Wednesday, September 24, 2014

நவராத்திரி உருவான கதையும், கொலுபடிகளின் தத்துவமும்




நவராத்திரி. பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறும் நன்னாள் இது. 
இப்படி நன்மை தரும் நவராத்திரியை எப்படி கொண்டாடுவது? அதன் மகிமை என்ன? என்பதை நாம் இப்போது தெரிந்துக் கொள்ள இருக்கிறோம். நவராத்திரி உருவான கதை ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான். 

நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்தமாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை. எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார். 

அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது. “போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடுவான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள். இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். 

ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினார்கள். 

ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது. கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் உருவான சம்பவம் தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார். “நீ காளியை வணங்கினால் எதிரிகள் காலியாகி விடுவார்கள்.” என்றார் குருதேவர். 

தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா. காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்.” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது. கொலுபடிகளின் தத்துவம் காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம். 

முதல் படி, அதாவது கீழ் படியில் – ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும். இரண்டாம் படியில் – இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும். மூன்றாம் படியில் – மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும். நான்காவது படியில் – நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும். ஐந்தாம் படியில் – ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும். ஆறம் படியில் – ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். ஏழாம் படியில் – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும். எட்டாம் படியில் – தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம். ஒன்பதாம் படியில் – முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.. இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்க வேண்டும். பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக “தேவி பாகவதம்” சொல்கிறது. 

ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள், முப்பெரும் தேவியை குறிப்பதாகும் 3 படிகளும் வைக்கலாம். அல்லது சக்தியின் சக்கரமான 5 படிகளும் வைக்கலாம். சப்தமாதர்களை குறிக்கும் 7 படிகளும் அமைக்கலாம். நவகிரகங்களை குறிக்கும் 9 படியும் வைக்கலாம். ஆக, கொலு படிகள் 3,5,7,9 போன்ற எண் வரும்படி அமைக்கலாம். பூஜை பாடல்கள் துர்க்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும் சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், திரிசதிதேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற பாடல்களை – ஸ்லோகங்களை படிக்கலாம் அல்லது கேசட்டில் ஒலிக்கவும் செய்யலாம். 

அத்துடன் தினமும் ஒரு சுமங்களி பெண்களுக்காவது விருந்து படைக்க வேண்டும். இயலாதவர்கள் நவதானியங்களால் செய்யும் சுண்டல்களை ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகளுக்கு தர வேண்டும். ஒன்பது நாளில், உங்களுக்கு வசதிப்படும் ஏதாவது ஒரு நாளில் ஒன்பது பெண்களை அழைத்து அவர்களுக்கு உணவு அல்லது இனிப்பு பண்டங்கள் கொடுத்து, மஞ்சல் குங்குமச்சிமிழ், பூ, ரவிக்கை, கண்ணாடி, சீப்பு, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு போன்றவை தர வேண்டும்.

நவராத்திரி பூஜைமுறை



ஒன்பது தினங்களின் பூஜாக்ரமம்

நவராத்திரியில் கல்ப முறைப்படி பூஜை செய்ய இயலாதவர்கள் கீழ்கண்டபடி பூஜையைச் செய்து நற்பயனை அடையவும். நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையான அன்னம், ஒன்பது வகையான புஷ்பம், ஒன்பது வகையான அலங்காரம், எல்லாம் ஒன்பதாக அமைவதுடன் ஒவ்வொரு நாளும் இரண்டு வயது பெண்குழந்தை முதல் முறையே பத்து வயதுப்பெண் குழந்தை வரை ஒவ்வொன்றாகவோ, முதல் நாள் ஒன்று, இரண்டாம் நாள் இரண்டு என்ற முறையாகவோ, குமாரியை பூஜைச் செய்யவும். இதன் பலன் அளவிட்டுக் கூறமுடியாது.

மானஸீக பூஜை

நவராத்திரி ஒன்பது தினங்களிலும் மானஸிகமாக கீழ்கண்ட கீர்த்தனங்களால் பூஜை செய்துக் கொள்ளவும். இவ்விதம் ஒன்பது தினமும் பூஜை செய்து கொள்ளவும். இவ்விதம் ஒன்பது தினமும் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனை செய்தால் அம்பாளின் அனுகிரஹத்தால் சகல சௌபாக்கியத்தையும் காணலாம்.
(தினப்படி 9 நாளும் செய்ய வேண்டியது.)

ராகம் கௌளிபந்து

பல்லவி

ஆயாஹி மாதஸ்த்வம் பூயாஸ்தே பதயுகம்
த்யாயாமி ஹ்ருதி ஸததம் ஆயாஹி
(ஹ்ருதயே தேவீம் ஆவாஹயாமி)

அ. பல்லவி

ச்ரேயாம்ஸி மம ப்ருசம் மாயாமயிதயயா
தேஹி த்வத் பத பக்திம் பாஹி சரணாகதம்! - ஆயாஹி

சரணம்

பஞ்சப்ரம்மாத்க மஞ்சோபரிலஸித
பரமசிவ பர்யங்க ஸ்திதே
ஸஞ்சித நவரத்ந ஸஞ்சய விரசிதம்
சாருஸிம்ஹாஸ நம் ஸ்ரீ ஸ்வீகுரு பரசிவே! - ஆயாஹி
(ஸ்ரீ லலிதாயை மணிமய ஸிம்ஹாஸநம்க ல்பயாமி)

சந்தனம் குங்கும கஸ்தூரி கர்பூர
ஸஹிதேந ஸலிலேந தே பாத்யம்
ஸுந்தர தரவ்யக்த - ரக்தாக்ஷ தே நார்க்யம்
ஸுத்தேந ஆசமனம் ச ஸ்வீகுரு க்ருபயைவ - ஆயாஹி
சீதலம் அதிமதுரம் விஜிதாம்ருதம்
திவ்ய குஸும ஸீவாஸிதமமலம்
சாதகும்பமய கலசஸ்திகம் தோயம்
ஸ்நாநார்த்தம் ஸ்வீகுருதீந பாலன பரே ஆயாஹி
கஞ்சுக ஸஹிதகௌஸீம் பவஸ்த்ரயுகளம்
கனகாசல ஸஞ்சிதம் கமநீயம்
பஞ்சமி மயி தயயாஸங்க்ருஹா ணேதம்
பாவந யக்ஞோப வீதம் பரயா முதா ஆயாஹி

(ஸ்நபயாமி துகூலயுகளம் ஸமர்பயாமி யக்ஞோபவீதம் ஸமர்பயாமி)

ராகம் மத்யமாவதீ: தாளம் : ஆதி

பல்லவி

ஜய ஜய பார்வதி தேவி! சிவே!
ஜயமஹா ராக்ஞி சிவாதி நுதே! ஜய ஜய!

அ. பல்லவி

லயரஹிதே பவ பய விமோ சி நீ! நவ
நத்நா பரணாநி ஸமர்பயாமி முதாஹம் ஜய ஜய!
கஸ்தூரி கநஸாரகுங்கும ம்ருகமத
கமநீய பரிமள கர்தமேந ஸஹிதம்
சாந்தி ப்ரதே வரப்ரசஸ்த மலயஜம்தே
ஸர்வாவயவேஷு விலேபயாமி முதாஹம் ஜய ஜய

ஜாதி கேதகி ஜபா சம்பக வகுளாதி
ஸர்வவர குஸுமை: சர்வரீச சேகரே
பூஜயாமி சரண ராஜீவ யுகளம் மாம்
போஷய ச்ரிதவ்ரஜம் தோஷயகுரு ஸுகம் ஜய ஜய
புஷ்பம் ஸம்ர்பயாமி புஷ்பை: பூஜயாமி
கபிலாக்ருத கந்த குக்குலுமுக தசா
ங்காதி ஸுவாஸிதமதிருசிரம்
விபுலாயதநயனே க்ருபயைவைஸு
தூபம மும்ஸங்க்ருஹாண சிவே ஜய ஜய (தூபம் ஆக்ராபயாமி)
ஸீபா பூப க்ருதைட் ட நீ காதி
ஸுஸ்வாது சித்ராந்ந திவ்யாந்ந பக்ஷ்யாநிச
பாபா ரண்யதவே பநஸாம் ரம்

ஆதி பலாநி ஸர்வாண் யுரரீ குரு ஜய ஜய (நிவேதயாமி)
சாமீகரஸத்ருச வர்ணமதிம்ருதுளம்
கோமளதரமுக்தா சூர்ண ஸஹித மிதம்
தாமரஸ நயநே பூகி பலேந யுதம்
தாம்பூலம் அம்ப க்ருஹாணமுதா ஜய ஜய
ஸ்ரீ லலிதா தேவ்யை நம: தாம்பூலம் ஸமர்பயாமி

ராகம் தன்யாஸி தாளம் : ஆதி

பல்லவி

ஜய ஜய பாரதி தேவி சிவே
ஜய மஹா ராஜ ராஜேஸ்வரி லலிதே ஜய ஜய

அ. பல்லவி

கனகாசல ச்ருங்க வாஸீநி பாலே
கருணா பூர்ண கடாக்ஷ விசாலே ஜய ஜய

சரணம்

பக்தாச்ரித வ்ரஜ பாலிநி கௌரி
பரமேஸ்வரீ பாஹிமாம் கௌமாரி ஜய ஜய
(லலிதாயை நம கற்பூர நீராஞ்ஜநம் ஸமர்பயாமி)

முதல் நாள் மஹேச்வரி பாலா

அரிசி மாவால் பொட்டு வைத்துக் கோலம் போட வேண்டும். 2 வயது பெண் குழந்தைக்கு வாஸனைத் தைலத்தால் நீராடி ஆடை அணிவித்து குமாரிகா, பாலா என்று பூஜித்து சந்தனம் குங்குமம் விளையாட்டுப் பொருள் கொடுத்து மாஹேச்வரியாக வணங்க வேண்டும். வெண் பொங்கல் செய்து நிவேதனம் செய்ய வேண்டும். மல்லிகை வில்வம் முதலியவைகளால் பூஜை செய்ய வேண்டும். பாடத் தெரிந்தவர்கள் தோடிராகக் கீர்த்தனங்களைப் பாடி பழமும் சுண்டலும் விநியோகம் செய்ய வேண்டும். தீக்ஷிதரின் ப்ரதமா வரண கீர்த்தனத்தைப் பாடவும்.

தியான ஸ்லோகம்

குமாரஸ்ய ச சத்வா நீ யாஸ்ருஜத்யபி லீலயா
காதீ நபி ச தேவாரந் தாந் குமாரீம் பூஜயாம்யஹம்

ஸ்தோத்திரம்

அருண கிரண ஜாலை: அஞ்ஜிதாவகாசா
வித்ருத, ஜபவடீகா புஸ்தகா பீதி
ஹஸ்தா இதரகர வராட்யா, புல்ல கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா

தேவ்யாததம் இதம் ஜகத் ஆத்மகத்யா
நிச்சேஷ், தேவகண சக்தி ஸமுகமூர்த்யா
தாம் அம்பிகாம் அகில தேவ மஹர்ஷி பூஜ்யாம்
பக்த்யா நதாஸ்ம விததாது சுபாநிஸாந:

ராகம் - நாத நாமாக்ரியா தாளம் - ஆதி

பல்லவி

ஏ ஹி கௌரி பூஜாம் க்ரஹீதும் ஏஹி கௌரி

அனுபல்லவி

பாஹி ஸததமிஹ தேஹி ஸீமதி மிதி
பாதவி நுத வெங்கடேச்வர
விநுதே ஏஹி கௌரி

சரணம்

மஹிஷ தனுஜ மதபேத நலோலுப
மாநஸதீந தயாபர மூர்தே
முஹுரமிதம் தவ வரபதஸரஸீ
ருஹ மஹ மிஹ ப்ரணமாமி பவாநி
அம்புஜ ஸம்பவ சம்பு விச்வம்பர
சம்பர ஜம்ப மதநமுகஸீர ரிபு
ஸும்ப நிஸும்ப நிபர்ஹிணி மாமிஹ
டிம்ப மவ ஸுகௌஸும்ப வர்ணாம்பரே
புக்தி முக்தி பலநே புவநே பரி
பூர்ண க்ருபே சிவபாமிநி பாலே
பக்தி யுக்த ஜந சித்த விஹாரே
பக்த கோடி பரிபாலந சீலே ஏஹி கௌரி

நாமாவளி

பர்வத ராஜ குமாரி பவானி
பாஹி மதுர மீனாக்ஷி ருத்ராணி
சங்கரி பகவதி பங்கஜ நயநே பாஹி
சிவே லலிதே பாஹி சிவே லலிதே பாஹி
என்று பிரார்த்தனை செய்து முதல் நாள் பூஜையை பூர்த்தி செய்யவும்.

நவராத்திரி பாடல்

நவராத்ரி திருநாளின் சக்தியே
முதல்நாள் இன்று அரசாளும் துர்க்கையே
சிவை நீயே குமரி எனும் தேவியே
திரு சிலைமேனி அலங்கரித்தோம் அன்னையே (நவராத்திரி)

கொலுமேடை அமைத்தோம் வீட்டிலே
அதில் அலைஅலையாய் ஓரொன்பது படிகளே
தெய்வத்திரு கோலங்கள் அணியிலே
இந்தத் திருநாளில் நாங்கள் உன் மடியிலே (நவராத்திரி)

நவநீரால் அபிஷேகம் செய்கிறோம்
நவ நவமான மலர்தூவி தொழுகிறோம்
நவராக இசைபாடி புகழ்கிறோம்
சக்தி சிவையே உன் சேவடியில் வாழ்கிறோம் (நவராத்திரி)

ஓரைந்து பேராற்றல் உன்னிடம்
எங்கள் உயிர்மூலம் ஒளிமூலம் உன்னிடம்
உலகங்கள் இயக்கங்கள் உன்திறம்
ஓம் ஓம் சக்தி தான் எங்கள் மந்திரம் (நவராத்திரி)

2ம் நாள் கௌமாரீ குமாரி

மூன்று வயதுப் பெண், கட்டம் போட்ட கோலம் பூலாங் கிழங்கு, மஞ்சள் கொடுத்து குமாரி என்று அழைத்துப் பூஜை செய்தல் விளையாட்டு பொருள் கல்யாணி ராகக் கீர்த்தனை, த்விதீயாவரணக் கீர்த்தனை பாடவும், முல்லைப்பூ, துளசி மாம்பழம் புளியோதரை வறுவல் இவைகளைப் பயன்படுத்தவும், குமாரிதேவிக்கு ஆடை ஆபரணம் உபசாரம் செய்து துதித்துப் போஜனம் செய்விக்கவும்.

தியான ஸ்லோகம்

சத்வாதிபி திரிமூர்த்திர் யா தைர் ஹி நாதாஸ்வரூபிணி
திரிகாலவ்யாபிநீ சக்திஸ் திரிமூர்த்திம் பூஜயாம் யஹம்

ஸ்தோத்திரம்

யாஸ்ரீ ஸ்வயம் சுக்ருதினாம் பவநேஷு அஷ்டலஷ்மீ
பாபாத்மநாம் க்ருத தியாம் ஹ்ருதே யேஷு புத்தி

ச்ரத்தா ஸதாம் குலஜன ப்ரபவஸ்ய லஜ்ஜா
தாம் த்வாம் நதாஸ்ம பரிபாலய தேவி விச்வம்
யாதேவி ஸ்ர்வ பூதேஷீ விஷ்ணுமாயேதி ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ராகம் பிஹாக் தாளம் ஆதி

பல்லவி

ஆயாஹி கௌரி அத்ரிகுமாரி ஆயாஹி கௌரி

அனுபல்லவி

ஆயதாப் ஜநயநே ஜகதாமதி நாயிகே
வரதே மயி தயயா ஆயாஹிகௌரி

சரணம்

ஸர்வபூத ஹ்ருதி வாஸிநி மாலிநி
ஸர்வபுவந ஸஞ்சாரிணி சூலிநி
ஸர்வ மக்த ஜநவ்ரஜ பரிபாலிநி
ஸர்வ மங்கள தாயிநி க்ருபயா ஆயாஹி

கமல வர ஸத்ருச கரபத யுகளே
காக்ஷிதார்த்த பலதாயிநி ஸகளே
ஸுமசரஸதி சகி சோபநசுரத்ருத
ஸுந்தரதர வர சாமர யுகளே ஆயாஹி
ஸகலபுவந பயமோசன நிபுணே
ஸர்வ கலதநுஜ குலமத ஹரணே
விகஸித கமல ஸமாந வதநே
வெங்கடேச விநுதே ருண கிரணே ஆயாஹி

நவராத்திரி பாடல்

ஹரி ஹரி சோதரி ராஜராஜேஸ்வரி
ஆலய வாசலில் கோலாட்டம் ஆலய வாசலில் கோலாட்டம்
அருள் நவராத்திரி இரண்டாம் நாளில்
துர்க்கையின் வாசலில் கோலாட்டம் துர்க்கையின் வாசலில் கோலாட்டம்
கொலுவிருக்கும் குங்கும வல்லியின்
குழந்தைகள் ஆடும் கோலாட்டம் குழந்தைகள் ஆடும் கோலாட்டம்
கோவில் குடும்பம் எங்கும் மங்கல
மங்கையர் பாடும் கோலாட்டம் மங்கையர் பாடும் கோலாட்டம் (ஹரி ஹரி)

பொட்டு வைத்து கோலம்இட்டு ஆடும் கோலாட்டம் ஆடும் கோலாட்டம்
நவதான்யம் நாம் படைத்து ஆடும் கோலாட்டம் ஆடும் கோலாட்டம்
மாவிலை தோரணம் வாசலில் கட்டி மகிழும் கோலாட்டம் மகிழும் கோலாட்டம்
மகிஷன் தன்னை வெல்லும் துர்க்கையை
வாழ்த்தும் கொண்டாட்டம் வாழ்த்தும் கொண்டாட்டம் (ஹரி ஹரி)

ஸ்ரீ வனதுர்க்கா சூலினி துர்க்கா த்ரிமூர்த்தி சந்நிதி கோலாட்டம்
த்ரிமூர்த்தி சந்நிதி கோலாட்டம்
ஜாத வேதா துர்க்கா சாந்தி போற்றும் கோலாட்டம்
துர்க்கையை போற்றும் கோலாட்டம்
சபரிதுர்க்கா ஜ்வாலா துர்க்கா அபயம் வேண்டும் கோலாட்டம்
அபயம் வேண்டும் கோலாட்டம்
ஸ்ரீவன துர்க்கா தீபதுர்க்கா ஆஸுரிதுர்க்கா உன் கொண்டாட்டம்
ஆஸுரி துர்க்கா உன் கொண்டாட்டம் (ஹரி ஹரி)

மஞ்சளுடன் குங்குமமும் வழங்கும் கோலாட்டம் வழங்கும் கோலாட்டம்
மலர்களுடன் கனி வகைகள் மணக்கும் கோலாட்டம் மணக்கும் கோலாட்டம்
மங்கையர் எல்லாம் சங்கமமாகி திரளும் கோலாட்டம் திரளும் கோலாட்டம்
மனைகள் தோறும் தீபங்கள் ஏற்றி வணங்கும் கொண்டாட்டம் வணங்கும் கொண்டாட்டம்

என்று ப்ரார்த்தனை செய்து 2ம் நாள் பூஜையை பூர்த்தி செய்யவும்.

3ம் நாள் வாராஹி கன்யா கல்யாணி

மலர்கள் உருவத்தில் கோலம் போடவும். சண்பகமெட்டு குங்குமம், முத்து, பவளம், இவைகளே தேவிக்கு ஸமர்ப்பித்துக் கொடுக்கவும். சம்பங்கி, மரு முதலிய வாசனைப் பூக்களால் பூஜிக்கவும். பலாப்பழ நிவேதம் சிறந்தது. வீணை வாத்தியம் காம்போதிராகக் கீர்த்தனை வாசிக்கவும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்துவிநியோகம் த்ருதீயாவரணக் கீர்த்தனை பாடவும்.

தியான ஸ்லோகம்

கல்யாண காரிணி நித்யம் பக்தாநாம் ந்மசஞ்சிதா நிவை
பூ ஐயாமி சதாம் பகத்யா கல்யாணீம் சர்வகாமதாம்

துதி

வைஷ்ணவி த்வம் வராரோஹே த்ராஹிமாம் ச பலாப்ரதே
விஹங்கம குலாதீசவரவாஹன வைபவே
ஏ ஹிவாராஹி மே பூத்யை புரதஸ் சக்ஷú÷ஷாரிஹ
ம்ருகாங்க கலசோத் தம்ஸே ம்ருகாதீச்வர வாஹனே
லஷ்மீ ப்ரதான ஸமயே நவ வித்ருமாபாம்
வித்யா ப்ரதான ஸமயே சரதித்து சுப்ராம்
வித்வேஷி வர்க விஜயேபி தமால நீலாம்
தேவீம் த்ரிலோகஜநநீம் சரணம் ப்ரபத்யே

ராகம் கல்யாணி தாளம் : ரூபகம்

பல்லவி

தேவி மஹா த்ரிபுர ஸுந்தரி ஸததம் ஸுமதிம்
தேஹிமே பவாநி சங்கரி

அனுபல்லவி
ஸ்ரீ வல்லபாதி ஸுரேந்தர பூஜிதே
திவ்யௌக ஸித்தௌõக மாநௌ வந்திதே
லாவண்ய வாரிநிதே ஸகலே சது
ரங்கபலேச்வர்யாதி மங்களதே பரதேவி
காமேச்வர்யாதி நித்யௌக பரிவ்ருதே
காலராத்ர்யா தியுதே சிவ ஸஹிதே
ஸோமேந்த்ர சங்கர தூர்வாஸோ பாஸிதே
ஸுக்த த்ரயேண ப்ரம்மேச ஹரி நுதே தேவி மஹா
த்ரைலோக்ய மோஹந சக்ராதி ராஜித
த்ரிபுர மத்யல ஸத்பிந்து பீடஸ்தே
ஸாலோக ஸாமீப்ய ஸாரூப்ய ஸாயுஜ்ய
ஸம்பத் ப்ரதே ஸர்வஸாக்ஷிணி மாமவ தேவி
பக்தப்ரியே வெங்கடேசநுதே பஞ்ச
பஞ்சிகாலக்ஷிதே பாநுஸமப்ரபே
ரக்தாம் சுகேந விலஸத்களேபரே
ராஜ ராஜேச்வரி ராஜத்க்ருபே பர தேவி

நவராத்திரி பாடல்

சங்கவி சாம்பவி நவ துர்க்கா ஸ்ரீ சண்டிகை பகவதி சிவ துர்க்கா
மகிஷன் தலைமேல் சூலத்துடன்...
நின்று மணிமுடி சூடிய ஜெயதுர்க்கா துர்க்கா (சங்கரி)
மூன்றாம் நாளின் அம்பிகையே அருள்முகிலே பஞ்சாதாட்சரியே
காளிபவானி கொற்றவையே
திருகழல்கள் சரணம் ஓம் சக்தியே (சங்கரி)
அஷ்டகாளியாய் திகழ்பவளே நடம் ஆடும் ஊர்த்துவம் படைத்தவளே
சப்தசதியின் மா காளி...
உன் சந்நிதி அடைந்தேன் மலை நீலி (சங்கரி)

4ம் நாள் மஹாலெஷ்மி ரோஹிணி

அக்ஷதையினால் படிக்கட்டு போலக் கோலம் போடல் கஸ்தூரி மஞ்சள் ரோஜா மொட்டு, பன்னீர் வாசனைத் தைலம் இவைகளால் உபசரிக்கவும், பவளம் முத்துமாலைகள் அணிவிக்கவும். தயிரன்னம் நிவேதனம் பைரவி ராகப் பாடல் கொட்டு வாத்தியம் வாசிக்கவும் ஜாதிப்பூக்களால் பூஜிக்கவும்.

தீக்ஷிதரின் சதுர்த்தாவரணக் கீர்த்தனையைச் சொல்லி பூஜிக்கவும்

தியான ஸ்லோகம்

ரோஹ்யந்தி ச பீஜாநி ப்ராக்ஜ ந்மசஞ்சிதா நிவை
யாதேவி சர்வபூதாநாம் ரோகிணீம் பூஜாயாம்யஹம்

துதி

தேவி ப்ரபந்நார்தி ஹரே ப்ரஸீத ப்ரஸுத மாத ஜகதோ கிலஸ்ய
ப்ரஸீத விச்வேச்வரி பாஹிவிச்வம் த்வம் ஈச்வரிதேவி சராசரஸ்ய
ஆதார பூதா ஜகத த்வமேகா மஹீஸ்வரூபேண
அப்ரம் ஸ்வரூபஸ்திதயார்த்ருத்யை யதஸ்திதாஸி
ஆப்யாயதே க்ருத்ஸ்நம் அலங்க்யவீர்யே

ராகம் ஸெளராஷ்ட்ரம் தாளம் ரூபகம்

ஸீரபூஜித சரணாம்புஜே பரமேச்வரி லலிதே
கருணாம் குருசரணாகதே காமேச்வரி வநிதே ஸீரபூஜிதே
ஸததம் தவ பதஸாரஸம் ஹ்ருதி சிந்திதும் வரதே
நிதராம் மதிம் மமதேஹ்யது திரு மாச்ரித சுகதே ஸுர
வரதா பல ஸரஸீருஹ வதநே மணிஸதநே
புரசாசந விதி கோவிந்த முகஸேவித சரணே
ஸகலாகம விநுதாம்ருத சரிதே சிவஸ ஹிதே
மகரத் வஜ கரபூஜித மணி பாதுகாலஸிதே ஸுர

நவராத்திரி பாடல்

மகாலக்ஷ்மி ஜெய லக்ஷ்மி திருமிகு தேவி
உயர் மங்கலமாம் நவராத்திரி தரிசனச் செல்வி
நாரணியே செந்திருவெ மலரடி போற்றி
இன்று நான்காம் நாள் அரசாளும் திருவடி போற்றி

கஜ லக்ஷ்மி ஆதிலக்ஷ்மி சரணம் சரணம்
சந்தானலக்ஷ்மி தனலக்ஷ்மி சரணம் சரணம்
தனலக்ஷ்மி விஜயலக்ஷ்மி சரணம் சரணம்
வீரலக்ஷ்மி மகாலக்ஷ்மி சரணம் சரணம்

சுமங்கலி நீ பாற்கடலின் அமுதமும் நீயே
அருள் ஸ்வர்ணவல்லி அஷ்டலக்ஷ்மி பார்கவி நீயே
சஞ்சலை நீ சபலை நீ வைணவி நீயே
உன் சந்நிதியோ திருமாலின் நெஞ்சகம் தாயே

மங்கயரை அழைத்து வந்து விருந்து வைத்தோமே
உன்மகள் உன்னை அலங்கரித்து மலரும் தந்தோமே
செந்நிறமாம் ஸ்ரீசூர்ணம் தீட்டிக் கொண்டோமே
ஒரு செந்தாமரை மலர் நிழலில் வாழ்வு கண்டோமே

சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் இசைத்தோம்
மகா தேசிகரின் ஸ்ரீஸ்துதியும் யாவரும் படித்தோம்
மனமிகுந்த சாமந்தி சூடி மகிழ்ந்தோம்
வில்வ மாலை தந்து அம்மா உன்பாதம் பணிந்தோம்

5ம் நாள் வைஷ்ணவி

கடலைமாவால் பக்ஷிகள் போலக் கோலம், பிரௌடா என்று அழைக்கவும் வாஸனைத் திரவ்யம்: தைலம் முதலியவற்றால் உபசரிக்கவும். ஜல்லரி வாத்யம், பந்துவராளி ராகம் பாடித்துதிக்கவும். மஞ்சப் பொங்கல் வடாம் பாயஸம் இவைகளால் உபசரிக்கவும். பஞ்சமாவரணக் கீர்த்தனையைப் பாடி பூஜிக்கவும்.

தியான ஸ்லோகம்

காளி காலயதே சர்வம் ப்ரஹ்மாண்டம் சராசரம்
கல்பாந்த சமயே யாதாம் காளியாம் பூஜாயாம்யஹம்

துதி

த்வம் வைஷ்ணவீ சக்தீ அனந்த வீர்யா
விச்வஸய பீஜம் பரமாஸிமாயா
ஸம்மோ ஹிதம் தேவி ஸமஸ்த
மேதத் வம் வைப்ரஸந்நா புவி முக்தி ஹேது
யாதேவீ ஸர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸமஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம:

ராகம் வஸந்தம் தாளம் ஆதி

பல்லவி

நஹிவாதே க்ருணா நஹிவாதே லலிதே

அனுபல்லவி

மிஹிரா ப்ஜேந்த்ரா ஸஹிதா ஜாதி
ஸஹிதே தாதும் வரம் பரிபாதும் நஹிவா
மாதாத்வம்மே ப்ராதா த்வம் தாதஸத்வம்மே
ஸர்வம் த்வம்மே நஹிவா
நதபாலநத்வம் நஹிவா வதத்வம் ச்ரிதமந்தாரே
ஜகதாதாரே நஹிவா
ஸுவரவிநுதே ஸுந்தரசரிதே வரகரதேச
வெங்கடேச நஹிவா.

நவராத்திர பாடல்

கமல மலரணையில் கனகச்சிலை வடிவில்
திகழும் அன்னையடி கிளியே தேவி லக்ஷ்மியே (கமல)

அருளும் நவராத்திரி ஐந்தாம் நாள் அசுரன்
தூது கேட்டாளடி கிளியே தோற்றம் காண்பாயடி (கமல)

செல்வ மழை பொழிய சிகப்புத்தாமரையில்
திருமகள் வந்தாளடி கிளியே திருவடி சேர்வோமடி (கமல)

சங்க நிதியென்றும் பதும நிதியென்றும் அள்ளித் தருவாளடி
அவளைத் தொழுவோமடி (கமல)

6ம் நாள் இந்திராணி (காளிகா) என்று அழைக்கவும்

பருப்பு மாவால் தேவி நாமத்தால் கோலம் வரையவும். ரத்ன மாலைகள் அணிவிக்கவும் குங்குமப்பூ பாரிஜாதம் விபூதிப்பச்சை செம்பருத்தி முதலிய பூக்களால் பூஜிக்கவும், மிருதங்க வாத்தியத்துடன் நீலாம்பரி ராகம் பாடி ஆராதிக்கவும். மாதுளை ஆரஞ்சு பழம் விநியோகம் தேங்காய்ச் சாதம் நிவேதனம் செய்து துதிக்கவும். சஷ்டமாவரணக் கீர்த்தனையை சொல்லி பூஜிக்கவும்

தியான ஸ்லோகம்

சண்டிகாம் சண்டரூபாம் ச சண்ட முண்ட விநாஸிநீம்
தாம் சண்டபாபஹரிணிம் சண்டிகாம் பூஜயாம்யஹம்

ஸ்தோத்திரம்

தேவி ப்ரஸீத பரிபாலய நோ அரிபீதே :
நித்யம் யதா அஸுர வதாத் அதுநைவஸதய:
பாபாநி ஸர்வஜகதாம் ப்ரசமம்நயாசு
உத்பாத பாகஜநிதாம்ஸ்ச மஹாப ஸர்காந்
ப்ரணதா நாம் ப்ரஸுத த்வம்
தேவி விச்வார்த்தி ஹாரிணி
த்ரைலோக்ய லாஸிநாம் சட்யே
லோகா நாம் வரதா பவ.

ராகம்: ஆநந்தபைரவி தாளம் ரூபகம்

அம்பா மாதி பராசக்தி ஜகதாதாராம் கருணாஸாராம்
அம்போஜாஸந ஸம்பாவ்யாம பர மாநந்தரூபாம் பஜாமி ஸதா அம்பாம்

சிந்தாரத் நக்ருஹத்வாரே ஸுரஸேவிதவைபவ விஸ்தாரே
இந்த்ராண்யாத்யதிநந்த்யாம் ஸ்ரீஜகதீசாதிம் ப்ரணமாமி முதா அம்பாம்

சங்கரி சாம்பவி சைலஸுதே சந்த்ரகாலாதர சம்புயுதே
பங்கஜ லோசநபூஜிதபாவந பாதஸரோருஹே பாலயமாம் அம்பாம்

நவராத்திரி பாடல்

பொன்னான அன்னை ஸ்ரீலக்ஷ்மியே புகழ்பாடி வந்தேன் மகாலக்ஷ்மியே
அன்பான தெய்வம் நீயல்லவோ அலமேலு மங்கைத் தாயல்லவோ (பொன்னான)

அம்மா உன்காட்சி நவமங்கலம் ஆறாம் நாள் மேடை ஷர்பாசனம்
பூமேனி கோலம் ஸ்ரீ சண்டிகா பொருள்யாவும் தருகின்ற சாகம்பரி நீ (பொன்னான)

நவரத்ன மாலை அலங்காரமே நவதான்யம் படைத்து அபிஷேகம்
நவநாமம் கூறும் என்பாடலே நவசக்தி பீடம் தான் உன் வாசலே (பொன்னான)

கல்லார்கள் என்ன கற்றோர் என்ன நல்லோர்கள் என்ன தீயோர் என்ன
உள்ளாரைக் கண்டால் ஊர் வாழ்த்துமே உன்னாலதான் மேன்மையெல்லாம் உண்டாகுமே ( பொன்னான)

7ம் நாள் மஹாஸரஸ்வதி ஸுமங்கலீ

மலர்களால் மேடையில் கோலம் போடல், நலுங்கு மஞ்சள் உபசாரம், தாழம்பூ தும்பை இவைகளால் பூஜை புஷ்பராக மாலை அணிவித்தால் பேரீவாத்தியத்துடன் பிலஹரிராக கீர்த்தனை பாடி எலுமிச்சம் பழரஸாந்தம் ஸத்துமா நிவேதனம் செய்து விநியோகிக்கவும். சப்தமாவரணக் கீர்த்தனையை சொல்லி பூஜிக்கவும்

தியான ஸ்லோகம்

அகாரணாத் சமுத்பத்தி: யந்மயை : பரிகீர்த்திகா
யஸ்யாஸ் தாமசுகதாம் தேவீம் சாம்பவீம் புஜயாம்யஹம்

துதி

ச்ரியம்ஸமஸ்தரம்நிகிலா திவாஸாம்
மஹாஸுலக்ஷ்மீம் தரணீ தரானாம்
அநாதிம் ஆதிம் பரமாத்ம ரூபாம்
த்வாம் விச்வயோநிம் சரணம் ப்ரபத்யே
சங்க சக்ர கதா சார்ங்க க்ருஹீத பரமாயுதே
க்ருஹீத வைஷ்ணவீருபே நாராயணி நமோஸ்துதே

ராகம் மதயமாவதி தாளம் ரூபகம்

பல்லவி

சிவகாமேச்வரி சங்கரி த்ரிபுரேச்வரி லலிதே சிவ

அநுபல்லவி

பவவிமோசநநிபுணே ச்ரிதேபரி பாலநசரிதே சிவ

சரணம்

நவகோமள ம்ருதுளாத்புத நளிநாயதநயதே
பவஸாகர பதிதேமயி வரதாபவஸக்ருணே
தபநீயாம்சுக ராஜித தருணாருண காத்ரே
க்ருபயைவஹி பரிபாலய - சபராயதநேத்ரே சிவ
ஸங்கடார்த்திவிநாசிநி - ம்ருதுபாஷிணி ஜகஜ்ஜனநி
வேங்கடேச விநுதாம்ருத - சரிதே சிவஸஹிதே சிவ

நவராத்திரி பாடல்

சரஸ்வதி தாயே கலைமகள் நீயே
அருள் நவராத்திரி ஆண்டருள் வாயே
ஏழாம் நாள் இன்று உன் திருக்காட்சி
இன்னும் இருநாள் உனதருளாட்சி (சரஸ்வதி)

கல்விக்கலைகள் தரும் தாட்சாயிணி
உன் அன்பில் நான்முகன் மகிழும் நாயகி
சண்டன் முண்டன் அசுரரை வென்றாய்
பொன் னெழில் மின்னிடும் கீதமும் தந்தாய் (சரஸ்வதி)

கன்னிப் பூஜையும் சுவாசினிப் பூஜையும்
கருதிப் புரிந்தோம் கனிந்தருள் அம்மா
என்னைப் படைத்தாய் இசையும் படைத்தாய்
இணைத்தாய் தாயே உனைக்கிணை வருமா (சரஸ்வதி)

8ம் நாள் நாரஸிம்மி தருணீ

பத்ம (தாமரை பூ போன்ற) கோலம் கஸ்தூரி பச்சை மஞ்சள் தைலம் இவைகளால் உபசாரம் மரகதப் பச்சை மாலை அணிவித்தல் மருதோன்றிப் பூ ஸம்பங்கி பூக்களால் பூஜை பாலன்னம் நிவேதனம் கும்மியடித்தல் புன்னாகவராளி பாடித்துதித்தல் ஆகியவை முக்கியம்.

அஷ்டமாவரணக் கீர்த்தனையைச் சொல்லி பூஜிக்கவும்.

தியான ஸ்லோகம்

துர்க்கா தராயதி பக்தயாம் சதா துர்க்கார்த்தி நாசி நீ
துர்ஜ்ஞேயா சர்வதேவா நாம் தாம் துர்காம் பூஜயாம்யஹம்

துதி

ரோகாந் அ÷ஷாந் அபஹம்ஸிதுஷ்டா
ருஷ்டாது காமாந் ஸகலாந் அபீஷ்டான்
த்வாம் ஆச்ரிதா நாம் நவிபந் நாராயணாம்
த்வாம் ஆச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ராயந்தி
வித்யாஸு சாஸ்த்ரேஷு விவேகதீபேஷு
ஆத்யேஷு வாக்யேஷு ச காத்வதந்யா
மமத்வ கர்தே அதிமஹாந்த சாரே
விப்ராயமயத்யேகத் அதீவ விச்வம்

8. ராகம் சங்கராபரணம்

ஸ்ரீதேவி ஜயதேவி சிவகாமேச்வரிராக்ஞி
மேதேஹி பதபக்திம் மேருமஹாகிரி நிலயே
காமேச்வர்யா திவ்ருதே கமநீயாம்சுகஸஹிதே
மாமிஹபாலயலலிதே மதுவைரிமுகவிதுநுதே
குங்கும பங்கித தேஹே குருவிந்தமணிகேஹே
பங்கஜ ஸம்பவ விநுதே பாஹி ஸதாசிவ ஸஹிதே
ஸேவாம் கசோமிபதே ஸிம்ஹாஸநேச்வரி தே
ஸ்ரீவெங்கடேநுதே சிவகாமேச்வரஸஹிதே

நவராத்திரி பாடல்

வெள்ளைத் தாமரைப் பூவில் பொருந்திய
தேவியை வாழ்த்துங்கடி நம் தேவியை வாழ்த்துங்கடி
வீணையை ஏந்தும் சரஸ்வதி தாயை
பாடிக் கும்மியடி புகழ்பாடிக் கும்மியடி (வெள்ளை)

நவராத்திரியின் எட்டாம் நாளின்
அம்பிகை பாருங்கடி அருள் அம்பிகை பாருங்கடி
ரத்தவிகனை வென்றவள் மேன்மையை
சொல்லிக் கும்மியடி சீர் சொல்லிக் கும்மியடி (வெள்ளை)

எண்ணும் எழுத்தும் உன்னால் வந்தது
எங்கும் கூறுங்கடி அடி எங்கும் கூறுங்கடி
அன்னை சரஸ்வதி அறிவின் தெய்வம்
ஆடிக்கும்மியடி கொண்டாடிக் கும்மியடி (வெள்ளை)

மாவில் சித்திரக்கோலம் வரைந்து
சுழன்று வாருங்கடி சுற்றி சுழன்று வாருங்கடி
மங்கல நாயகி பொன்னடி சேர்ந்து
மகிழ்ந்து கும்மியடி மனம் மகிழ்ந்து கும்மியடி (வெள்ளை)

9ம் நாள் சமுண்டீ மாதா

வாஸனைப் பொடியால் ஆயுதம் போல கோலம் போடல் கோரோசனை பன்னீர் தைலம் இவைகள் உபசாரம் வைர ஆபரணம் சேர்ப்பித்தல், தாமரை மருக்கொழுந்து இவைகளால் பூஜித்தல் கோலாட்டம் அடித்தல் வஸந்தராகக் கீர்த்தனம் குளாந்நம் செய்து விநியோகம் நவமாவ்ரணக் கீர்த்தனையைச் சொல்லி பூஜிக்கவும்.

தியான ஸ்லோகம்

சுபத்ராணி சபக்தா நாம் குருதே பூஜிதா சதகா
அபத்ரநஸிநீ தேவீம் சுபத்ராம் பூஜயாம்யஹம்

9. ராகம் காம்போதி தாளம் சாப்

ஸ்ரீ மத்ஸிம்மாஸனி தீச்வரி சாம்பவி ஸ்ரீ தேவி சிவ
ஸ்ரீ பார்வதி ஜகந்நாயிகே ஸ்ரீமாதாதிரிபுரேச்வரி பாலய
காமேச்வரஹ்லாத காரிணி ஸ்ரீ பத்மகாநத மத்யஸ்திதே
காமேச்வரி சிவசங்கரி கல்யாணி கமலாஸநி பாலய
மங்கள சுகப்ரதே வெங்கடேச்வரநுதே ஸ்ரீ தேவி தேவி சிவே
ஸ்ரீ பார்வதி ஜகந்நாயிகே ஸ்ரீமாதஸ்திரிபுரேச்வரி பாலய

ஸர்வஸ்வரூபே வர்வேசே ஸர்வ சக்திஸமந்விதே
பயேப்யஸ் த்ராஹிநோதேவி துர்கேதேவி நமோஸ்துதே
ஏதத்தே வதகநம் ஸெளம்யம் லோசநத்ரய பூஷிதம்
பாதுந: ஸர்வபூதேப்ய காத்யாயநி நமோஸ்துதே
என்று பிரார்த்திக்கவும்.

நவராத்திரி பாடல்

நாமகளே சரஸ்வதியே நான்முகனின் நாயகியே
நாடி வந்தோம் சந்நிதியே நம்பி வந்தோம் அம்பிகையே (நாமகளே)

அம்புடன் வில் சங்கு சக்கரம் மணிசூலம் உடையவளே
சும்பன் வதம் புரிந்தவளே சுடர்விழியே மலர்மகளே (நாமகளே)

கௌரி அன்னை மேனியிலே கருவாகி மலர்ந்தவளே
நவராத்திரி ஒன்பதாம் நாள் நலம் கூட்டும் கலைமகளே (நாமகளே)

தாயே நீ அன்பு வைத்தால் பார்முழுதும் எனைப்புகழும்
ஏழிசையும் என்பாட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும் (நாமகளே)

நவராத்திரி நிறைவுநாள் சிவலிங்கத்தை பூஜிக்கும் சிவசக்தி ஐக்யஸ்வரூபிணி

சிவசக்தித் தாயே வருக உன் சீர்பாடித் தொழுதோம் வருக
நவராத்திரி நிறைவானதம்மா
வரும் காலம் நாளும் உனதாகுமே (சிவ சக்தி)

ஸ்ரீ சக்தி மலர்பாதம் போற்றி ஓம் சக்தி மணிப்பாதம் போற்றி
அருள்சக்தி திருப்பாதம் போற்றி சிவ சக்தி பொற்பாதம் போற்றி

சிவலிங்க பூஜை புரிக தெய்வ சன்மார்க்கம் தேடிப் பெருக
உவமைக்கு பொருளேது அம்மா
என் உயிரே உணர்வே உமையன்னையே (சிவசக்தி)

ஒன்றாகப் பூத்தாய் திருவே நன்மை ஒவ்வொன்றும் படைக்கும் கருவே
நல்வாழ்வுடன் உன் பார்வையம்மா
மனம் நாடும்பாடும் ஜெகதீஸ்வரி (சிவ சக்தி)

தெய்வீகத் தாய் உன் காட்சி அன்பின்திறம் பாடும்அருளின் சாட்சி
கண்டார்க்கு கொண்டாட்டம் அம்மா
சிவ கனியே மணியே பரமேஸ்வரி

நவராத்திரி பாடல்

நவராத்திரி என்றதும் மங்கையர் எங்களின்
மனமது தேர்ச்சியை பெற்றதம்மா
கவனமாய்க் கொலுதனை உயர்ந்ததாய் வைத்திட
உள்ளமும் மோகத்தைக் கொண்டதம்மா
படிப்படியாகவே பல வித பொம்மையை
விதவிதமாகவே வைத்தோமம்மா
அடிக்கடி பார்த்தாலும் மனமது சலிக்காமல்
பார்த்தே மனம்களி கொண்டோமம்மா
அந்திவேளைதனில் பட்டாடை கட்டியே
அலங்காரம் முழுவதும் செய்து கொண்டோம்
பக்தியாய்க் குங்கும குப்பியுடன் கூடத்
தையல்கள் பலபேரைக் கூட்டி வந்தோம்
பலவித ரூபத்தில் தேவி கொலுவிலே
பரிவுடன் அமர்ந்திட்ட விந்தையதை நீ
கலைவாணி தேவியே பத்மாக்ஷி லக்ஷ்மியே
பார்வதியே என்று பாடினோமே.
ராகாதி எதிரிகள் மனம் வாடிச் சுண்டிட
சுண்டலை செய்துமே வைத்தோமம்மா
பாங்காய் நீ இன்புறத் தித்திப்பு பக்ஷணம்
என்றதை உனக்குமே தந்தோமம்மா
பக்தராம் எங்களின் ஆர்த்தியைப் போக்கிட
பங்கஜ பாதத்தை நமஸ்கரித்தோம்
முத்தால ஹாரத்தி உந்தனுக்கே சுற்றி
மூன்றான சக்தியை போற்றி நின்றோம்
வந்த பெண் யாவரும் உந்தனின் ரூபமே
என்றுமே மனமதைத் தேற்றிக்கொண்டோமே
சந்தனம் பூசியே மஞ்சளாம் குங்குமம்
வெற்றிலை பாக்கையும் தந்து நின்றோம்
உந்தனின் ராத்திரி ஒன்பது ஒருமிக்க
சந்தோஷமாக சென்றதம்மா
பிந்தியும் நீவர வருஷமும் ஒன்றாகும்
என்றுமே மனம் உன்னை நாடுதம்மா
சந்ததம் நீ உந்தன் சேய்களாம் எங்களை
சொந்தமுடன் காக்க வேண்டுமென்றே
அந்தரங்க பக்தி கொண்டுமே பாடிடும்
சுந்தர வார்த்தையை கேளுமம்மா.

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

ஸ்ரீசரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம

Tuesday, September 23, 2014

பதினெட்டு சித்தர்கள்



சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.
சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.
இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.
அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.
அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே.
அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.
அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ
திருமூலர் - சிதம்பரம்
இராமதேவர் - அழகர்மலை
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
கரூவூரார் - கரூர்
சுந்தரனார் - மதுரை
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக.

மகாளய அமாவாசை வழிபாடு

ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள் மகாளய அமாவாசை என அழைக்கப்படுகின்றது.
புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தத்தமது சந்ததியர்களை காணவருகின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் வரும் இக் காலம் மகாளய பட்ச காலமாக போற்றப்படுகின்றது. (மகா+ஆலயம்=மகாளயம்). எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வீட்டில் காலம் சென்ற மூதாதயரின் ஒருவரது படமேயாயினும் இருக்குமானால் அதன் முன் இக் காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.
அல்லது பழவர்க்கங்களில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர் களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.
மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும். மகாளய பட்ச அமாவாசை வரும் 26-ந்தேதியாகும். அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், "என்றோ ஒரு பாட்டன் மூலம் இன்று வரை நம்குலம்'' என்ற நிலையில் இருந்த நாம் இனி வரும் காலங்களில் நாம் பாட்டன்களாகவே இருக்கும் நிலையும் சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.
கடவுளுக்கு நாம் செய்யும் பூஜையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கினைத்தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்கின்றோம். கடவுளையே நமக்கு அடையாளம் காட்டிய அந்த அன்பு ஜீவிகள் நாம் செய்யும் பூஜையில் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவதில் தெய்வத்திற்கு நிகரான வரம் தருகின்றார்கள். நாம் கடவுளிடம் செலுத்தும் அன்பைப் போல் நமது முன்னோர்களிடமும் செலுத்தினால் கை மேல் பலன் கிட்டும்.
`நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. நாமும் நமது மூதாதயரை எண்ணி பித்ரு பூஜையை செய்வதன் மூலம் மூதாதயரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.
நோயில் இருந்து விடுதலை:
பணம் உள்ளவர்கள் தான் ஆடம்பரத்துக்காக பூஜை செய்கின்றனர். நமக்கு ஏன் இந்த வேலை என யாரும் புறக்கணிக்க வேண்டாம். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.
பிதுர் தேவதைகள்:
நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.
1. நம் பித்ருக்கள் (மண்),
2. புரூரவர் (நீர்),
3. விசுவதேவர் (நெருப்பு),
4. அஸீருத்வர் (காற்று),
5. ஆதித்யர் (ஆகாயம்)
என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன. ஆனால் இëக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது.
இவ்அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழவர்க்கங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதர வற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் வெற்றியாளர்களே!
புனித நீர் ஸ்தலங்கள்:
காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.
காருண்ய பித்ருக்கள்:
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.
இவர்கள் "காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
பலன்கள்:
நீண்ட நாள் கடனாளியா நீங்கள்? இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும். உத்தி யோகம் கிடைக்கும். உத்யோக உயர்வுகள் உண்டாகும். தடையாக இருந்த திருமண வாழ்வு சுகமாக தொடரும். திருமணத் தடை அகலும்.
இல்லறம் இனிக்கும் குழந்தைகள் கல்வியில் உயர்வு பெறுவர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது. கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும்.
சீரான மழை கிடைக்கும். அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். புகழ் பரவும். புன்னகை தங்கும், பொன்நகை அதிகரித்து கிடைக்கும், குடும்ப ஒற்றுமையாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்

மஹாளய அமாவாசையும் நமது ஏழு தலைமுறையும் - அரிதினும் அரிய உண்மைகள்!

ஹாளய அமாவாசை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் சொல்லிகொண்டே போகலாம். பொதுவாகவே அமாவாசை தினத்தை மிகவும் புனிதமாக கருதுவர். ஆகையால் தான் அதற்க்கு 'நிறைந்த நாள்' என்ற பெயரும் கூட உண்டு.

நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகும் எவ்வித குறைகளும் இன்றி நலமுடன் வாழ, இல்லறம் தழைக்க, நமது முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசி மிக மிக அவசியம். அவர்களுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர மத ரீதியிலான சம்பிரதாயங்களை புறக்கணித்துவிட்டு, நீங்கள் என்ன தான் புண்ணிய காரியங்கள் செய்தாலும், கோவில் கோவிலாக சுற்றினாலும் அது பலன் தராது. காரணம், நீங்கள் செய்யும் சிரார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் மற்றும் அவரவர் வழக்கப்படியிலான சம்பிரதாயங்கள் மூலம் தான் அவர்களுக்கு மேல் உலகத்தில் கிடைக்கவேண்டிய உணவும், நீரும் கிடைக்கும். நீங்கள் அவற்றை செய்யாது தவிர்க்கும்போது பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும்.

பலரின் வீடுகளில் வசதியிருந்தும், தகுதியிருந்தும் சுபகாரியத் தடைகள் ஏற்படும் காரணம் இந்த பித்ரு சாபம் தான். 

அப்படிப்பட்டவர்கள், இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கடைசி நேரத்தில் சொன்னா நான் என்ன பண்ணுவேன் என்று எவரும் கலங்க வேண்டியதில்லை. கீழே தரப்பட்டுள்ள முழு கட்டுரையையும் படியுங்கள். உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள் அடுத்த முறை, நன்கு திட்டமிட்டு மனநிறைவோடு செய்யுங்கள். பலன் பெறுங்கள்.


மஹாளயம் என்னும் மகத்தான் நாள் !

இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயச் சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நல்ல நல்ல நிலைக்கு உயர்ந்ததர்க்கு நன்றி சொல்வதற்கும் ஒவ்வொரு அமாவாசை அன்று முன்னோருகளுக்கு (பித்ருக்களுக்கு) வழிபாடு செய்கிறோம்.

பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு உணவு கொடுப்பது போலவும், அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.

மஹாளய பட்ச அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருகின்றனர்.

இந்த நாட்களில் தினமும் அன்னதானம் செய்யவேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் தம் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் புரட்டாசி மாத அமாவாசை அன்றாவது அன்னதானம் செய்யலாம். வசதியிருந்தால் திருவண்ணாமலை போன்ற கோவில்களில் அன்னதானம் செய்யலாம். இதுவும் முடியாவிட்டால் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப் பழங்கள் கொடுக்கலாம்.

பித்ருக்களுக்கு விசேஷ தினம்

பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பொது அமமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.

புரட்டாசி மாதத்தில் சூரியனின் தென்பாகம் நடுப்பக்கம் பூமிக்கும் நேராக நிற்கிறது. அப்போது சந்திரனின் தென்பாகமும் நேராக நிற்கிறது. இந்த தருணமே பித்ருக்களுக்கு விசேஷ தினமாகும்.

7 தலைமுறைகளுக்கு மரபணுக்கள்

மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் 28 அம்சங்கள் தாய், தந்தை உட்கொள்ளும் உணவில் இருந்து உண்டாகிறது. மீதமுள்ள 56 அம்சங்கள் அவனது முன்னோர்கள் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக தந்தையிடம் இருந்து 21 அம்சங்களும், பாட்டனாரிடம் இருந்து 15 அம்சங்களும், முப்பாட்டனாரிடமிருந்து 10 அம்சங்களுமாக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. மீதமுள்ள 10 அம்சங்களில் நான்காவது மூதாதையரிடமிருந்து 6 -ம், ஐந்தாவது மூதாதையரிடமிருந்து 3 -ம், ஆறாவது மூதாதையரிடமிருந்து 1 -ம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன. 7 தலைமுறைக்கு மரபணுக்கள் தொடர்பு உள்ளது.

இதனால் தான் தலைமுறை 7 என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள். இதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும் ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது.

பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து ஆசி வழங்கி மகிழ்கிறார்கள். அன்னதானமும் தீப வழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் அதனால் சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.

சூரியோதய நேரத்தில் அமாவாசை

தர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம். திவசத்தின் பொது இங்கே நாம் கொடுக்கின்ற எல், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது.

சூரிய, சந்திரர்கள் 12 டிகிரிக்குள் ஒருங்கிணையும் நாள் தான் அமாவாசை ஆகும். . 'அமாசோமவாரம்' என்று கூறப்படும் இந்த நேரத்தில் அரசமரத்தை வளம் வருவது நன்மை பயக்கும். அரசமரம் பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன், என்னும் மும்மூர்த்திகளில் சொரூபமாக சிறப்பித்து சொல்வார்கள். மஹாளய அமாவாசையான நாளைய தினம் பித்ருகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி வாழ்க்கையில் உயரலாம்.

Sunday, September 21, 2014

சனி யாரை பாதிப்பதில்லை


'சனி கொடுக்க எவர் தடுப்பார்'
1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.
4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.
6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.
7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை.
8. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.
9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.
10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.
11. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
தீமை தரும் சனி பார்வை
1. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
2. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
3. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.
4. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.
5. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.
6. பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனிக்கு பிடிக்கும்.
7. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.
8. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.
9. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில்¢ ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.
10. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.
11. தாயிக்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.

ஆன்ம விசாரம்

ஆன்மாவை காண முடியாது. ஆனால் உணரலாம். நல்ல தெய்வீக சிந்தனைகள் , பகவத் நாம ஸ்மரணம் சத் சங்கம் பூர்வ புண்யம் எல்லாம் வாய்க்கும் பொழுது ஒருவருக்கு இதைப்பற்றி உணரும் வாய்ப்பு அமையும்.
இதில் அத்வைதம் ஆத்மா ஒன்றே என்று சொல்லும். மற்றவை ஆன்மா பல என்ற நிலயை சொல்லும். இந்த பயிற்ச்சிகளுக்கு இந்த கேள்விகள தேவையில்லை. நாளடைவில் அதுவாக புரிகிற அனுபூதி வாய்க்கும்.
பிராணாயாம்ம் மிக முக்கியமான பயிர்ச்சியாகும்.

சரியான பூரக கும்பக ரேசகங்களை கால அளவுப்படி செய்து வரும் சாதகனுக்கு நல்ல ஆற்றல் சித்திக்கும்.பிராணாயாம்ம் செய்யும் பொழுது மூல பந்தம் செய்வது அவசியம். அபான்னையும் மேலேற்றி பிரான்னை சந்திக்க வைக்கும். இடையறாத பயிற்சியால் சுழுமுனையில் பிராணனை சேர்க்கும் பொழுது பிராணாயாம்ம் சித்தி ஆகும். மித உணவும் சாத்வீக உணவும் அவசியம். காய் கனிகள் கீரை வகைகள் சேர்க்கலாம். பாலும் தயிரும் சேர்ப்பது நலம். இரவில் தயிர் சேர்க்க கூடாது.

ஆன்மா உடலில் தரிக்கும் இடங்கள் முப்பது.இவற்றின் மூலாம் நாம் ஆன்ம பிராபவத்தை உணர முடியும்.

1, கபாலத்தில் பிரம்மரந்தரம்-உள்:ளொளியால் பிரம்ம ஞானம் உதித்து ஸ்தித பிர்க்ஞை நிலையை அடைய செய்வது.உயர்ந்த ஞானத்தின் நிலை இது.

2. சத்யம்-உச்சந்தலைக்கும் புருவ மத்திக்கும் நடுவில் இருப்பது. இது பயிலும் ஸ்தானத்தில் உறைவிடம்

3.ஆக்ஞை-புருவ மத்தி-தேஜஸின் உறைவிடம்.

4.தப:-ஸ்திரதன்மை விளையுமிடம். 3க்கும் 5 க்கும் இடையில்.

5.ஜீவன சக்கிரம்-மூக்கின் மூலஸ்தானம்.கட்டமைந்தெழிலை விளைவிக்கும் ஒஜஸ் உதிக்குமிடம்

6.ஜன:உற்சாகம் உதிக்கும் இடம்.5க்கும் 7க்கும் நடுவில்.

7.விசுத்தி- கண்டம்.தூய்மையின் பிறப்பிடம்

8.மஹ: அச்சமின்மையையும் துணிவையும் தருமிடம்.7க்கும் 9க்கும் நடுவிலிருப்பது.

9.அனாகதம்-இங்கு உள்ளொலி கேட்கப்படும் பொழுது தெய்வ தரிசனகள் நிகழும். பரம் ஆன்ந்த அனுபவத்தின் ஆரம்பம்.இறையின் மீது பற்றை அதிகரிக்க செய்யுமிடம்!

10.ஸ்வ: உடல் அனைத்துக்கும் நலம் விளைவிக்குமிடம்-9க்கும் 11க்கும் இடையில்.

11.மணிபூரகம்-நாபிகமலம்-பொறுமை ஆற்றல் சாமர்த்தியம் தருவது.

12.புவ: நோயற்ற தன்மை சித்திக்கும் இடம். 11க்கும் 13க்கும் நடுப்பட்ட்து.

13.ஸ்வாதிஷ்டானம்-வீர்யதுக்கான இடம்.

14.பூ: சத்வ சுத்தி உண்டாகும் இடம். 13க்கும் 15க்கும் நடுவில்.

15. மூலாதாரம்-குல சஹஸ்ராரம். அகண்ட பிரம்மசர்யம்-ஊர்தவ்ரேதஸ்-வலிமை ஏற்படும்

16.போதம்-மூளையின் மேற்கு பாகத்தில் இருப்பது.இதன் ஒளியால் புத்தி நேர் பாதையில் செல்லும்

17.மேதா-சிறு மூளையில் இருப்பது. விஞ்ஞான நுட்பங்களை அறிய வைப்பது

18.சரஸ்வதி-16ம் 17ம் கூடுமிடம். இது ஒளிரும் பொழுது வாக் வசமாகும்.

19.அமுர்தம்-மூளையில் சுரக்கும் திரவம்

20-ஜோதிஸ்-நெற்றி-வாழ்வில் ஜோதி ஏற்படுவது இதனால்

21 மனம்-இருதயத்தில் உள்ளது

22-சித்தம்-மனத்தின் அகத்தே இருப்பது

23.ஆத்ம ஸ்தானம்-சித்த்த்தினுள் ஆன்ம ஒளி திகழ திகழ ஆன்மா இருதயத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை ஏறி செல்வது

24.திருஷ்டி-கண்ணில் உள்ளது. தெய்வீக பார்வை தருவது.

25.ஸ்ருதி-காதில் உள்ளது-நல்ல தெய்வீக ஒலிகளை கேட்க வைக்கும்

26.பிராணன்-இது ஒளிர்வதால் நீண்ட ஆயுள்

27ஸ்வரம்-நாக்கிலும் கழுத்திலுமுள்ளது. இனிய குரல் வளம் ஏற்படும்.
த்வனியில் கம்பீரமும் பெரும் ஆகர்ஷணமும் சித்திக்கும்.

28.ஸ்பர்சம்-தோலிலுள்ளது.இதன் உள்ளொளியால் தெய்வீக ஸ்பரிசமும் பற்றட்ர தன்மையும் விளங்கும்.

29.அக்னி-வயிற்றில்-சமத்துவ தன்மை எழில் விளங்கும்

30.குண்டலினி-முதுகு தண்டின் கீழ் மூலாதாரத்தில் உள்ளது. மூன்றரை அடி நீளத்தில் பாம்பு போல தன் வாலை கவ்வியபடி துயிலில் இருப்பது.இது விழித்தெழத்தான் பிராணாயாம்ம் மற்ற தீக்ஷிகள் எல்லாம். இது வேலை செய்யும் பொழுது பேரொளியுடன் விளங்க வைக்கும்.

Saturday, September 20, 2014

பிரதோஷ விரதமும், பலன்களும்



சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண் ணியத்தை பெறு கிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

நாள் : தேய்பிறை, வளர்பிறை, திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்

விரதமுறை : 

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதல் இந்த விரதத்தை தொடங்கலாம். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

பிரதோஷ வழிபாடு பலன்:

ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்
திங்கள் சோம பிரதோஷம் - நல்எண்ணம், நல்அருள் தரும்
செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும்
வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:

1. பால் நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் பல வளமும் உண்டாகும்
3. தேன் இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் செல்வம் பெருகும்
6. நெய் முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் நல்ல மக்கட்பேறு கிட்டும்
8. சர்க்கரை எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் சுகவாழ்வு
10. சந்தனம் சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் தெய்வ தரிசனம் கிட்டும்

பலன் : 

கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். பாவங்கள் நீங்கும்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

Friday, September 19, 2014

சென்ற பிறவி ரகசியம்

நான் பிறக்கிறோம்....

எங்கிருந்து வந்தோம் தெரியாது? 

எங்கே போக போகபோகிறோம் அதுவும் தெரியாது.  இடை பட்ட காலத்தில் இது ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் நடிகர்கள்.

யார் பெத்த பொண்ணுக்கோ கணவராக,  யாரோ ஒருவருக்கு மனைவியாக,  பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பனாக, பெற்ற தாய் தந்தையருக்கு மகனாக. மாமனாக, மச்சானாக, சகோதரனாக, சகோதரியாக  இப்படி பல வேடங்களை போடுகிறோம்.

நாடகம் முடிந்ததும் போகிறோம்.  இந்த ரகசியம் அறிந்தது பிரம்மா என்கிறார்கள். அந்த ரகசியத்தை முன் பிறவி என்கிறோம்.

முன் பிறவி ரகசியம் என்பதே, அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, அக்கினி நீருற்றை கடந்தது சென்றால்..கிளியின் உடம்புக்குள் இருக்கும் மந்த்திரவாதி உயிர் மாதிரி, பல்வேறு மர்மங்கள் நிறைந்தது முன் பிறவி ரகசியம்.
இதை அகத்தியர் தீர்த்து வைகைக்காமல் இல்லை.  தன் காலத்திலேயே ஓலை சுவடிகளில் இதை பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார்.

இப்போது பிறவி எடுத்திருக்கும் மனிதர்களில் யாருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே ஓலைகளில் எழுத பட்டு இருக்கிறது. 

இது உண்மையே. 

ஆனால் இதை ஒரு தொழிலாக கொண்டு  பலர் செய்யும்  தகிடு தித்தங்களை பற்றியும், இதை வைத்தே ஏமாற்றி பிழைப்பவர்களை பற்றியும் தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன். 

பொதுவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் கர்ம வினை கிரகம் என்கிற ராகு கேது முக்கியமானவர்கள்.  இதற்கு அடுத்த படியாக  குரு முக்கியமானவர். முதலில் ராகு கேது.

இருப்பது ஒன்பது கிரகங்கள்.  இதில்  ராகு கேது தவிர்த்து,  ஏனைய ஏழு கிரகங்களும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர கிரகங்கள் என்று சொல்லபடுகிறது. 

என்றாலும் இந்த ஏழு கிரகங்களும் தேவர்களே. மீதம் இருக்கும் ராகுவும் கேதுவும் அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள்.  இரக்க குணம் குறைந்தவர்கள், துர்சிந்தனை நிறைந்தவர்கள்.

இவர்கள் 1 . 7 இல் இருந்தால் நாக தோஷம் என்றும்,  5 . 9 இல் இருந்தால் பிரம்மகத்தி தோஷம் என்றும் சொல்ல படுகிறது.

அதாவது முன் பிறவியில் பாம்பு புற்றை உடைத்து,  பாம்புகளை அடித்து கொன்ற பாவம் இந்த பிறவியில் நாக தோஷமாக வருகிறது என்பார்கள்.  இந்த நாக தோஷம் என்பது ஜோடி பாம்புகளை கொன்றவர்களுக்கும், ஜோடி பாம்புகளில் ஒன்றை கொன்றவர்களுக்கும் வருகிறது.

