பிரிந்தவர்களை இணைக்கும் செவ்வாய்!
வாரத்தில் மூன்றாம் நாள் செவ்வாய். செவ்வாயோ வெறும்வாயோ? என்று சொல்வதுண்டு. அதனால், செவ்வாயன்று சுபவிஷயங்களைச் செய்யத் தயங்குவர். ஆனால், இந்த நாளை மங்களவாரம் என்று ஜோதிடசாஸ்திரம் சிறப்புடன் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையில் முகூர்த்தநாள் குறிப்பதில்லை. ஆனால், கேரளமக்கள் மங்களவாரம் என்று செவ்வாயன்றும் திருமணவைபவம் நடத்துவர். செவ்வாயன்று முருகன், ராகுகாலத்தில் துர்க்கை, காளி,மாரி ஆகியோரை விரும்பி வழிபடுவர். நவக்கிரகத்தில் செவ்வாயை சகோதரகாரகர் என்று குறிப்பிடுவர். இவரை வழிபட்டால் சகோதரர் உறவு பலப்படும். பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர, செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட வேண்டும்.
ஒற்றுமையாய் வாழ என்ன வழி?
சிலநேரங்களில் நன்றாக இருக்கும் குடும்பங்களில் கூட சூறாவளியாக புயல் வீசி விடுவதுண்டு. பல்வேறு பிரச்னைகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலோ, அனுசரணை இல்லாததாலோ குடும்ப அமைதிக்கு பங்கம் வந்து விடுகிறது. கணவன்- மனைவி, பெற்றோர்- பிள்ளைகள் உறவு கூட பாதிக்கப்படுகிறது. இவர்கள் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே என்ற தேவாரப்பாடலை 12 முறை பாராயணம் செய்து வரவேண்டும். விநாயகர், முருகன், சிவன்,பார்வதி ஆகிய நால்வரும் சேர்ந்திருக்கும் சிவகுடும்ப படம் வைத்து இப்பாடலைப் பாடுவது சிறந்த பரிகாரம். செவ்வாய், வெள்ளியில் இவ்வழிபாட்டை செய்யலாம். கோயில்களில் சுவாமி, அம்மன் சந்நிதிகளில் விளக்கேற்றுவதும் குடும்ப ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.
அஞ்சைப்பாடினா பஞ்சா பறந்திடும்!
சிவபெருமானை முழுமுதற்கடவுளாகப் போற்றுபவை பன்னிருதிருமுறைகள். இவை சிவனடியார்களால் பாடப்பட்டவை. இப்பாடல்களில் ஐந்து நூல்களை மட்டும் பஞ்சபுராணம் என்று போற்றுவது மரபு. கோயில்களில் சிவபெருமானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும்போது பன்னிருதிருமுறைகளைப் பாட பொறுமையோ, நேரமோ, மனமோ இல்லாமல் இருந்தால் பஞ்சபுராணத்தையாவது அவசியம் ஓதுவார்கள் ஓதவேண்டும் என்ற விதியை பெரியவர்கள் ஏற்படுத்தினர். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து நூல்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவதே பஞ்சபுராணம் ஓதுதல் ஆகும். ஐந்தெழுத்து மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் அஞ்சுபாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும்எளிதாக அருள்பெறலாம் என்பர்.

No comments:
Post a Comment