Monday, August 25, 2014

மஹா வாக்கியங்கள்

மஹா வாக்கியங்கள் - வேதாந்த சித்தாந்த விளக்கம்

  1. ஏகம் அத்விதீயம் பிரம்மம்
    ஏகம் - ஒன்றுதுவிதீயம் - இரண்டுஅ-துவிதீயம் - இரண்டல்ல.
    வேதாந்த விளக்கம்: உள்ளது ஒன்றேஇரண்டாவது இல்லை
    சித்தாந்த விளக்கம்பிரம்மம் ஒன்றேஇரண்டாவது ஒன்று இல்லை.
  2. தத்துவமஸி
    தத் - அதுதுவம் - நீஅஸி - ஆகிறாய்.
    வேதாந்த விளக்கம்: நீ(யே) அது.
    சித்தாந்த விளக்கம்: நீ அது ஆகிறாய்.
  3. அஹம் பிரம்மாஸ்மி
    அஹம் - நான்அஸ்மி - ஆகிறேன்.
    வேதாந்த விளக்கம்: நான் பிரம்மம்.
    சித்தாந்த விளக்கம்: நான் பிரம்மம் ஆகிறேன்.
  4. அயம் ஆத்மா பிரம்மம்
    அயம் - அது
    வேதாந்த விளக்கம்: அந்த ஆத்மா பிரம்மம்.
    சித்தாந்த விளக்கம்: அது பிரம்மம்; (இது) ஆத்மா.
  5. பிரக்ஞானம் பிரம்மம்
    பிரக்(ஞை) - உணர்வுஇதை சத் என்று கூறுவர்ஞானம் - அறிவுஇதை சித் என்று கூறுவர்;
    இறைவனுக்கு இவை இரண்டும் பூரணமாக உண்டு.
    வேதாந்த விளக்கம்: உணர்வும் அறிவும் உள்ள ஆன்மா பிரம்மம்.
    சித்தாந்த விளக்கம்: பூரண அறிவும், உணர்வும் உள்ளது பிரம்மம்.

    சத்-சித்-ஆனந்த சொரூபி இறைவன்.
    சடப்பொருள்களுக்கு இவை இரண்டும் சுத்தமாக இல்லை.
    உயிர்களுக்கு இந்த இரண்டும் ஓரளவுக்கு உண்டு (சிற்றறிவு/ சிற்றுணர்வு).
    இறைவனுக்கும் சடத்துக்கும் இடைப்பட்ட இந்த இரண்டும் கெட்டான் நிலையை "இரண்டுமிலித் தனியனேற்கே" என்று திருவாசகமும், "இரண்டலா ஆன்மா" என்று சிவஞானபோதமும் கூறும்.

1 comment: