Saturday, August 23, 2014

துன்பத்தை போக்கும் சிவ மந்திரம்

இதை பக்தியுடன் மனம் தூய்மையுடன் பாராயணம் செய்யவும் 

சம்போ மகாதேவ!
சகலந்தீ சம்போ த்வச்சரித-
ஸரித: கில்பிஷரஜோ
தலந்தீ தீகுல்யாஸ ரணிஷு
பதந்தீ விஜயதாம்
திசந்தீ ஸம்ஸார ப்ரமண
பரிதாபோப சமனம்
வஸந்தீ மச்சேதோ ஹ்ரதபுவி
சிவானந்த லஹரீ - சம்போ மகாதேவ !

பொருள்: 

சம்புவாகிய ஈசனே! உமது சரித்திரம் என்னும் நதியினின்றும் பெருகிவந்து, பாவம் என்னும் புழுதியை அடித்துச் செல்வதாயும், புத்தியெனும் வாய்க்காலின் வழியிலே பாய்ந்து சென்று, இவ்வுலக வாழ்வாகிய பிறவிச் சூழலில் ஏற்படும் பெருந்துன்பங்களைக் போக்கி அமைதியை அளிப்பதாயும், என் உள்ளத்தில் வந்து தேங்கி நிற்பதாயும் உள்ள சிவானந்த வெள்ளம் எப்போதும் வெற்றியுடன் விளங்குவதாக!

No comments:

Post a Comment