓம்” என்ற சிவமந்திரத்தை முதலில் ஒரு வாரம் வரையில் 10 நிமிடங்கள் இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வீதம் அடக்கிக் கொண்டு செபிக்கவும். ஒவ்வொரு வாரமும் 10 நிமிடங்கள் அதிகரித்துக் கொண்டே சென்று கடைசியாக 60 நிமிடங்கள் அதாவது 1 மணி நேரம் செபிக்கவும்
.
8. பின்பு “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என 108 முறை செபிக்கவும்.
9. கடைசியாக பின்வரும் சித்தர் துதியை செபித்து முடிக்கவும்.
· ஓம் அருணாசலாய நமஹ
· ஓம் காகபுசுண்ட தேவாய நமஹ
· ஓம் அகத்தீசாய நமஹ
· ஓம் நந்தீசாய நமஹ
· ஓம் போக சித்தாய நமஹ
· ஓம் கோரக்க தேவாய நமஹ
· ஓம் புலிப்பாணி தேவாய நமஹ
· ஓம் கருவூர் தேவாய நமஹ
· ஓம் ராமலிங்க தேவாய நமஹ
10. கடைசியாக எலுமிச்சைப்பழச்சாறை குடிக்கவும்.
சாவு தீட்டு போன்ற காரியங்களை விலக்கவும். சாவிற்கு சென்று வந்தால் 5 நாட்கள் தீட்டு உண்டு. நெருங்கிய ரத்த உறவாக இருப்பின் 30 நாட்கள் தீட்டு உண்டு. பிள்ளைப்பேறு தீட்டு 40 நாட்கள் உண்டு. அசைவம் சாப்பிட்டு விட்டால் 5 நாட்கள் தீட்டு உண்டு.
அவசியம் தீட்டுக்காரியங்களில் கலந்து கொள்ள நேரிட்டால் மேற்கண்ட நாட்கள் வரை மந்திர செபம் செய்யக்கூடாது.
மந்திர செபம் செய்ய செய்ய நமது கர்மவினைகள் அடியோடு அழிய ஆரம்பிக்கும். மந்திர செபம் 1,00,000 அளவை எட்டும் போது நீங்கள் ஒரு அசாதாரணமான மனிதர் என்பதை உணருவீர்கள். தொடர்ந்து செபம் செய்ய இயலாமல் போவதுமுண்டு. அதற்காக வருந்த வேண்டாம். மீண்டும் தொடர்ந்து செபிக்கவும். தினமும் ஒரு மணி நேரம் செபிப்பவர்களுக்கு அருட்காட்சிகள் காண கிடைக்கும். மகான்கள், முனிவர்கள், சித்தர்கள் இவர்களின் அருளாசி கிட்டும். கர்மவினைகள் தீரும். நிம்மதியான வாழ்வு கிட்டும். “ஓம் சிவ சிவ ஓம்” மந்திரம் ஒரு பாதுகாப்பு கேடயமாக விளங்கும்.
இந்த மந்திர செபத்தில் தக்ஷிணாமூர்த்தி மற்றும் பைரவர் மந்திரங்கள் செபிக்கப்படவேண்டும். அப்போது தான் சிவ வழிபாடு முழுமை பெறும். சிவ வழிபாட்டில் தக்ஷிணாமூர்த்தி மற்றும் பைரவரின் பங்கு பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் ஆதிரை நாயகா போற்றி…!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment