சூரியனின் உச்ச வீடாகத் திகழும்
மேஷ ராசி அன்பர்களே!
நீங்கள் செவ்வாயை ஆட்சி
நாயகனாகக் கொண்டவர்கள். அற்ப ஆசைக்கு இடம்
கொடுக்காதவர்கள். ஆனால், எதிலும் சட்டென்று
முன்கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள். வாக்கு
வன்மையும், கொடுத்த வாக்கை நிறைவேற்றும்
மன உறுதியும் படைத்தவர்கள். பூமிக்குரிய செவ்வாய் ராசிநாதனாக உங்களுக்கு இருப்பதால், பூமி மீது உங்களுக்கு
அளவற்ற ஈடுபாடு இருக்கும்.
கடந்த ஆண்டு சனி
பகவானால் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து
இருக்கலாம். தம்பதி இடையே கருத்துவேறுபாடு
உருவாகி பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். பிள்ளைகள் வழியிலும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பீர்கள். இப்படி
கெடுபலன்களை தந்த சனி இந்த
ஆண்டு 8-ம் இடமான அஷ்டமத்தில்
இருக்கிறார். இங்கு அவர் உங்கள்
முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார்.
உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும்
ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர்
செல்லும் நிலை உருவாகும். இவையெல்லாம்
அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்தான்.
ஆனால் இந்த கெடுபலன்கள்
அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள
வேண்டாம். காரணம் ஜூன்12 முதல்
செப்.5 வரை சனிபகவான் வக்ரத்தில்
உள்ளார். அவர் வக்ரத்தில் சிக்கும்
போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார்.
அவருடைய பார்வை பலத்தாலும் நன்மையே
உண்டாகும். குருபகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார்.
இது சிறப்பான நிலை என்று சொல்ல
முடியாது. குரு 4-ல் இருக்கும்போது
மன உளச்சலையும், உறவினர் வகையில் வீண்
பகையையும்
உருவாக்குவார். 6-7-2015ல் குருபகவான் சிம்மத்திற்கு
மாறுகிறார். 5-ம் இடத்தில் குரு
இருக்கும் போது குடும்பத்தில் குதுõகலத்தை கொடுப்பார். திருமணம்,
கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை
நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.
புதிய வழிகளில் வருமானம் வரத் தொடங்கும். பெண்களால்
மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ராகு தற்போது 6-ம்
இடமான கன்னி ராசியில் இருக்கிறார்.
இதனால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில்
நிலவிய குழப்பங்கள் வெகுவாக குறையும். ஒருவர்
மனதை இன்னொருவர் புரிந்து கொள்ளும் நிலை வரும். முயற்சிகளில்
இருந்த தடைகள் அனைத்தும் படிப்படியாக
விலகும். எடுத்த செயலில் வெற்றி
காணலாம். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை
பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.
கேது மீனத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம்
அல்ல. உடல் நலம் சிறிது
பாதிக்கப்படலாம். மொத்தத்தில் எதிர்காலத்தில் எல்லா நன்மைகளும் நமதே
என்று ஆறுதலடையலாம். மேற்கண்ட கிரக நிலைகளின் அடிப்படையில்,
ஆண்டு முழுமைக்குமான விரிவான பலனைக் காணலாம்.
தேவைகள் பூர்த்தி ஆகும்.
சேமிப்பு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக
இருக்கும். செல்வாக்கு மேம்படும். ஜுன்,ஜூலை மாதங்களில்
புதிய இடம், வீடு மனை
வாங்கலாம். வாகன சுகம் கிடைக்கும்.
குடும்பம் வசதிகள் பெருகும். கணவன்-மனைவி இடையே இருந்த
பிணக்கு மறைந்து ஒன்று சேருவர்.
வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள்
வாங்கலாம். மே, ஜூன் மாதங்களில்
மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம்
சுமுக நிலை ஏறபடும். புதிய
உறவினர்களால் உதவி கிடைக்கும். ஜூன்
மாதத்திற்கு பிறகு திருமணம் போன்ற
சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக
அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
விருந்து விழா என சென்று
வரலாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் கல கலப்பு உண்டாகும்.
நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும்.
ஆன்மிக விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தோடு
திருத்தல யாத்திரை சென்று வரும் யோகமுண்டு.
பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அக்கம்பக்கத்தினர் மத்தியில்
செல்வாக்குடன் இருந்து வருவீர்கள்.
தொழில், வியாபாரம்சீரான முன்னேற்றம்
காணலாம். லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.
பழைய கடனில் ஓரளவு அடைபடும்.
தொழில் இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய
தொழில் தொடங்கி வளர்ச்சி காண
வாய்ப்புண்டு. எதிரிகளின் தொல்லை மற்றும் சதி
உங்களிடம் எடுபடாமல் போகும். ஜூன் மாதம்
அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இரும்பு
தொடர்பான வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் வியாபாரத்தில் அதிக அக்கறை கொள்வது
நல்லது. ராகுவால் தொழில் ரீதியான அலைச்சலைத்
தவிர்க்க முடியாது. சிலருக்கு வெளியூரிலேயே தங்கும் நிர்பந்தம் உருவாகும். தீயோர் சேர்க்கையால் அவதிப்படலாம்.
சனிபகவான் ஜூன் முதல் செப்டம்பர்
வரை வக்ர கதியில் சஞ்சரிக்கும்
போது இந்த கெடுபலன்கள் அடியோடு
இல்லாமல் போகும்.
பணியாளர்கள் வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல்
ஏற்படும். அதே நேரம் உழைப்புக்கு
தகுந்த வருவாய் கிடைக்கும். சக
பணியாளர்களிடம் சிறு சிறு கருத்து
மோதல் ஏற்படும். மேல் அதிகாரி களிடம்
அனுசரித்து போகவும். யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்க
வேண்டாம். ஆனால், ஜூன் மாதத்திற்கு
பிறகு நல்ல வளர்ச்சி இருக்கும்.
வேலைப்பளு அடியோடு குறையும். மேல்
அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்துக்
காத்திருந்த கோரிக்கை நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு, சம்பள
உயர்வு போன்றவை கிடைக்கும். படித்துவிட்டு
வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
கலைஞர்கள்மகிழ்ச்சியுடன் காணப்படுவர். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
நவம்பர், டிசம்பரில் சுமாரான நிலை உண்டு.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயல்வீர்கள். தொழில்ரீதியான நீண்ட துõர
பயணம் செல்ல நேரிடும்.
மாணவர்கள்வரும் கல்வி ஆண்டு சிறப்பாக
இருக்கும். நல்ல மதிப்பெண் பெறலாம்.
தேர்வில் வெற்றி கிட்டும். விரும்பிய
பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று
படிக்க வாய்ப்பு கிடைக்கும். நவம்பர்,டிசம்பர் மாதங்களில்
சற்று பின்தங்கியநிலை உருவாகலாம். பெற்றோர் அறிவுரையை ஏற்பது நன்மையளிக்கும்.
விவசாயிகள் அதிக மகசூல் கிடைக்கும்.
நெல், கோதுமை சோளம், மொச்சை.
கரும்பு, எள் பனைத் தொழில்
எந்த காலத்திலும் சிறப்பை தரும். வழக்கு
விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு
போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. மே
மாதத்திற்கு பிறகு புதிய வழக்குகளில்
சிக்க வேண்டாம். திட்டமிட்டபடி நவீன உழவுக்கருவிகள் வாங்கி
விவசாயத்தை மேம்படுத்த முயல்வீர்கள்.
பெண்கள்முன்னேற்றம் காண்பர். புத்தாடை, நகை வாங்கலாம். ஆன்மிக
சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. கணவர்
மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறலாம். அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மே, நவம்பர், டிசம்பர்
மாதங்களில் குடும்ப ஒற்றுமைக்காக சற்று
விட்டுக் கொடுத்து போகவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டவும்.
பரிகாரம்: பத்ரகாளி அம்மனை தரிசனம் செய்வதன்
மூலம் முன்னேற்றம் அதிகரிக்கும். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவுங்கள்.
ஜூன் வரை குருபகவானுக்கு அர்ச்சனை
செய்யுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டை(தஞ்சாவூர் அருகில்),
பட்டமங்கலம் (சிவகங்கை மாவட்டம்) போன்ற ஏதாவது ஒரு
குரு தலத்திற்கு சென்று வாருங்கள். ஏழைக்குழந்தைகள்
படிக்க உதவுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள்.
ரிஷபம் – 2015 புத்தாண்டு ராசிபலன் :
எடுத்த செயலைக் கச்சிதமாக
முடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!
நீங்கள் எதையும் அறிவுபூர்வமாக
சிந்திப்பீர்கள். சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட நீங்கள் ஆடம்பரமாக
வாழ ஆசைப்படுவீர்கள். இந்த ஆண்டு கேது
சாதகமாக நின்று இறை அருளைத்
தரும் நிலையில் உள்ளார். மனதில் ஆன்மிக சிந்தனை
மேலோங்கும். செயல்களில் வெற்றியைத் தருவார். அதேபோல் உங்கள் ஆட்சி
நாயகன் சுக்கிரன் 9-ம் இடத்தில் இருந்து
குடும்பத்தில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்து கொண்டு இருக்கும்
தருணத்தில் இந்த ஆண்டு மலர்கிறது.சனிபகவான் 7-ம் இடமான விருச்சிகத்தில்இருக்கிறார்.
இது சிறப்பான நிலை அல்ல. பொதுவாக
இந்த இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பல்வேறு
பிரச்னைகளை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். தீயோர்
சேர்க்கையால் அவதியுறலாம் என்பது பொதுவான பலன்.
இதைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
சனிபகவான் சாதகமாக இல்லா விட்டாலும்
ஜூன்12 முதல் செப். 5வரை
வக்கிரம் அடைகிறார். அவர் வக்ரத்தில் சிக்கும்
போது கெடுபலனை தரமாட்டார். மாறாக, இந்தக் காலத்தில்
அவர் எண்ணற்ற பல நன்மைகளைச்
செய்வார். குறிப்பாக முயற்சிகளில் வெற்றியைத் தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை
பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.
மனக்குழப்பம் தீர்ந்து தெளிவுடன் செயல்படுவீர்கள். இழுபறியாக நடந்த செயல்களில் கூட
முன்னேற்றம் உண்டாகும். குருபகவான் 3-ம் இடமான கடகத்தில்
உள்ளார். இது சிறப்பான இடம்
என்று சொல்ல முடியாது. எதிர்பார்த்த
பதவி உயர்வு கிடைக்காது. உங்கள்
நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால்
குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம்.
காரணம் குரு சாதகமற்ற நிலையில்
இருந்தாலும், அவரது 5-ம் இடத்தின்
பார்வை மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை
அதிகரித்து சுபநிகழ்ச்சியை நடத்தி வைப்பார். செல்வாக்கு
மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள்
வழியில் நன்மையான செய்தி வந்து சேரும்.
அவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.
7-ம் இடத்துப்பார்வை மூலம் மனதில் உற்சாகம்
பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக
செய்து முடிக்கலாம். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களைப் புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து
சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு
வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
குரு ஜூலை 6ல் வக்கிர
நிவர்த்தி அடைந்து, கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு செல்கிறார்.
அப்போது மன உளச்சலையும், உறவினர்
வகையில் வீண் பகையையும் உருவாக்குவார்.
தற்போது ராகு 5-ம் இடமான
கன்னியில் உள்ளார். அங்கு அவரால் நன்மை
தர இயலாது. அவரால் குடும்பத்தில்
சிற்சில பிரச்னைகள் உருவாகலாம். அதேநேரம் கேது 11-ம் இடமான
மீனத்தில் இருந்து பல்வேறு நன்மைகளைத்
தந்துகொண்டிருக்கிறார். அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சியும்,
காரியத்தில் அனுகூலமும் கிடைக்கும். முயற்சியில் இருந்த தடை நீங்கும்.
அமைதியான நதியில் ஓடும் ஓடம்,
வெள்ளம் வரும் காலத்தில் கூட
தள்ளாடினாலும் தாங்கும் என்ற தன்னம்பிக்கையான நிலை
இருக்கிறது.மேற்கண்ட கிரகங்களின் நிலையில் இருந்து இந்த ஆண்டுக்குரிய
ஒட்டுமொத்த பலனைக் காணலாம்.
ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படும் சிற்சில சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருளாதார வளம் இருந்தாலும், செலவுகளும் அதிகமாக இருக்கும். சிக்கனமாக இருப்பது நன்மை தரும். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். யாருடனும் வீண் விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. ஆனால், ஜூன் மாதத்திற்குப் பிறகு நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறி விடும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படும் சிற்சில சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருளாதார வளம் இருந்தாலும், செலவுகளும் அதிகமாக இருக்கும். சிக்கனமாக இருப்பது நன்மை தரும். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். யாருடனும் வீண் விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. ஆனால், ஜூன் மாதத்திற்குப் பிறகு நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறி விடும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.
குடும்பம்வீட்டில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உருவாகும். ஆனாலும் கணவன்-மனைவி
இடையே கருத்துவேறுபாடு தொடரலாம். விட்டுக் கொடுத்து போவதும், பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதும் நல்லது.
ஜூன் மாதத்திற்கு பிறகு படிப்படியாக முன்னேற்றம்
இருக்கும். சிலர் வசதியான வீட்டிற்கு
குடிபுகுவதற்கு யோகமுண்டாகும். குடியிருக்கும் வீட்டிலேயே தேவையான வசதிகளை ஏற்படுத்திக்
கொள்ளவும் வாய்ப்புண்டு.
தொழில், வியாபாரம்குருவின் பார்வை
பலத்தால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
ஆனால், மறைமுகப்போட்டி போன்ற பிரச்னைகளைச் சந்திக்க
வேண்டிஇருக்கும். அதிக சிரத்தை எடுத்து
உழைக்கும் நிர்பந்தம் உருவாகும். சில சமயங்களில் பண
விரயமும் ஏற்படலாம். யாரையும் நம்பி பணம், முக்கிய
பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இவையெல்லாம் ஜூன் மாதம் வரை
தான். இதன்பின் சனி பகவான் வக்கிரம்
அடைவதால் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
தடைகள் அகலும். ஆகஸ்ட்,செப்டம்பர்
மாதங்களில் தொழில் ரீதியாக வெளியூர்
பயணம் சென்று ஆதாயத்துடன் திரும்புவீர்கள்.
ஆனால் அலைச்சலும் அதிகரிக்கும். பணியாளர்கள்
வேலைப் பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம் என்பதால், மேல் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து போகவும். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரும். ஆனால், குருவின் பார்வை பக்க பலமாக இருப்பதால் எந்த கடுமையான விளைவும் ஏற்பட்டு விடாது. ஜூனுக்குப் பிறகு சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். விண்ணப்பித்த கடனுதவி வந்து சேரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்க முயல்வீர்கள்.
வேலைப் பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம் என்பதால், மேல் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து போகவும். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரும். ஆனால், குருவின் பார்வை பக்க பலமாக இருப்பதால் எந்த கடுமையான விளைவும் ஏற்பட்டு விடாது. ஜூனுக்குப் பிறகு சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். விண்ணப்பித்த கடனுதவி வந்து சேரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்க முயல்வீர்கள்.
கலைஞர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே என்று
கவலைபட வேண்டாம். சில காலம் சிரத்தை
எடுத்து ஒப்பந்தங்களை பெறுங்கள். ஜூனுக்குப் பிறகு புதிய ஒப்பந்தம்
தாராளமாக வரும். ரசிகர்கள் மத்தியில்
நற்பெயர் காப்பாற்றப்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த
பரிசு,பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சக
கலைஞர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும்.
கலைஞர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் ஆண்டின் ஆரம்பம் சுமார்
என்றாலும், ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில்
புகழ், பாராட்டு கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கை
தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மக்கள் நலப்பணிகளில் அக்கறை
காட்டி வருவீர்கள். தலைமையின் சொல்லுக்கு கட்டுப்படுவது நன்மையளிக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு ஊக்கம் அளிக்கும்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில்
சற்று முயற்சி எடுத்து படிக்கவும்.
ஆனாலும், உங்கள் முயற்சிக்கு தகுந்த
பலன்கள் கிடைக்காமல் போகாது. அடுத்த கல்வி
ஆண்டில் முன்னேற்றமான பலனைக் காணலாம். விரும்பிய
பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும்
சிலர் பெறலாம்.ஆசிரியர் வழிகாட்டுதலை
ஏற்று நடப்பது எதிர்கால வளர்ச்சிக்குத்
துணைநிற்கும்.
விவசாயிகள்அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத்
தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பவர்களும் நல்ல
பலனை காணலாம். மே மாதத்திற்கு பிறகு
முன்னேற்றமான பலனை காணலாம். முயற்சி
எடுத்தால் புதிய சொத்துக்களை வாங்கலாம்.
மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல்,
கோதுமை நல்ல மகசூலை கொடுக்கும்.
திட்டமிட்டபடி நவீன உழவுக்கருவிகளை வாங்குவீர்கள்.
நிலம் சம்பந்தமான பிரச்னைக்கு சமரசப் பேச்சு மூலம்
தீர்வு காண்பீர்கள்.
பெண்கள் குடும்ப விஷயங்களில்
விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை
வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம்.
ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரப் பாடல்: அண்ணல் ரகுராமன்
அருள்பதம் கொண்டவனே!விண்ணவர் போற்றும் வீர பராக்கிரமனே!
தண்ணிலும் இனிய தன்மை கொண்டவனே!உன்னிரு பதம் பணிந்தேன் அனுமனே!அஞ்சனை சுதனே! அசுரன் தசமுகன்அஞ்சிட எதிரில் அமர்ந்தவனே!வஞ்சனை சூது இல்லாத நெஞ்சினில்வந்து அமர்ந்திடும் ஆஞ்சநேயா சரணம்!
தண்ணிலும் இனிய தன்மை கொண்டவனே!உன்னிரு பதம் பணிந்தேன் அனுமனே!அஞ்சனை சுதனே! அசுரன் தசமுகன்அஞ்சிட எதிரில் அமர்ந்தவனே!வஞ்சனை சூது இல்லாத நெஞ்சினில்வந்து அமர்ந்திடும் ஆஞ்சநேயா சரணம்!
பரிகாரம்: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பிள்ளையாரையும்,
ஆஞ்சநேயரையும் தினமும் வழிபடுங்கள். பிரதோஷ
காலத்தில் சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள்.
பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்து பசியாற்றுங்கள். நவக்கிரக வழிபாட்டை சனியன்று மேற்கொள்ளுங்கள். ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
குலதெய்வ வழிபாட்டால் பிரச்னை மறையும்.
மிதுனம் – 2015 புத்தாண்டு ராசிபலன் :
புதனை ஆட்சி நாயகனாக
கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
உங்கள் ராசி நாயகன்
புதன் என்பதால் சாதுர்யமாகப் பேசும் திறன் படைத்தவராக
இருப்பீர்கள். புதன் சாதகமாக இருக்கும்
நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது.
எனவே அவர் உங்களை நல்வழியில்
அழைத்து செல்வார். உங்கள் பேச்சாற்றல் மூலம்
எதிலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். திட்டமிட்ட
செயல்பாட்டால் சீரான வளர்ச்சிக்கு வழிவகுப்பீர்கள்.
இந்த ஆண்டு உங்கள் முன்னேற்றத்துக்கு
உறுதுணையாக நிற்கப் போகிறவர் சனிபகவான்
தான். அவர் தற்போது விருச்சிக
ராசியில் இருக்கிறார். பணப்புழக்கத்தையும், செயல்பாட்டில் வெற்றியையும் கொடுப்பார். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் பறந்தோடச்
செய்வார்.
முயற்சியில் இருந்த தடை நீங்கி
செயல் மேன்மையை வழங்குவார். தொழிலில் கடந்த காலத்தில் இருந்த
மந்தநிலை மாறி வளர்ச்சியான போக்கு
தென்படும். மேலும் சனியின் 10-ம்
இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர்
பொருளாதார வளத்தையும், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுப்பார்.குரு உங்கள் ராசிக்கு
2-ம் இடத்தில் இருக்கிறார்.
இது மிகவும் உகந்த
நிலை. எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு
கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும்.
துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். வீட்டுக்குத்
தேவையான அனைத்துப் பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.
அவர்கள் சரண் அடையும் நிலை
ஏற்படும். உங்கள் தலைமையில் சுபநிகழ்ச்சிகள்
நிறைவேறும். சமூக அக்கறை கொண்ட
மனிதராக விளங்குவீர்கள். உங்களால் இயன்ற உதவியைப் பிறருக்குச்
செய்து மகிழ்வீர்கள். அவர் ஜூலை 6-ந்
தேதி வக்ர நிவர்த்தி அடைந்து கடகத்தில் இருந்து
சிம்மத்துக்கு செல்கிறார். இந்த நேரத்தில் அவரால்
நன்மை தர இயலாது. முயற்சிகளில்
தடை ஏற்படும். எதிர்பார்த்த உயர்வு இருக்காது.
மனதில் அவ்வப்போது குழப்பம்
உருவாகலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை
யோசித்து செயல்படுவது நல்லது. நிழல் கிரகமான
ராகு தற்போது கன்னி ராசியில்
இருக்கிறார். இங்கு அவரால் நன்மை
தர இயலாது. அவர் மனைவி,
மக்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை உருவாக்கலாம்.குடும்பத்தில் கருத்துவேறுபாடு, வாக்குவாதம் போன்றவற்றின் மூலம் அமைதி குறையும்.
அதே சமயம், கேது 10-ம்
இடமான மீனத்தில் தற்போது இருந்து வருகிறார்.
இதனால் உஷ்ணம், தோல், தொடர்பான
உபாதையை தரலாம்.
மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி தேவைப்படும்.
ஒவ்வாத உணவுகளை அறவே தவிர்ப்பது
அவசியம். சிலரது வீட்டில் பொருட்கள்
காணாமல் போகலாம். வீட்டில் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
மேற்கண்ட கிரகங்களின் நிலையின் அடிப்படையில், ஆண்டு முழுமைக்குமான விரிவான
பலனை காணலாம்.பொருளாதார வளம்
சிறப்பாக இருக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக
செய்து முடிக்கலாம். அதில் எந்த தடைகள்
வந்தாலும் எளிதில் முறியடிக்கலாம்.
சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்படையும். ஜூன்
மாதத்திற்கு பிறகு குரு இடம்
மாறுவதால் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய செயல்பாடுகளை
குடும்ப பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். செப்டம்பர்,
அக்டோபர் மாதங்களில் மிக மிக கவனமாக
இருக்கவும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம்
எச்சரிக்கை கொள்வது நல்லது. குடும்பம்கணவன்-மனைவிஇடையே ஒற்றுமை சீராக இருக்கும்.
அதே நேரம் ராகு சிறப்பாக
இல்லாததால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை
வாங்கும் யோகம் உண்டு. நவம்பர்,
டிசம்பர் மாதங்களில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
புதுமணத் தம்பதியருக்கு குழந்தைபாக்கியம் உருவாக யோகமுண்டு. திடீர்
வருமானத்தால் மகிழ்ச்சிக்கு ஆளாக வாய்ப்புண்டு. தொலை
துõரத்தில் இருந்து நல்ல
செய்தி தேடி வரும்.
தொழில், வியாபாரம்ஆண்டின் ஆரம்பம்
வளர்ச்சியான காலகட்டமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். தொழில்ரீதியாக
மேற்கொள்ளும் வெளியூர்ப்பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
மே, ஜூன் மாதங்களில் அரசாங்க
வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே
வரவு-செலவு கணக்கை சரியாக
வைத்துக் கொள்ளவும். குருப்பெயர்ச்சிக்கு பிறகு எதிர்பார்த்த வருமானம்
கிடைக்காமல் போகலாம். நவம்பர், டிசம்பர்
மாதங்களில் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை எதிர்பார்த்தபடி கிடைக்கும். போட்டியாளர்களுடன் உறவு காள்ள முனைய வேண்டாம். அனுபவசாலிகளின் அறிவுரையைக் கேட்டுப் பெறுவீர்கள். விரிவாக்க முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பணியாளர்கள்முதல் ஆறு மாதங்கள் வளர்ச்சியான காலகட்டம். வேலையில் ஆர்வம் ஏற்படும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருக்கவும். ஆனாலும் சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர்.
மாதங்களில் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை எதிர்பார்த்தபடி கிடைக்கும். போட்டியாளர்களுடன் உறவு காள்ள முனைய வேண்டாம். அனுபவசாலிகளின் அறிவுரையைக் கேட்டுப் பெறுவீர்கள். விரிவாக்க முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பணியாளர்கள்முதல் ஆறு மாதங்கள் வளர்ச்சியான காலகட்டம். வேலையில் ஆர்வம் ஏற்படும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருக்கவும். ஆனாலும் சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர்.
ஜூன் மாதத்திற்கு பிறகு
வேலையில் பளு அதிகரிக்கும். சிலர்
தாங்கள் வகித்து வந்த கூடுதல்
பொறுப்பை விட வேண்டிய நிலை
ஏற்படும்.. சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். இந்த சமயத்தில் அதிகாரிகளை
அனுசரித்து போகவும். செப்டம்பர் 15க்கு பிறகு போலீஸ்,
ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் பதவி உயர்வு வரும்.
உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைஞர்கள்மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மே, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு,
மரியாதை கூடும். அரசிடம் இருந்து
விருது போன்றவை கிடைக்கும். தொழில்
ரீதியான பயணத்தின் மூலம் சந்தோஷமான அனுபவத்தை
பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்ஆண்டின் ஆரம்பம் நன்றாக இருக்கும்.
இடைக்காலத்தில் முயற்சிக்கும் புதிய பதவிகள் நவம்பர்,
டிசம்பர் மாதங்களில் கிடைக்கும். எதிரி தொல்லை அடியோடு
நீங்கும். மக்கள் மத்தியில் செல்வாக்குடன்
வலம் வருவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பும் சீராக இருக்கும். தலைமையின்
நம்பிக்கைக்கு உரியவராகத்
திகழ்வீர்கள்.
திகழ்வீர்கள்.
மாணவர்கள்இந்த கல்வி ஆண்டில் சிறப்பான
பலனை பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர்.
ஆனால், அடுத்த கல்வி ஆண்டில்
அதிக முயற்சி எடுத்து படிக்க
வேண்டியது இருக்கும். குரு பலமாக இருப்பதால்
உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல்
போகாது. ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்குத் துணை நிற்கும்.
விவசாயிகள்அதிகமாக உழைக்க வேண்டி வரும்.
ஆனால், அதற்கு ஏற்ப வருமானமும்
வந்து விடும். நெல், கோதுமை,
கடலை போன்ற பயிர்களில் நல்ல
மகசூல் கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு
அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத்
தவிர்க்கவும். செப்டம்பர் 15க்கு பிறகு வழக்கு
விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
புதிய சொத்து வாங்கும் முயற்சி
வெற்றி பெறும். மாற்றுப் பயிர்
சாகுபடி எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும்.
பெண்கள்உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளின் செயல் பாட்டால் பெருமை
காணலாம். உறவினரோடு விருந்து விழா என சென்று
வரலாம். குடுபத்தினரிடம் சற்று விட்டுக்கொடுத்து போகவேண்டும்.
செப்டம்பர் 15க்கு பிறகு குடும்பத்தோடு
புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உடல்
நலன் சீராக இருக்கும். சிலர்
வீண் மன உளைச்சலில் இருப்பர்.
தாயாரின் உடல் நலனில் அக்கறை
காட்ட வேண்டி வரும். நவம்பர்,
டிசம்பர் மாதங்களில் வயிறு பிரச்னை வரலாம்,
கவனம். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.
பரிகாரப் பாடல்: பெற்ற தாய்தனை
மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்உற்ற
தேகத்தை உயிர் மறந்தாலும்உயிரை மேவிய
உடல் மறந்தாலும்கற்ற நெஞ்சம் கலை மறந்தாலும்கண்கள்
நின்றிமைப்பது மறந்தாலும்நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
பரிகாரம்: நாகருக்கு பால் அபிஷேகம் செய்யலாம்.
வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மே மாதத்திற்கு பிறகு
குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று
வர தவறாதீர்கள். நவக்கிரக சந்நிதியில் சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி
வழிபடுங்கள். காகத்திற்கு தினமும் உணவிடுவதால் பிரச்னை
குறைந்து நன்மை அதிகரிக்கும். பிரதோஷத்தன்று
நந்தீஸ்வரரை வணங்குங்கள்.
கடகம் – 2015 புத்தாண்டு ராசிபலன்
சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட
கடக ராசி அன்பர்களே!
நீங்கள் வெள்ளை மனம்
கொண்டவர்கள். பிறரின் அன்பான பேச்சுக்கு
அடிபணிந்து விடுவீர்கள். திட்டமிட்டுச் செயல்படும் உங்களுக்கு சனிபகவானும், ராகுவும் உங்களுக்கு பகை கிரகங்களாக இருந்தாலும்
நன்மை தரும் நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது.
ஆண்டுமுழுவதும் இவர்கள் நன்மை தரக்
காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு முக்கிய
கிரகங்களில் சனி, குரு மட்டுமின்றி
கேதுவும் சாதகமற்ற இடத்தில் தான் இருந்தார்.
இதனால் சிற்சில இடர்பாடுகளை
சந்தித்து இருப்பீர்கள். ஆனாலும், இந்த ஆண்டு சனி,
ராகுவின் சாதக நிலையால் நன்மை
அதிகரிக்கும். சனி பகவான் 5-ம்
இடத்தில் இருக்கிறார். 5-ல் சனி இருக்கும்
போது குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளை தருவார்
என்பது பொது விதி. அவர்
திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து
பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் நன்மை
கிடைக்கும். மேலும், அவர் ஜூன்
12ல் வக்ரமாகி, விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு
செல்கிறார்.
செப். 5 வரை வக்ரத்தில்
உள்ளார். அவர் வக்ரத்தில் சிக்கும்
போது கெடுபலனை தரமாட்டார். மாறாக நன்மையே தருவார்.
தடைபட்ட விஷயங்கள் மளமளவென இனிதே நிறைவேறும்.
குரு ஜூலை 5 வரை உங்கள்
ராசியில் இருக்கிறார். இதனால் கலகம் விரோதம்
வரும் என்றும் மந்த நிலை
ஏற்படும் என்றும் கூறப்படுவது உண்டு.
அவரால் வீண் அலைச்சலும், மனதில்
வீண்குழப்பமும் ஏற்படும் அதற்காக கவலைப்பட வேண்டாம்.
குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்துப் பார்வைகளும்
சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு
வரும் இடையூறுகள் அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்திட வழிவகுப்பார். அவர்
6-7-2015ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இதனால் உங்களது ஆற்றல்
மேம்படும். அதுவரை உள்ள மந்த
நிலை மாறும். மனதில் துணிச்சல்
பிறக்கும். வருமானம் பலவழிகளில் வரும். சேமிக்கும் வாய்ப்புண்டாகும்.
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி
மகிழலாம். பொன்மகளால் பொருளும், நிலமும் அள்ளித்தரும் வாய்ப்புண்டு.
பகைவர்களின் சதி எடுபடாமல் அவர்கள்
சரண் அடையும் நிலை ஏற்படும்.
உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அவர்களின் வருகையால்
நன்மையும் ஏற்படும். அக்கம்பக்கத்தினர் மெச்சும் விதத்தில் வாழ்வு நடத்துவீர்கள். நிழல்
கிரகமான ராகு தற்போது 3-ம்
இடத்தில் இருக்கிறார். எண்ணற்ற நன்மைகளை வாரி
வழங்குவார். சிறிய முயற்சியில் கூட
பெரிய பலனைத் தர ராகு
காத்திருக்கிறார். இன்னொரு நிழல் கிரகமான
கேது தற்போது மீனராசியில் இருக்கிறார்.
அங்கு அவரால் முயற்சிகளில் தோல்வியையும்,
பொருள் நஷ்டமும் ஏற்படலாம். தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்த
இடமுண்டு.
மேற்கண்ட கிரக நிலையில் இருந்து
இந்த ஆண்டு முழுமைக்குமான பலன்களைக்
காணலாம். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். விருப்பம்
போல ஆடம்பர பொருட்களை வாங்கி
குவிப்பர்ஜூன் வரை குடும்ப விஷயத்தில்
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீண்
விவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். அதன்பின் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
பொருளாதார வளம் படிப்படியாக அதிகரிக்கும்.
நல்லவர்களின் அறிமுகத்தால் வளர்ச்சி காண்பீர்கள். குடும்பம்பெண்களின் ஆதரவு சிறப்பான முறையில்
அமைந்து இருக்கும். பொன், பொருள் சேர்க்கை
உண்டாகும். மனதில் எப்போதும் மகிழ்ச்சி
நிறைந்திருக்கும். குடும்பத்துடன் விருந்து, விழா என அடிக்கடி
சென்று வருவீர்கள். கணவன்-மனைவி இடையே
அன்பும் நெருக்கமும் நீடிக்கும். ஜூலை 15க்குப் பிறகு
உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்பட
வாய்ப்புண்டு. எனவே அவர்களிடம் அளவாக
பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும்.
ஆண்டின் தொடக்கத்தில் சிலருக்கு
வீடு கட்டும் யோகம் வரும்.
புதிய வாகனம் வாங்கலாம். திருமணம்
போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளிப்
போகலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு
தடைபட்டு வந்த திருமணம், கிரகப்பிரவேசம்
போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பான
முறையில் நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரம்கடினமாக உழைக்க
வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனே கிடைக்கும். யாரையும்
நம்பி பொறுப்பை ஒப்படைத்து விட வேண்டாம். புதிய
தொழில் தற்போது தொடங்க வேண்டாம்.
எதையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து
செயல்படுத்துவது நல்லது. குருவின் பார்வை
சிறப்பாக அமைந்திருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். 12-6-2015முதல் 5-9-2015 வரை வருமானம் அதிகரிக்கும்.
புதிய வியாபார முயற்சியில் சீரான
லாபம் கிடைக்கும்.
அரசாங்க வகையில் எதிர்பார்த்த
அனுகூலம் கிடைக்கும். ஆனால், போட்டியாளர்கள் வகையில்
எப்போதும் கவனம் தேவை. அனுபவசாலிகளின்
வழிகாட்டுதலை செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சி காண
முடியும். பணியாளர்கள்ஆண்டின் தொடக்கம் சுமாராகவே இருக்கும். அதிக வேலைப்பளுவை சுமக்கும்
சூழ்நிலை உருவாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்தும்,
சக ஊழியர்களிடம் பகைக்காமலும் நடந்து கொள்ளவும். ஜூன்
மாதத்திற்கு பிறகு வேலையில் முன்னேற்றம்
காணலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த
கோரிக்கையும் ஓரளவு நிறைவேறும். விரும்பிய
இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு, சம்பள
உயர்வு கிடைக்கும். படித்து விட்டு வேலையின்றி
இருப்பவர்களுக்கு வெளியூரில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கலைஞர்கள் ஜூன் வரை விடா
முயற்சியோடு உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த
விருது, பாராட்டு கிடைக்க தாமதமாகும். ஜூனுக்குப்
பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் தாராளமாக கிடைக்கும். சக கலைஞர்களின் ஆதரவு
நல்ல விதத்தில் அமையும். தொழில் ரீதியான நீண்ட
துõரப் பயணம் மேற்கொள்வீர்கள்.
மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசாங்க வகையிலும்
பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள் அரசியலில் உயர்நிலைக்கு வரலாம். புதிய பதவி
கிடைக்கும். தலைமையின் நெருக்கத்திற்கு உரியவராகத் திகழ்வீர்கள். மக்கள்நலப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவீர்கள். தொண்டர் நலன் குறித்து
ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில்
சற்று முயற்சி எடுத்து படிக்க
வேண்டும். ஆனாலும், குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால்
உங்கள் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். அடுத்த
கல்வி ஆண்டு மிக சிறப்பாக
அமையும். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறலாம்.
விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பும் கிடைக்கும்.
கல்விச் சுற்றுலா மூலம் பயனுள்ள நல்ல
அனுபவம் ஏற்படும்.
விவசாயிகள்மே, ஜூன் மாதங்களில் புதிய
சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.
நவீன விவசாயத்தை பயன்படுத்தி முன்னேறுவர். கரும்பு, எள், பனைத்தொழில் மற்றும்
மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானம்
பெறலாம். கால்நடை வளர்ப்பின் மூலம்
கணிசமான ஆதாயம் கிடைக்கும். நீதிமன்ற
வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்கள்குதுõகல நிலையில் இருப்பர்.
பிள்ளைகளின் செயல்பாட்டைக் கண்டு பெருமிதம் காண்பீர்கள்.
தாய் வழியில் சீதனம் கிடைக்கப்
பெறுவீர்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரின்
அன்பைப் பெறலாம். ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில்
அக்கம் பக்கத்தாரிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும்.
வீட்டினுள் சிற்சில பிரச்னை வரலாம்.
உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு
ஏற்படலாம். வேலை பார்க்கும் பெண்கள்
இடமாற்றம் காணலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். மருத்துவச்
செலவும் செய்ய நேரிடும். பயணத்தின்
போது கவனம் தேவை.
பரிகாரப் பாடல்: விழிக்குத் துணை
திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றாமொழிக்குத் துணை முருகா எனும்
நாமங்கள் முன்பு செய்தபழிக்குத் துணை
அவன் பன்னிருதோளும் பயந்த தனிவழிக்குத் துணை
வடிவேலும்செங்கோடன் மயூரமுமே.
பரிகாரம்: ஆண்டின் தொடக்கத்தில் குரு
சாதகமாக இல்லாததால் தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களில்
குருவுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
துர்க்கை வழிபாடு மேலும் உயர்ந்த
நிலைக்கு கொண்டு செல்லும். ஜூலைக்கு
பிறகு முருகனை தரிசனம் செய்யுங்கள்.
குலதெய்வ வழிபாடு நன்மையை அதிகரிக்கும்.
ப”வுக்கு அகத்திக்கீரை
கொடுப்பது நன்மைக்கு வழி வகுக்கும்.
சிம்மம் – 2015 புத்தாண்டு ராசிபலன்
சூரியனை ஆட்சி நாயகனாக
கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
வாழ்க்கையில் எப்பொழுதும் தைரியம் இழக்கமாட்டீர்கள். திட்டமிட்டுச்
செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள்.
செயல்திறம் மிக்கவரான நீங்கள் தனித்துவம் நிறைந்து
விளங்குவீர்கள். உங்களுக்கு தற்போது சனி பகவான்
4-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான
இடம் என்று சொல்ல முடியாது.
குடும்பத்தில் வீண் விரோதத்தைக் கொடுப்பார்.
கணவன், மனைவியிடையே வாக்குவாதம் அடிக்கடி உருவாகலாம். அவரது 3-ம் இடத்துப்பார்வை
மிகச்சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிக சாதகமான
நிலை. இதனால், வாழ்வில் நல்ல
வளர்ச்சி உண்டாகும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம்
சீராகும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து
சேரும். மேலும் 12-6-2015 முதல் 5-9-2015 வரை சனிபகவான் வக்ரத்தில்
உள்ளார். அவர் வக்ரத்தில் சிக்கும்
போது கெடுபலனை தரமாட்டார். மாறாக நன்மையை வாரி
வழங்குவார். குரு இப்போது உங்கள்
ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார்.
இது சுமாரான நிலையே. இனி
அவரால் நன்மை தர இயலாது.
பல்வேறு தொல்லை உருவாகும். மனதில்
நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.
அலைச்சலும், பொருள் விரயமும் ஏற்படும்.
மனதில் இனம்புரியாத உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். இவர்
6-7-2015ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார்.
இந்த காலத்தில் கலகம் விரோதம் வரும்
என்றும் மந்த நிலை ஏற்படும்
என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு.
குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே
சிற்சில பிரச்னைகள் வரலாம். இவர்கள் இதற்கு
முன் ஒற்றுமையாக இருந்த காலங்களைச் சிந்திக்க
வேண்டும். இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக என்பது போல,
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போய் விட்டால் அப்புறம்
ஏது பிரச்னை! அதே போல் அக்கம்பக்கத்தாரிடமும்
அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள்
காணாமல் போக வாய்ப்பு உண்டு.
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது அவசியம். நிழல்
கிரகமான ராகு தற்போது 2-ம்
இடத்தில் இருக்கிறார். இங்கு அவரால் நன்மை
தர இயலாது. அவர் பணவிரயத்தை
ஏற்படுத்தலாம். மறைமுக எதிரிகளால் பிரச்னையை
உருவாக்கலாம். இன்னொரு நிழல் கிரகமான
கேது தற்போது மீனத்தில் நின்று
சிறு உடல் உபாதைகளை தரலாம்.
மருத்துவச் செலவும் செய்ய நேரிடலாம்.
உணவு விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. மேற்கண்ட கிரக
நிலையில், இந்த ஆண்டு முழுமைக்குமான
விரிவான பலனைக் காணலாம். பொதுவாக
அலைச்சல் அதிகரிக்கும். சிலரது பயணத்தால் செலவு
ஏற்படும் அளவு பயன் எதிர்பார்க்க
இயலாது. உங்களின் முயற்சி கடும் முயற்சியின்
பேரிலேயே நிறைவேறும். மதிப்பு மரியாதை சுமாராக
இருக்கும். மே மாதத்திற்கு பிறகு
சாதகமான நிலை உருவாகும். வீடு,
மனை வாங்க யோகம் கூடி
வரும். திட்டமிட்டபடி புதிய வாகனம் வாங்குவீர்கள்.
ஆனால் அதற்காக பணம் புரட்டுவதில்
சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். உங்கள் மீதான அவப்பெயர்
மறையும். உறவினர் மத்தியில் செல்வாக்கு
அதிகரிக்கும்.குடும்பம்தொடக்கத்தில் தேவைகள் அனைத்தும் நல்லமுறையில்
பூர்த்தியாகும். புத்தாடை, நகை வாங்கி மகிழ்வீர்கள்.
பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். குடும்ப
வளர்ச்சியால் பெருமிதம் கொள்வீர்கள். மே, ஜூன் மாதங்களில்
பெண்களின் ஆதரவு நல்ல முறையில்
கிடைக்கும். பொன், பொருள் சேரும்.
திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள்
சிறப்பாக நடக்கும். மே, நவம்பர், டிசம்பர்
மாதங்களில் மட்டும் சுப நிகழ்ச்சிகள்
குறித்த பேச்சு வார்த்தையை தள்ளி
வைக்கவும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்
வீட்டிலும், உறவினர்கள் வகையிலும் கருத்து வேறுபாடு வரலாம். வருமானத்தில் சுணக்கம் ஏற்படலாம். எதிர்பார்த்ததை விட வருமானம் குறையலாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழல் வரலாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது அவசியம்.
வீட்டிலும், உறவினர்கள் வகையிலும் கருத்து வேறுபாடு வரலாம். வருமானத்தில் சுணக்கம் ஏற்படலாம். எதிர்பார்த்ததை விட வருமானம் குறையலாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழல் வரலாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது அவசியம்.
தொழில், வியாபாரம்அலைச்சலும், பளுவும் இருக்கும்.
ஆனாலும் அதற்குத் தகுந்த பலன் கிடைக்காமல்
போகாது. விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்
பெறுவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். நிர்வாகத்தில்
அனாவசியமான செலவை தவிர்க்கவும். குடும்பப்
பிரச்னையை நிறுவனத்தில் காட்டாமல் உழைத்தால் வெகுவான நற்பலன் காணலாம்.
சந்தையில் போட்டியாளர்களால் அவ்வப்போது பிரச்னை தலைதுõக்கலாம்.
அதை சாதுர்யமாக முறியடிக்க வேண்டும். விரிவாக்கமோ, புதிய வியாபார முயற்சியோ
இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது. தொழில்ரீதியான பயணம்
மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களின்
ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். சக
தொழிலதிபர்கள் மத்தியில் கவுரவம் மிக்கவராகத் திகழ்வீர்கள்.
பணியாளர்கள்முதல் ஆறு மாதங்கள் உங்கள்
உழைப்புக்கு மதிப்பு இருக்கும். பதவி
உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு
நல்ல முறையில் இருக்கும். ஆனால் ஜூன் மாதத்திற்குப்
பிறகு சக ஊழியர்களால் வேலைப்பளு
அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப்
போவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத
வகையில் இட, பணிமாற்றம் ஏற்பட
வாய்ப்புண்டு. விண்ணப்பித்த கடனுதவி கிடைப்பதில் தாமதம்
உருவாகும். எதிர்பார்த்த சலுகையில் ஓரளவே கிடைக்கும். குறிப்பாக
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வேலையில் மிக கவனம் தேவை.
சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுவது நல்லது.
நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள்.
அரசாங்க வகையில் பாராட்டு, விருது
போன்றவை கிடைக்கும். சக கலைஞர்கள் மத்தியில்
செல்வாக்குடன் திகழ்வீர்கள். தொழில்ரீதியான பயணங்களில் இனிய அனுபவம் கிடைக்கப்
பெறுவீர்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் கவுரவத்துடன்
இருப்பர். உயர் பதவி கிடைக்க
வாய்ப்பு உண்டு. நவம்பர், டிசம்பர்
மாதங்களில் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். அந்த
காலத்தில் தீவிர முயற்சியின் பேரில்
சிரமங்களைத் தடுக்கலாம். தொண்டர்களின் ஆதரவு எப்போதும் போல
இருக்கும். தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வருவீர்கள்.
மாணவர்கள்இந்த கல்வி ஆண்டில் சிறப்பான
முன்னேற்றத்தை காண்பீர்கள். நல்ல மதிப்பெண் பெறலாம்.
விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்கும்
வாய்ப்புண்டாகும். அடுத்த கல்வி ஆண்டில்
மிகுந்த சிரத்தை எடுத்து படிக்க
வேண்டியிருக்கும். ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும். நல்ல நண்பர்
களைத் தேர்ந்தெடுத்து பழகுவது அவசியம்.
களைத் தேர்ந்தெடுத்து பழகுவது அவசியம்.
விவசாயிகள் நல்ல வளம் காணலாம்.
அரசாங்க வகையில் சலுகை கிடைக்க
வாய்ப்புண்டு. சிலர் முயற்சி எடுத்து
புதிய சொத்து வாங்குவர். நவீன
முறையில் செயல்படுவதால் விளைச்சல் அதிகரிக்கும். விளைபொருளுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.
கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் உயரும். மே
மாதத்திற்கு பிறகு அதிக செலவு
பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.
வழக்கு விவகாரம் எதிர்பார்த்த படி அமையாது. புதிய
வழக்கில் சிக்க வேண்டாம்.
பெண்கள் முன்னேற்றமான பலன்
காண்பர். பிறந்த வீடு மற்றும்
உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை
மறையும். ஜூன் மாதத்திற்கு பிறகு
ஆடம்பர செலவை தவிர்க்கவும். கணவரிடம்
விட்டுக் கொடுத்துபோகவும். உடல் நலம் நல்ல
நிலைக்கு திரும்பும். மருத்துவச் செலவு குறையும். பிள்ளைகளின்
செயல்பாடு சந்தோஷம் அளிக்கும். பொது, ஆன்மிக நிகழ்ச்சிகளில்
அடிக்கடி பங்கேற்று மகிழ்வீர்கள்.
பரிகாரப் பாடல்: பள்ளியி லோதி வந்ததன்
சிறுவன் வாயிலோ ராயிர நாமம்ஒள்ளிய
வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர்
பொறுப்பில னாகிபிள்ளையைச் சீறி வெகுண்டு துõண் புடைப்பப்பிறையெயிற் றனல்விழிப்
பேழ்வாய்தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை நரசிம்மருக்கு பானகம் படையுங்கள். சனி
திருப்தியற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு எள் தீபம் ஏற்றுங்கள்.
திருநள்ளாறுக்கோ, குச்சனுõருக்கோ(தேனி
மாவட்டம்) சென்று வாருங்கள். துர்க்கைக்கு
எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள்.
குலதெய்வ வழிபாடு பிரச்னைகளை பெருமளவில்
குறைக்க உதவும். பசுவுக்கு அகத்திக்கீரை
அளிப்பதும் நன்மைக்கு வழிவகுக்கும். தினமும் ‹ரிய வழிபாடு செய்யுங்கள்
கன்னி – 2015 புத்தாண்டு ராசிபலன்
புதனை ஆட்சி மற்றும்
உச்சனாக கொண்ட கன்னி ராசி
அன்பர்களே!
விட்டுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவரான நீங்கள்
அனைவரிடமும் கண்ணியத்துடன் நடந்து கொள்வீர்கள். கடந்த
ஆண்டில் சிரமப்பட்டதற்கு காரணம் ஏழரைச் சனி
தான். மேலும் கடந்த ஆண்டு
குருவின் நன்மை ஓரளவு உங்களை
கீழே தடுக்கி விழாமல் தாங்கி
பிடித்தபடி காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் உங்கள்
நட்பு கிரகங்களான செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் சாதகமாக இருக்கும்
நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது.பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.
குடும்பத் தேவை அனைத்தும் நிறைவேறும்.
சனிபகவான் ஏழரை காலத்தை முடித்து,
3-ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னதமான நிலை.
இதுவரையில் இலையுதிர் காலமாக இருந்தது. இந்த
ஆண்டு பொற்காலமாக அமையும்.
சனீஸ்வரர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும்
வெற்றி அடையச் செய்வார். பொருளாதார
வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். சமூகத்தில்
அந்தஸ்து மிக்கவராகத் திகழ்வீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள்.
குரு இப்போது 11-ம் இடத்தில் இருக்கிறார்.
இது உங்களுக்கு மிகவும் உன்னதமான நிலை.
அவர் எண்ணற்ற பல நன்மைகளை
தருவார். அவரால் பொருளாதார வளம்
மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி வாய்ப்பு
கிடைக்கப் பெறுவீர்கள். அதோடு குருவின் 7, 9-ம்
இடத்துப்பார்வைகள் சாதகமாக விழுகிறது. அதன்
மூலமும் நன்மை பன்மடங்கு கிடைக்கும்.
குரு
பகவான் 4-7-2015 அன்று சிம்மத்திற்கு மாறுகிறார்.
இது சிறப்பான இடம் அல்ல. அங்கு
அவர் பொருள் விரயத்தையும், வீண்
அலைச்சலையும் ஏற்படுத்தலாம். ஆடம்பர பொருட்கள் வாங்கத்
துõண்டுவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை
நடத்துவதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகலாம். கணவன்-மனைவி இடையே
கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அதிக
நெருக்கம் வேண்டாம்.
வீடு-மனை வாங்கும்
எண்ணம் நிறைவேறும். நிழல் கிரகமான ராகு
உங்கள் ராசியில் இருக்கிறார். அங்கு அவர் உடல்
உபாதையையும், உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பையும்
தரலாம். இன்னொரு நிழல் கிரகமான
கேது தற்போது மீனத்தில் இருப்பதால்
அலைச்சலையும், மனைவி வகையில் சிற்சில
கருத்து வேறுபாட்டையும் ஏற்படுத்தலாம்.
மேற்கண்ட கிரக நிலைகளின் அடிப்படையில்,
இந்த ஆண்டுக்கான விரிவான பலனை காணலாம்.ஜூன் வரை பொருளாதார
வளம் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பான முறையில்
அமைந்திருக்கும். உங்கள் மீதான அவப்பெயர்
மறைந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு
அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு
சமூகத்தில் மதிப்பு சுமாராகவே இருக்கும்.
வீண் விவாதங்களை தவிர்த்து விட்டுக் கொடுத்து போவது நல்லது. குறிப்பாக
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குடும்பம், நட்பு விஷயத்தில் மிக
கவனமாக இருக்கவும்.குடும்பம்மகிழ்ச்சிக்கு எப்போதும் குறைவிருக்காது.
சீரான பண வசதி
இருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு
காணப்படுகிறது. மே மாதம் வரை
நல்ல காரியங்கள் கைகூடி மங்கலம் பிறக்கும்.
வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
புதிய வீடு, மனை வாங்கும்
யோகம் உண்டாகும் அல்லது தற்போது இருப்பதை
விட வசதியான வீட்டிற்கு குடிபோகலாம்.
திருமணம் போன்ற சுப விஷயங்களில்
ஜூன் மாதத்திற்கு பிறகு தடங்கல் ஏற்படலாம்.
தொழில், வியாபாரம்தொழிலில் இது
ஒரு பொற்காலமாக அமைந்திருக்கும். எந்த தொழிலிலும் அதிக
வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் நல்ல
லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே
ஒற்றுமை சிறந்தோங்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த
அனுகூலம் கிடைக்கும். தொழிலாளர் ஒத்துழைப்பு சீராக அமையும்.
இரும்பு வியாபாரம், தரகு போன்ற தொழில்
நல்லவளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்க
இது நல்ல தருணம். வருமானம்
உயர்வதால் சேமிப்பு அதிகரிக்கும். கேது சாதகமற்ற நிலையில்
இருப்பதால் நிர்வாகச் செலவு அவ்வப்போது அதிகரிக்கலாம்.
இருந்தாலும் பாதிப்பேதும் இருக்காது. பணியாளர்கள்ஆண்டின் தொடக்கத்தில் சீரான வளர்ச்சி நிலையில்
இருப்பர். சாதகமான காற்று உங்கள்
பக்கம் வீசத் தொடங்கும். வேலையில்
ஆர்வமுடன் ஈடுபட்டு வருவீர்கள்.
எதிர்பார்த்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறி வரும். மேல் அதிகாரிகளின்
அனுசரணை நல்ல விதத்தில் கிடைக்கும்.
விருப்பமான இடத்துக்கு மாற்றம் கேட்டுப் பெறுவீர்கள்.
வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை
கிடைக்க வாய்ப்புண்டு. ஜூன் மாதத்திற்கு பிறகு
வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் சம்பள உயர்வுக்கு
தடையேதும் இல்லை. நீங்கள் எதிர்பார்த்த
பதவி உயர்வு கிடைக்காமல் போனாலும்
வருமானம் குறையாது. உங்கள் பொறுப்புகளை யாரையும்
நம்பி ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு
தக்க சமயத்தில் கிடைக்கும்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில்
குருவினால் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவீர்கள்.
தேர்வில் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலருக்கு
வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு
கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டில்
எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் ஜாதகத்தில்
நல்ல தசை, புத்தி நடந்தால்
கல்வியில் சிறந்து விளங்கலாம்.
விவசாயிகள்அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம்
எதையும் செய்ய வேண்டாம். மே
மாதத்திற்கு பிறகு நெல், சோளம்,
கேழ்வரகு ஆகிய தானிய வகைகளில்
அமோக மகசூல் கிடைக்கும். நவீன
உழவுக்கருவிகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவீர்கள்.
வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு உங்கள் பக்கம் அமையும்.
கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.
பெண்கள் குதுõகலமான பலனைக்
காண்பர். கணவரின் அன்பும் அரவணைப்பும்
கிடைக்கும், உங்களின் உழைப்பு மூலம் குடும்பம்
சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியை
காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்பாட்டின் மூலம் பெருமை கிடைக்கும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீண் செலவு ஏற்படலாம்.
ஆடம்பர விஷயத்தில் கவனமாக இருப்பது புத்திசாலித்தனம்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு பெருமளவில் குறையும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் உடலில் சிறு பிரச்னை
ஏற்பட வாய்ப்புண்டு.
பரிகாரம்: முருகன் கோயிலுக்கு சென்று,
ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஞாயிறன்று
ராகு கால பைரவர் பூஜையில்
கலந்து கொள்ளவும். ஜூன் மாதத்திற்கு பிறகு
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களை
வலம் வந்து வழிபடுங்கள். சனீஸ்வரருக்கு
நல்லெண்ணெய் தீபம் இடுங்கள். பிரதோஷத்தன்று
சிவனை வழிபடுங்கள்
துலாம் – 2015 புத்தாண்டு ராசிபலன்
சுக்கிரனை ஆட்சி கிரகமாக கொண்ட
துலாம் ராசி அன்பர்களே!
நீதி, நேர்மை எப்பக்கம்
இருக்கிறதோ அப்பக்கம் சாய விரும்பும் துலாக்
கோலாக வாழ்வில் செயல்படுவீர்கள். உங்கள் ஆட்சி நாயகனும்,
நட்பு கிரகங்களான புதன், குரு, கேது
ஆகியோரும் சாதகமாக அமைந்திருக்கும் சூழ்நிலையில்
இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுப மங்களகரமாக
அமையப் போகிறது. சனி பகவான் உங்கள்
ராசிக்கு 2-ம் இடத்திற்கு இருக்கிறார்.