அதனால் தான் திருமண வாழ்க்கை அமைய தடை,  மீறி அமையும் வாழ்க்கையில்  குழப்பம், கணவன் மனைவிக்கு இடையே  கருத்து வேறுபாடுகள்,  பிரிவினை, விவகாரத்துகளையும் தந்து விடுகிறது.

அதே சமயம் 5 . 9 இல் இருக்கும் பொது பிரம்மகத்தி தோஷம் என்று சொல்ல பட்டாலும்,  புத்திர சோகத்தை தருகிறது.  காரணம் குட்டி பாம்புகளை கொன்ற குற்றம்.

இப்பிறவில் குழந்தை பிறப்பில் தாமதம், பிறந்த பிள்ளைகளால் கவலை, பெற்றோரை மதிக்காத துர்குணம் கொண்ட பிள்ளைகள்,  பிறந்த பிள்ளைகள் அகால மரணம் என்று புத்திர சோகத்தில் ஆழ்த்துகிறது.

சரி.... அடுத்த தகவலுக்கு வருவோம்.

என்னதான் ரேகை கொண்டு சொன்னாலும்,  ஜாதகம் கொண்டுதான் பலன் சொல்லபடுகிறது.   ஜோதிட சாஸ்த்திரத்தில் குருவும், சூரியனும் சிவனை குறிக்கும் கிரகங்கள். 

இந்த சூரியனோடும், குருவோடும் சனியோ,  ராகுவோ, கேதுவோ பிறப்பு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால்,  அது ஒரு வகையான பிரம்மகத்தி தோஷம். 

அதாவது... முன் பிறவியில் சிவன் சொத்தை அழித்தவர்கள், சிவனடியார்களை  வதைத்தவர்கள்,  சிவ நிந்தனை செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பிறவியில் பல துன்பங்களை சந்திக்க வேண்டி வருமாம்.

மேலும் இந்த பிறவி தொடர்பாக ஒரு தகவலும் உண்டு.

உதாரணமாக பரணி  நட்சத்திரத்தில் ஒருவர் பிறப்பதாக வைத்து கொள்வோம்.   அவரின் ஆரம்ப திசை சுக்கிர திசையாக அமையும்.  சுக்கிர திசை என்பது ௨௦ வருடம் கொண்டது. 

ஆனால் அவர் பிறக்கும் போது இருப்பு  திசையாக  5 வருடம் 6 வருடம் அல்லது 10 வருடம்  என்று குறைந்த அளவே தசையாக வருகிறது. 

காரணம் என்ன?

முன் பிறவியில் பெற்ற ஜென்மாவில் அவரின் இறுதி காலத்தில் சுக்கிர திசை நடப்பில் இருந்த போது தான் இறந்து போனார்.  சுக்கிர திசையின் மொத்த வருடமான 20 வருடத்தில்,  இறக்கும் போது இருந்த மீதம் என்னவோ, அதையே  இப்பிறவில் மீதமுள்ள திசையாக கொண்டு பிறந்த்திருப்பார் என்பது ஜோதிட ரகசியம்.

நாடி ஜோதிட பிரகாரம் குரு தான் அந்த ஜாதகரை குறிக்கும் கிரகம்.  இப்போது அவர் ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதற்கு முதல் வீட்டில்  சென்ற பிறவியில் குரு இருந்திருப்பார்.  மற்ற கிரகங்கள் மாறாது.

ஒருவர் சென்ற பிறவியில் எந்த குலத்தில் பிறந்தார் என்பதை,  இப்போதைய சந்திரன் இருக்கும் இடத்திற்கு 5 ம் இடமே சொல்லும்.

ஒருவர் மீன ராசியில் பிறந்தால்,  அவர் ராசி படி 5 ம் இடமாக கடகம் வருகிறது,  அந்த வீட்டற்கு உரிய கிரகம் சந்திரன் வருகிறார். 

சந்திரன்  கடல் கடந்த வாணிபத்தை குறிப்பவர்.   அதாவது வியாபாரம் செய்யும் குடும்பம்.   ஆக ஜாதகர் வைசிய குலத்தில் பிறந்திருப்பார்.

அந்த வகையில் கீழ்காணும் வகையில் அட்டவணை அமையும். இது நாடி ஜோதிட விதி.

நீங்கள் பிறந்த ராசிக்கு 5 ம் இடமாக .......

மேஷம்,  தனுசு  - சத்திரிய குலம்.   அதாவது அரச வம்சம், ஜமீன் பரம்பரை, அரச நிர்வாக அதிகாரிகள் போன்ற குலத்தில் பிறந்தவர்.

ரிசபம், கடகம், கும்பம், மீனம், வைசிய குலம்அதாவது... வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.

மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம்  பிராமண குலம்.  அதாவது கோவில் பூஜை  மற்றும் புரோகிதம் செய்யும் குலத்தில் பிறந்தவர்.
கன்னி துலாம்  சூத்திர குலம். 

இங்கே சொல்லப்படும் சூத்திர குலம் என்பது, உழைப்பாளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும்.  அவரின் தாய் தந்தையர் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதும் புலனாகிறது. 

வழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள்

வசி வசி என்று தினம் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும் என்றார்கள் நம் சித்தர்கள். 

வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம் ஆட்டி படைக்கிறது  என்று பார்ப்போம். 

நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது, சிலர் குறுக்கு வழியில் கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.

ஒரு தாய் தன் மகன் மீது அன்பு செலுத்துகிறாள். அந்த அன்புக்கு போட்டியாக மருமகள் என்பவள் வந்து தன்னை உதாசீன படுத்தும்போது அவர்கள் இருவரையும் தன் கட்டுக்குள் கொண்டுவர அவள் கையில் கொண்டு வரும் ஆயுதம்தான் இந்த வசியம்.

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணின் மைந்தருக்கு மாமலையும் கடுகளவாம் என்கிறார் பாரதிதாசன். 

அந்த கடை கண் பார்வை தனக்கு கிடைக்காத போது, அந்த இளைஞனின் கண்ணில் படுவதுதான் இந்த வசியம் என்கிற போர் ஆயுதம்.

ஒரு பெண் தன் கணவன் மீது மாறாத அன்பு வைத்திருக்கிறாள். அவனுக்கு வேறு தொடர்பு ஏற்பட்டு தானும் தன் குடும்பமும் சீரழிக்கப்படும் போது, என்ன விலை கொடுத்தாவது அவனை தன் வழிக்குள் கொண்டுவர அவள் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த வசியம் என்ற A .K .47 .

பங்காளி பழிஎடுப்பான் என்பார்கள். பங்காளியால் மட்டும் அல்ல, மற்ற எதிரிகள் தொல்லையாலும், பாதிக்கபடுகிற பொழுது மனதளவில் பாதிக்க படுகிற போது, அவர்களை அழிக்க தங்கள் கையில் ஏந்துகிற ஒரு வெடிகுண்டு தான் இந்த வசியம்.

தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக  முயற்சியே இந்த வசியம் எனப்படும்.

இதை அத்தனை பேருமே கடைபிடிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அதுபோன்ற குறுக்கு வழிகளை நாடி, அதனால் நன்மையோ அல்லது தீமையோ பெறவேண்டும் என்கிற விதியமைப்பு இருக்கிற நபர்கள் மட்டுமே அந்த பக்கம் போகிறார்கள். 

நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான் வசியம்.

இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம். சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர் வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம், பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று ஆறு வகையாக பிரித்துள்ளனர். 

உலகம், பகைவர் மற்றும் விலங்கு வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும், அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர் வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும் பயன்படுத்தி உள்ளனர். 

வசியத்தை நடைமுறை  வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது 

1 . மந்திரம்
2 . யந்திரம் அல்லது சக்கரம்.
3 . மூலிகை
4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி இவைகளை பற்றி ஆராய்வோம்.

மந்திரம் 

குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே மந்திரம் எனப்படும். 

வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும் அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர எழுத்துகளுக்கு உண்டு. 

நமது சித்தர்களும் நமசிவாய என்ற ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின் ரகசியங்களும் அடங்கி இருந்ததை அறிந்திருந்தார்கள். 

நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள். 

இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும் பயன் படுத்தி உள்ளனர்.

ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது வசியதிற்கான முலமந்திரமாகும். 

இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள் சித்தர்கள். 

கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது.  உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம் இந்திரன்.  

வசிய ஆற்றலைத்தான் இன்றைய  விஞ்ஞானம் மெஸ்மரிசம் என்று குறுப்பிடும். 

எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை படுத்தி படிக்கும் போது நமது உடலில் மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும். இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று குறிப்பிடுவார்கள். 

தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம் தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின் மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது யந்திர முறையாகும். 

இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22 வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால் செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம் அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால் ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.

இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள் பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர். நாம் வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.



இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும். இது ஒரு முறை.

எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும் மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன. இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர முறையாகும். 

தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால் எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும் தராது.

தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின் பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை சிதற விட மாட்டார்கள். 

அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?

ஐயோ பாவம்..முறையாக உருவேற்றபடாத எந்த சக்கரத்திற்கும் சக்தி இல்லை. 

நீங்கள் ஏமாறவும் வேண்டாம், ஏமாற்று காரராகவும் மாற வேண்டாம். நீங்கள் நீங்களாகவே வாழ  முயற்சியுங்கள்.