Saturday, August 30, 2014

ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை




இந்த அறிவுரை நமக்கும் உதவும் .
தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள், உதாசீனப்படுத்தியவர்கள் நரகத்தில் வீழ்வார்கள். சிலர் மரம், செடி, கொடியாவும், சிலர் மிருகமாகவும் பிறப்பார்கள்.
மனிதன் வாழும் காலத்தில் தனது செயல்பாடுகளால் தான் உயர்வோ தாழ்வோ அடைவான். அதுபோல, அவனது வினைகளின் அடிப்படையிலேயே சொர்க்கத்துக்கே, நரகத்துக்கோ செல்ல முடியும்.
வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் இன்ப துன்பங்களைச் சமமாக நினைத்து கடமையைச் செய்பவன், எப்பொழுதும்இன்பமாயிருப்பான்.
எப்படி நல்ல இசையால் மான், பாம்பு ஆகியவையெல்லாம் மயங்குகிறதோ, அதுபோல பணிவாகவும், இனிமையாகவும் பேசுபவன் எல்லோராலும் போற்றப்படுவான்.
பிறரை மதிக்கும் தன்மை, நேர்மை, அறிவு போன்ற நற்குணங்கள் வேலைக்காரர்களின் சேவையைப் போல மறுபிறவியிலும் தொடரும். 
கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்து உலக வாழ்வு என்ற மாயப்பற்றில் இருந்து விடுபடு.
உலகில் பிறந்தால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். அவற்றைக் கண்டு பதட்டப்படாதே, சங்கடப்படாதே, நிறைந்த கடலைப் போல இரு. உனக்கு கிடைத்துள்ள பதவி, பணத்தால் பெருமையோ, அகம்பாவமோ கொள்ளாதே.
பொறுமையாக, அமைதியாக, நடுநிலையாக, @நர்மையாக இரு. நவரத்தினம் போல் ஜொலிப்பாய்.
"
நான் மட்டுமே துன்பப்படுகிறேன், தனிமையில் இருப்பது போல உணர்கிறேன்' என்று உனக்கு மட்டும் ஒரு தனித்துவத்தை வழங்கிக் கொள்ளாதே. உலகில் எல்லாருமே இதே நிலையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்.
எப்படி மழைக்காலத்தில் கருத்த மேகங்களைக் கண்டவுடன் அன்னப்பறவைகள், கொக்குகள் வெளிப்படுகின்றனவோ, அதுபோல் முற்பிறவியில் செய்த நற்செயல்களின் பலன், மறுபிறவியிலும் தானாகத் தொடரும்.
சொந்த முயற்சியால் நாம் அடைந்த பொருள், சொர்க்கத்தில் இருந்து நம் கையில் விழுந்த பழத்துக்கு சமமானது.
பல பெரிய, நல்ல, வல்லமையுள்ள மனிதர்கள், அவர்கள் மறைந்த பிறகும் நம் மனதில் நினைவுகளாக வாழ்கிறார்கள். அவர்களில் நீயும் ஒருவராகும் நிலையில் இருந்து கொள். இருந்தாலும், மறைந்தாலும் உன் பெயர் நிலைத்திருக்க வேண்டும்.
பிறப்பும் இறப்பும் அழுகையுடன் ஆரம்பித்து அழுகையுடன் முடிகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பதெல்லாம் கனவு போல மறைந்து விடுகிறது. இதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்.
கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதே. வருங்காலம் பற்றி திட்டமிட்டும் பயனில்லை. நிகழ்காலத்தில் நல்லதைச் செய், வாழ்ந்து காட்டு. அதுவே நிஜம்.
வாழ்க்கையில் நடப்பவற்றைக் கண்டு பயப்படுபவனுக்கு நிம்மதியே இருக்காது. இவர்கள் படும் துன்பங்களில் இருந்து மீள விதியோ, பணமோ, உறவினர்களோ உதவியும் செய்வதில்லை. உன் சுயமுயற்சியால் மட்டுமே கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்.

No comments:

Post a Comment