உலகின் பல்வேறு சமயங்களிலும் மாந்ரீக அடிப்படையிலான வழிபாட்டு முறை வழக்கில் இருந்துள்ளது; இப்போதும் நடைமுறையில் உள்ளது.
மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப் படுகின்றன.
இத்தகைய வழிபாடுகளில் மந்திர உச்சாடனங்களுடன் மாந்ரீகச் சடங்குகளும் இடம் பெறுகின்றன. ஆக்கல் சக்திகள் தூண்டிவிடப்படுவதன் மூலமாக செயல்கள் நிகழ்ந்து தங்கள் விருப்பங்கள் நிறைவேறு வதால், இவ்வழிபாடு பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் யந்திரங்கள் கிரியா ஊக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
யந்திரங்கள் எனப்படும் சக்கரங்கள் காகிதத்தில் வரையப்பட்டு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைக்கப்பட்டோ, மரம் அல்லது உலோகத்தில் கீறல்களாகச் செதுக்கியோ பயன்படுத்தப்படுகிறது. இச்சக்கரங்கள் தியானத்தின்போது மனதை ஒருநிலைப்படுத்தப் பயன்படுகிறது.
முருக வழிபாட்டில் அறு கோணச் சக்கரம் பயன்படுத் தப்படுகிறது. இச்சக்கரத்தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர்எதிர் திசையில் படியுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு முக்கோணங்களுக்கு நடுவில் அமைந்துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக் கொள்ளப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள உலகின் பல்வேறு சமயங்களிலும் மாந்ரீக அடிப்படையிலான வழிபாட்டு முறை வழக்கில் இருந்துள்ளது; இப்போதும் நடைமுறையில் உள்ளது.
மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப் படுகின்றன.
இத்தகைய வழிபாடுகளில் மந்திர உச்சாடனங்களுடன் மாந்ரகச்சடங்குகளும் இடம் பெறுகின்றன. ஆக்கல் சக்திகள் தூண்டிவிடப்படுவதன் மூலமாக செயல்கள் நிகழ்ந்து தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதால், இவ்வழிபாடு பலராலும் பின்பற்றப்பட்டுவருகிறது.
இதில் யந்திரங்கள் கிரியா ஊக்கிகளாகப்
பயன்படுத்தப்படுகின்றன.
யந்திரங்கள் எனப்படும் சக்கரங்கள் காகிதத்தில் வரையப்பட்டு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைக்கப்பட்டோ, மரம் அல்லது உலோகத்தில் கீறல்களாகச் செதுக்கியோ பயன்படுத்தப்படுகிறது. இச்சக்கரங்கள் தியானத்தின்போது மனதை ஒருநிலைப்படுத்தப் பயன்படுகிறது.
முருக வழிபாட்டில் அறு கோணச் சக்கரம் பயன்படுத் தப்படுகிறது.இச்சக்கரத்தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர்எதிர் திசையில் படியுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு முக்கோணங்களுக்கு நடுவில் அமைந்துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக் கொள்ளப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள தனிவட்ட வளையங்களில்- உள்வட்டத்தில் ஆறு தாமரை இதழ்களும், வெளி வட்டத்தில் பன்னிரண்டு தாமரை இதழ்களும் வரையப்பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி பூபுரம் எனப்படும் மூன்று சம இடைவெளியுடன்- நான்கு பக்கங்களிலும் மூன்று சதுரங்கள் வரையப் பட்டிருக்கும்.
பூபுரம் என்ற வெளிச்சுற்று சதுரச் சுவர்களிலிருந்து தொடங்கி, படிப்படியாக உள்ளடங்கி மனதைக் கட்டுப்படுத்தி, மைய ஈர்ப்புப் புள்ளியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டால், தாம் விரும்புவது எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள "நமசிவாய' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஒட்டி முருகனுக்கு "சரவணபவ' என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
வழிபாட்டு மந்திரத்தின் எழுத்துகளை முறை மாற்றி உச்சரிப்பதன் மூலம் விளைவுகள் வேறுபட்டதாயிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஷடாட்சர மந்திரத்திற்கான யந்திரத்தை அமைக்க குறுக்கும் நெடுக்குமாக ஏழு கோடுகள் வரைந்தால் 36 சிறு கட்டங்கள் கிடைக்கும். அந்தந்த காரியங்களுக்கான வகையில் அந்தக் கட்டங்களில் எழுத்துகளை எழுதி, அவற்றிற்குரிய கோச மந்திரங்களும் குறிக்கப்படும்.
இவை வெவ்வேறு முறைகளிலும் எழுதப்படும். இந்த மந்திரங்களை ஆறு வகையான பணிகளுக்காக மரப் பலகைகளில் எழுதி வைத்து, 1008 முறை உச்சரிப்பதன் மூலம் விரும்பிய பலனைப் பெறலாம் எனப்படுகிறது. வசியத்திற்கு வில்வ மரத்திலும், ஆகர்ஷணத்திற்கு வெண் நாவல் மரத்திலும், மோகனத்திற்கு அலரி மரத்திலும், தம்பனத்திற்கு ஆலமரத்திலும், உச்சாடனத்திற்கு பலா மரத்திலும், மாரணத்திற்கு வில்வ மரத்திலும் எழுதுவதே பலனளிக்கக் கூடியதாம்.
சில மந்திரங்களை பீஜத்தோடும் சிலவற்றை கோசத்தோடும் உச்சரிக்க வேண்டும். தேவை யான பீஜ, கோசங்களைச் சேர்த்து மந்திரங்களை உச்சரிப்பதே பலன் தரும்.
மனனம் செய்பவனை ரட்சிப்பது மந்திரமாகும். மெய்ஞ்ஞானிகள் மந்திரஜபத்தால் செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறார்கள். மந்திரங்களை முறையாக உச்சரிப்பதால் அதற்குரிய தேவதையின் திருவுருவம் சூட்சும வடிவில் உபாசகனின்முன் தோன்றுகிறது. மந்திர உச்சாடனம் செய்வதன் மூலம் சூட்சும சலனங்களை ஏற்படுத்தி விரும்பியவற்றை அடைவதோடு இறைவன் திருவருளையும் பெற முடியும்.