நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
தன் வினைதான் தன்னைச் சுடும். நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் உறுதியாக எதிர்விளைவு ஒன்று உள்ளது. நல்லது செயின் நல்ல விளைவுகள் ஏற்படும். தீமைகளும், பாவங்களும் செயின் அதற்கேற்ற தீய விளைவுகளே வாழ்வில் கிடைக்கும். ஒருவர் செய்யும் பாவங்கள் மட்டுமின்றி, அவருடைய பெற்றோர், மூதாதையர் செய்த பாவ வினைகளும் அவர்களைத் தொடர்ந்து வரும். நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும், தீய செயல்களான தீமையானதைத் திட்டமிடும் சிந்தனை, பிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல், பிறரைத் துன்பத்திற்கு ஆளாக்கும் செயல், செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்தல், தற்பெருமை, சீற்றம், காம வெறி, பேராசை, பெருந்தீனி விரும்பல், பொறாமை, சோம்பல் போன்ற செயல்கள் அனைத்தும் பாவ செயல்களாகக் கருதப்படுகின்றன. இப்படி ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும்.
அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, மேலே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும். சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும்.
உங்களுடைய பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திடும். வாழ்வில் நிறைவு ஏற்படும்.
No comments:
Post a Comment