Monday, August 25, 2014

மஹாசிவ ராத்திரி விரதம் ஏன் இருக்க வேண்டும்?

சதாசிவன் என்ற ஆதி சிவன் ஓய்வெடுக்கும் ஒரு முகூர்த்த நேரத்தை(90 நிமிடங்கள்) சிவராத்திரி என்பார்கள்;அந்த நேரத்தில் சதாசிவன் என்ற ஆதி சிவன் தியான நிலையில் இருந்து சமாதி நிலைக்குச் செல்கிறார்;அவ்வாறு செல்லும் போது தமோ குண அதிர்வலைகள் ஈஸ்வர தத்துவத்தை ஏற்றுக் கொள்ளாததால் அதிகமாக பரவிக்கொண்டிருக்கும்;
அந்த தமோ குணம் நம்மைப் பாதிக்காமல் இருக்க,மஹாசிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்;இதன் மூலமாக சதாசிவதத்துவத்தை நமது ஆன்மாவும்,உடலும்,மனமும் அதிகமாக கிரகிக்கும்;

சிவராத்திரியில் மாதாந்திர சிவராத்திரி,மஹாசிவராத்திரி என்று இருவகைகள் உள்ளன.மாதாந்திர சிவராத்திரி வரும் நாளில் இரவில் அண்ணாமலை கிரிவலம் செல்வதால் ஏராளமான புண்ணியங்களைப் பெறலாம்;வெகுவிரைவாக நமது கர்மவினைகள் அழித்துவிட முடியும்;இப்பிறவியோடு சித்தராக விரும்புவோர்/முக்தியடைய விரும்புவோர்/சிவ கணமாக விரும்புவோர் குறைந்தது 36 சிவராத்திரிகளுக்கு அண்ணாமலையில் கிரிவலம் செல்வது அவசியம்.
இனிமேல் இப்படி ஒரு மனிதப்பிறவி எடுத்து,படாத பாடு படவேண்டுமா? என்ற எண்ணம் அடிக்கடி மேலோங்கினால் சிவராத்திரி கிரிவலம் செல்வது அவசியம்.

மஞ்சள் நிற வேட்டி அணிந்து,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்துக் கொண்டு மனதிற்குள் ஓம் அருணாச்சலாய நமஹ என்றும்,ஓம் அண்ணாமலையே போற்றி என்றும் ஜபித்தவாறு அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.தனியாக கிரிவலம் செல்வது அவசியம்.

இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இருந்து மாதசிவராத்திரி அன்று இரவு 10 மணிக்குப் புறப்பட்டு,தேரடி முனீஸ்வரரை வழித்துணைக்கு அழைத்துக் கொண்டு,கிழக்குக்கோபுர வாசலில் நின்று கொண்டு அண்ணாமலையாரிடம் நமது கோரிக்கைகளை வேண்டிக் கொண்டு கிரிவலப் பயணம் செல்ல வேண்டும்.ஒவ்வொரு லிங்கத்திடமும் மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு,ஒவ்வொரு நொடியும் ஓம் அருணாச்சலாய நமஹ என்றும்,ஓம் அண்ணாமலையே போற்றி என்றும் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலத்தை பூதநாராயணர் கோவிலில் மறுநாள் காலை 4.30 முதல் 6 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.பிறகு,கோவிலுக்குள் சென்று அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்.இந்த நாளில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;இக்காலத்தில் மூளை சார்ந்த உழைப்பே பலரது வேலையாக இருக்கிறது;அதனால்,அவர்களும்,பிறரும் சாப்பிட்டப்பின்னரே அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment