தானங்களில் பல்வேறு தானங்கள் இருந்தாலும் அதில் கோ எனப்படும் பசு தானம் முக்கிய இடம்வகிக்கிறது.இந்த பசு தானத்தை செய்வதன்
மூலம், ஒருவர் செய்த பாவங்களில்இருந்து விமோசனம் கிடைக்கிறது.
பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாககூறப்பட்டுள்ளது.
அந்தவகையில், பசு தானம்முக்கியத்துவம் பெறுகிறது.பசுவை தானம் கொடுப்பவர்,
பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும்ஒரு ஆண்டாக இறந்த பிறகு பலஆயிரம் வருடங்கள்கோ லோகத்தில் கிருஷ்ண
பகவானுடன் சேர்ந்திருப்பார்என்று கூறப்படுகிறது.
பசு தானத்தால் ஒருவர் தனது முன்ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போகவழி செய்கிறார். தான் அறியாமல்செய்த பாவங்களும் விலகுகிறது.கோ தானத்தை பலகாரணங்களுக்காக செய்கிறார்கள்.கோ தானம்என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம்
செய்து செய்யலாம். யாகம்ஆரம்பிக்கும் பொழுதும், சுப
காரியங்கள் வெற்றிகரமாகநடக்கவும், தனது வம்சம் சிறப்புறவிளங்கவும் கோ தானம்செய்யலாம்.
ஒருவர் தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன்
தனக்காக தானே கோ தானம்செய்யலாம்.
ஒரு மனிதன் உயிர்பிரியும் பொழுது அவருக்காகஉக்ராந்தி கோ தானம்
என்று செய்வதுண்டு.ஒருவர் இறந்த 12ம் நாள்
வைதரணி என்ற கடுமையானநாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்யவலியுறுத்தப்பட்டுள்ளது.இதற்கு வைதரணி கோ தானம்என்று பெயர்.
வைதரணி கோதானம் செய்வதால் பசுவின்வாலைப் பிடித்துக்கொண்டு இறந்தவர்நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது.வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம்செய்வது மிகவிசேஷமானதாகும்.
பசுக்களை நன்கு படித்தபண்டிதர்களுக்கும், அதைப்பராமரிக்கக்கூடியசக்தி உள்ளவர்களுக்கும் தானம்செய்ய வேண்டும். அல்லது,ஆலயங்களில் உள்ளகோசாலைகளுக்கு பசுவை தானமாகக் கொடுக்கலாம்.
அவ்வாறு ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம்அந்தப் பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக்கொடுப்பதே நன்மைதரும்.
பெரும்பாலானஆலயங்களுக்கு பசு தானம்தருபவர்கள் வயதான அல்லது பால்கறவை இல்லாத அல்லது கன்று இல்லாதபசுக்களை தானமாக
கொடுத்து விடுகிறார்கள்.பசு தானம் செய்ய எண்ணினால்
நல்ல கன்றுடன் கூடியஆரோக்கியமான பசுவையும்,அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான்நல்லது.
பெரும்பாலானஆலயங்களுக்கு பசு தானம்தருபவர்கள் வயதான அல்லது பால்கறவை இல்லாத அல்லது கன்று இல்லாதபசுக்களை தானமாக
கொடுத்து விடுகிறார்கள்.பசு தானம் செய்ய எண்ணினால்
நல்ல கன்றுடன் கூடியஆரோக்கியமான பசுவையும்,அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான்நல்லது.
No comments:
Post a Comment