இது சிறப்பான இடம் அல்ல. இதனால்
குடும்பத்தில் பிரச்னைகளை
உருவாக்குவார். வருமானம் குறைவாக இருப்பதால் அடிக்கடி
பணப்பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடலாம். சிலருக்கு
கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். ஆனால், சனி பகவானின்
10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக
அமைந்துள்ளது. அதன் மூலம் நற்பலன்கள்
அதிகரிக்கும். 12-6-2015 முதல் 5-9-2015 வரை சனிபகவான் வக்ர
கதியில் இருக்கிறார். அவர் வக்ரத்தில் சிக்கும்
போது கெடுபலன் அறவே தர மாட்டார்.
மாறாக நன்மையை வாரி வழங்குவார்.
குருபகவான் 10-ம் இடத்தில் இருக்கிறார்.
இது சுமாரான நிலை தான்.
அவர் பொருள் நஷ்டத்தையும், மன
சஞ்சலத்தையும் ஏற்படுத்தலாம்.
அவர் சாதகமற்ற இடத்தில்
இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை
சாதகமாக அமைந்துள்ளது. அதன்மூலம் எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு
சமாளித்து வெற்றி காண்பீர்கள். பணத்தட்டுப்பாடு
நீங்கிட அதிர்ஷ்டகரமாக வழி பிறக்கும். குரு
ஜூலை 6ல் சிம்மத்திற்கு மாறுவதன்
மூலம் சாதகமான இடத்துக்கு வருகிறார்.
இதனால் கடந்த கால பின்தங்கிய
நிலை இனி மேல் இருக்க
வாய்ப்பில்லை. மதிப்பு,மரியாதை சிறப்பாகவே
இருக்கும்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட
உங்கள் மீதான அவப்பெயர் அடியோடு
மறையும். நிழல் கிரகமான ராகு
தற்போது 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.
இதனால், வெளியூர் பயணத்தின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம்
கிடைக்காமல் போகலாம். மறைமுக எதிரிகள் உங்களுக்கு
இடையூறு ஏற்படுத்தலாம். இன்னொரு நிழல் கிரகமான
கேது தற்போது மீனத்தில் இருந்து
நன்மை செய்து கொண்டிருக்கிறார். இதனால்
பொருளாதார வளம் அதிகரிக்கும்.
பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபட அறிவுப்பூர்வமான
முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் அபார ஆற்றல்
பிறக்கும். சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபட்டு வருவீர்கள்.
ஆன்மிக சிந்தனையில் ஆர்வம் உருவாகும். இந்த
சிந்தனை உங்களை முன்னேற்றப் பாதைக்கு
அழைத்துச் செல்லும், அதற்காக முழுமூச்சாய் உழைக்கும்
திறமையைத் தரும். மேற்கண்ட கிரக
நிலையின் அடிப்படையில், ஆண்டு முழுமைக்குமான பலனை
காணலாம்.ஆண்டின் முற்பகுதியில் சிரமம்
குறுக்கிட்டாலும், ஜூலை6க்கு பிறகு
மதிப்பு,
மரியாதை சிறப்பாக இருக்கும்.
சமூகத்தில் கவுரவம் கூடும். புதிதாக
வீடு, மனை வாங்கலாம். சிலருக்கு
வாகன வாங்கும் யோகமுண்டாகும். ஜூலை மற்றும் நவம்பர்
மாதங்களில் யாருடனும் வீண் விவாதங்களில் ஈடுபடுவது
கூடாது. அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களை அறிவதில் ஆர்வம் காட்டுவதும் கூடாது.
குடும்பம்
கணவன்-மனைவி இடையே
அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மனம் விரும்பிய ஆடை,
ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின்
முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.
ஏப்ரல், மே மாதங்களில் வீட்டுக்கு
தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள்.
தற்போது இருப்பதை விட வசதியான
வீட்டிற்கு குடி புகும் நாள்
நெருங்கி விட்டது. திட்டமிட்ட படி திருமணம் போன்ற
சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் கைகூடும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உறவினர்கள் வகையில் இருந்த கருத்துவேறுபாடு
நீங்கி இணக்கம் உண்டாகும். அவர்களின்
வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுபநிகழ்ச்சிகள் மற்றும் வீடு, மனை
வாங்கும் முயற்சிகளில் தடங்கல் குறுக்கிட்டாலும் முடிவு
நன்மையாகவே அமையும்.
தொழில், வியாபாரம்பொருளாதார வளம்
அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில்
நல்ல வளம் காணலாம். அனுபவசாலிகளின்
ஆலோசனையைப் பின்பற்றி நற்பலன் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களிடம்
அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை
தக்க வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது
தொடங்குவதை இப்போதைக்கு ஒத்தி வைக்கவும். அவசியம்
தொடங்கும் நிலை இருந்தால், குறைந்த
முதலீட்டில் தொழில் செய்யவும். அதுவும்
குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரில்
தொடங்குவது நன்மை அளிக்கும். நவம்பர்,
டிசம்பர் மாதங்களில் சற்று கவனமாக இருக்கவும்.
அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தொழில்
ரீதியாக அடிக்கடி தொலை துõர
பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.
பணியாளர்கள்மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரையும்
நம்பி ஒப்படைக்க வேண்டாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே
நிறைவேற்ற வேண்டியது இருக்கும். ஜூன்மாதத்திற்கு பிறகு முன்னேற்றம் அடையலாம்.
வேலைப்பளு குறையும். விருப்பமான இடமாற்றம் பெறலாம். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். நவம்பர்,
டிசம்பர் மாதங்களில் வேலையில் மிக கவனமாக இருக்கவும்.
சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு உருவாகலாம்.
கலைஞர்கள்புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஏப்ரல் மே மாதங்களில்
வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன்
இருப்பர். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் கிடைக்கும். அரசாங்க வகையில் வெகுமதி,
பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. ரசிகர்களின்
மத்தியில் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள்.
அரசியல்வாதிகள்அரசியலில் சிறப்பான நிலை பெறுவர். தலைமையின்
நம்பிக்கைக்குரியவராக விளங்குவீர்கள். தொண்டர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி
தரும். மக்கள் நலப்பணிகளில் ஆர்வமுடன்
ஈடுபட்டு வருவீர்கள். ஆனால் ஏப்ரல்,மே,
நவம்பர், டிசம்பர் மாதங்களில் செவ்வாய் சாதகமாக இல்லாததால் எதிலும்
தீவிர முயற்சி எடுக்க வேண்டி
வரும். அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு
நல்லமுறையில் கிடைக்கும். அரசியல் ரீதியான நீண்ட
துõர பயணங்கள் வெற்றியில்
முடியும்.
மாணவர்கள்சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.
நண்பர்களுடன் பொழுதுபோக்குவதை குறைப்பது நல்லது. சிலர் ஆசிரியர்களின்
கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். குருவின்
பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த
பலன் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டு
கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். போட்டிகளில் விருப்பமுடன் பங்கேற்று வெற்றி வாகை சூடுவீர்கள்.
ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றி கல்வி வளர்ச்சி காண்பீர்கள்.
விவசாயிகள்கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி வரும்.
உழைப்புக்கேற்ப பலன் கிடைக்காமல் போகாது.
நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம்
மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல வருமானத்தை கொடுக்கும்.
அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத்
தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு
உங்கள் பக்கம் அமையும். புதிய
வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும்.
புதிதாக நிலம் வாங்கும் முயற்சியில்
வெற்றி பெறுவீர்கள்.
பெண்கள்உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும்.
பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.செலவை குறைப்பது நல்லது.
மே மாதத்திற்கு பிறகு குதுõகலமான
பலனை காணலாம். கணவரின் அன்பு கிடைக்கும்.
உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும்.
சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து
பொன், பொருள் வரும். பிள்ளை
வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். உடல்
நலம் சிறப்பாக இருக்கும். தாயாரின் உடல் நலம் மேம்படும்.
பரிகாரப் பாடல்: கோணிலவு பிறை
பொருவுஞ் கூரெயிற்றுவாய்மூடுவதற் குதிரை யானைப்பாணியிற் கங்கணம்
புனைந்த வுரகமணிவெயில் விரிக்கும் பண்பினானைவேணியரன் திருக்கோயில் காப்பானைநிருவாண வேடத்தானைவாணிலவு முத்தலைவேல் வடுகனைச்செந்தமிழ் பாடி வணக்கஞ் செய்வாம்.
பரிகாரம்: சனி, ராகு சாதகமாக
இல்லாததால் இருவருக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
அர்ச்சனை செய்யவும். பைரவரை ராகுவேளையில் தரிசிப்பது
பிரச்னையை பெருமளவில் குறைக்கும். பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். காக்கைக்கு
அன்னமிட்டு சாப்பிடுங்கள். ஞானிகளை சந்தித்து ஆசி
பெறுங்கள். ஜூன் வரை குருபகவானுக்கு
அர்ச்சனை செய்யுங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ப”வுக்கு அகத்திக்கீரை
கொடுங்கள்.
விருச்சிகம் -2015 புத்தாண்டு ராசிபலன்
செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட
விருச்சிக ராசி அன்பர்களே!
கடந்த ஆண்டு குருவால்
உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும்.
கேதுவால் முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டு இருக்கும்.
பொருள் நஷ்டம், உடல் ஆரோக்கிய
குறைவு வந்திருக்கலாம். சனிபகவானால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ராகு மட்டும்
நல்ல பொருளாதாரத்தை தந்திருப்பார். கடந்த மாதமே நிலைமை
மாறத் தொடங்கி இருக்கும். உங்கள்
ராசிக்கு குரு 9-ம் இடத்தில்
இருக்கிறார். இது மிகச்சிறப்பான இடம்.
இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி
அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக
செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும்.
குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள்
மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள்
உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை
வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க
வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும்
குருவால் கிடைக்கும் நற்பலன்கள்.
இப்போது சனிபகவான் உங்கள்
ராசியில் இருக்கிறார். இது ஏழரைச்சனி காலம்.
ஏழரைச் சனி என்றாலே நமக்கும்கஷ்டம்
தான் வருமோ என்று நினைக்கத்
தேவையில்லை. உலகத்தில், நல்லது கெட்டது என்பது
கலந்து தான் வரும். பொதுவாக,
சனி ராசியில் இருக்கும் போது, உடல் உபாதைகள்
வரலாம், வெளியூர் வாசம் இருக்கும் என்று
ஜோதிடம் கூறுகிறது. மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள்
வாழலாம், வழியிருந்தால் கடுகுக்குள்ளே கடலைக் காணலாம் என்பார்கள்.
இதை மனதில் வைத்துக் கொண்டால்
வாழ்க்கைப் படகு அமைதியாகச் செல்லும்.ஏனெனில், சனியின் 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக
அமைந்துள்ளது.
இந்த பார்வையால் அவர்
காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.
அதாவது, நீங்கள் குடும்பத்தைப் பிரிந்தாலும்
கூட, அது தொழில் காரணமாக
இருக்கலாம். தொழில் என்று வந்து
விட்டால், எந்த ஊரானாலும் போய்
தானே தீர வேண்டும்! இது
உலகம் முழுமைக்கும் பொதுவான விஷயம் தானே!
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
என்று நமக்காகத்தானே முன்னோர் சொல்லி வைத்திருக்கின்றனர். எனவே,
எதையும் எளிமையாக ஏற்கும் பக்குவத்தை வளர்த்துக்
கொள்ளுங்கள்.நிழல் கிரகமான ராகு
தற்போது ராகு 11-ம் இடமான
கன்னியில் இருக்கிறார்.
இது சிறப்பான இடம்.
அவரால் பொன், பொருள் கிடைக்கும்.
மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக
இருப்பர். இன்னொரு நிழல் கிரகமான
கேது தற்போதுமீனத்தில் இருக்கிறார். அவரால் எதிரிகளின் தொல்லை
வரலாம். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம்.இந்த
கிரக நிலைகளின் அடிப்படையில், ஆண்டு முழுமைக்குமான விரிவான
பலனை காணலாம்.
ராகு, குருவின் பலத்தால்
உங்கள் ஆற்றல் மேம்படும். தடைகள்
அனைத்தும் அகலும். தேவைகள் பூர்த்தியாகும்.
பண வரவு இருக்கும். உங்கள்
செல்வாக்குஅந்தஸ்து மேம்படும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். ஆனால்,
ஜூலை 6ல் குருபகவான் சாதகமற்ற
நிலைக்கு வருகிறார். இந்த காலத்தில் சற்று
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனாவசிய
செலவை தவிர்க்க வேண்டும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.குடும்பம்ஜூன் வரை வீட்டில் மகிழ்ச்சி
இருக்கும்.
வசதியான வீட்டிற்கு குடிபோகலாம்.
தடைபட்டு வந்த திருமணம் போன்ற
சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் மே மாதத்திற்கு பிறகு
நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக
அமையும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள்
மாறும். ஜூன் மாதத்திற்கு பிறகு
கணவன்-மனைவி இடையே அவ்வப்போது
பிரச்னை வரலாம். விட்டுக் கொடுத்து
போகவும். உறவினர்கள் வகைளில் விரோதம் ஏற்படலாம்.
அவர்களிடம் அதிக நெருக்க வேண்டாம்.
தொழில், வியாபாரம்வீண் அலைச்சல்
இனி இருக்காது. சென்ற இடமெல்லாம் வெற்றி
ஏற்படும். புதிய தொழில் தொடங்க
பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
வேலை இன்றி இருப்பவர்கள் தொழில்
தொடங்குவதன் மூலம் நல்ல வளம்
காணலாம். போட்டியாளர்களின் சதியை உங்களது சாமர்த்தியத்தால்
முறியடிப்பீர்கள்.
பெண்கள் மிகவும் உறுதுணையாக
இருப்பர். 12-6-2015 முதல் 5-9-2015 வரை சனிபகவான் வக்ரத்தில்
உள்ளார். இந்த காலக்கட்டத்தில் அவரால்
நன்மை தான் கிடைக்கும்.அனுகூலமான
போக்கு காணப்படும். பணியாளர்கள் ஆண்டு தொடக்கத்தில் வேலையில்
நல்ல முன்னேற்றம் காணலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம்
கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும்.
உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து
அனுசரணையுடன் நடப்பர். ஜூலை 6ல் குரு
இடமாறுவதால் வேலைப்பளு அதிகரிக்கும். இதை பொறுமையாகத் தாங்கிக்
கொள்ள வேண்டும். எவ்வளவு உழைத்தாலும், வேலைக்கு
மேல் வேலை தருகிறார்களே என்று
சலித்துக் கொள்ளக்கூடாது. மேல் அதிகாரிகளிடமும், சக
ஊழியர்களிடமும் அனுசரித்து போக வேண்டும். எதிர்பார்த்த
பதவி உயர்வு தள்ளிப் போகலாம்.
இடமாற்றம் ஏற்படலாம். ஆனால் இந்த இடர்பாடுகள்
நீண்ட நாட்கள் இருக்காது. குறிப்பிட்ட
காலத்தில் எதிர்பார்ப்பது நடந்து விடும்.
கலைஞர்கள்ஆண்டின் தொடக்கத்தில் பாராட்டு, விருது கிடைக்கும். புதிய
ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சமூகத்தில் ஒரு அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
சமூகத்தில் ஒரு அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
அரசியல்வாதிகள்நல்ல வசதியுடன் காணப்படுவர். நவம்பர், டிசம்பர் மாதத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.
அரசியல்எதிரிகள் வளர்வர். அவர்களைக் கட்டுப்படுத்த மிகவும் பொறுமையுடன் கடமையைச்
செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் வைத்தகோரிக்கைகள் கடும் முயற்சியின் பேரிலேயே
நிறைவேறும்.
மாணவர்கள்இந்த கல்வி ஆண்டு ஆசிரியர்களின்
அறிவுரையைப் பயன்படுத்துவது நன்மை தருவதாக இருக்கும்.
கிரகங்கள் தங்கள் பாதையைத் தங்கள்
கட்டுக்குள் வைத்துக் கொண்டு, கடமையை எப்படித்
தவறாது செய்து சுழல்கின்றனவோ, அப்படியே
மாணவர்களும் மனதைக் கட்டுப்படுத்தி படிப்பில்
மட்டும் கவனம் செலுத்தி விட்டால்,
படிப்பில் எந்த தடங்கலும் வராது.
படிப்பில் மட்டுமின்றி பிற வகை போட்டி,
பந்தயங்களிலும் வெற்றி பெறலாம். அடுத்த
கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து
படிக்க வேண்டி வரும். விரும்பிய
பாடம் கிடைக்க தீவிர முயற்சி
எடுக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் கவனமாக இருப்பவர்களுக்கு, படிப்பில் எந்தவித சலனமும் வராது. கையில் கவனமுடன் இருக்கவும்.
எடுக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் கவனமாக இருப்பவர்களுக்கு, படிப்பில் எந்தவித சலனமும் வராது. கையில் கவனமுடன் இருக்கவும்.
விவசாயிகள்நல்ல லாபம் உண்டு. புதிய
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூல் பெறலாம்.ஏப்ரல்,
மே மாதங்களில் புதிய சொத்து வாங்கலாம்.
நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. கால்நடை
செல்வம்
பெருகும். மே மாதத்துக்கு பிறகு நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். நவம்பர், டிசம்பரில் நிலம் தொடர்பான வழக்குகள் சாதகமான தீர்வுக்கு வரும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்
பெருகும். மே மாதத்துக்கு பிறகு நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். நவம்பர், டிசம்பரில் நிலம் தொடர்பான வழக்குகள் சாதகமான தீர்வுக்கு வரும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்
பெண்கள்கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். மார்ச், ஏப்ரல் மாதங்களில்
எடுத்த செயல்கள் வெற்றி
அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். வேலை பார்க்கும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். பிள்ளைகள் நலனிலும் அக்கறை தேவை.
அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். வேலை பார்க்கும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். பிள்ளைகள் நலனிலும் அக்கறை தேவை.
பரிகாரப் பாடல்: வேதநுõல்
பிராயம் நுõறுமனிசர்தாம் புகுவர்
ஏலும்பாதியும் உறங்கிப் போகும்நின்றதில் பதினை யாண்டுபேதை பாலகன்
அதாகும்பிணிபசி மூப்புத் துன்பம்ஆதலால் பிறவி வேண்டேன்அரங்கமா நகருளானே!
பரிகாரம்: கேது சாதகமற்ற நிலையில்
உள்ளதால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ரங்கநாதரையும், துர்க்கை அம்மனையும் வணங்கி வாருங்கள். ஆதரவற்ற
மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். பவுர்ணமி
நாட்களில் முருகன் கோயிலுக்குச் சென்று
வாருங்கள். இதனால் நன்மை அதிகரிக்கும்.
ஜூலை 6க்கு பிறகு வியாழக்கிழமைகளில்
தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழை மாணவர்களின் கல்விச்
செலவுக்கு இயன்ற அளவில் உதவுங்கள்.
தனுசு – 2015 புத்தாண்டு ராசிபலன்
குரு பகவானை ஆட்சி
கிரகமாக கொண்ட தனுசு ராசி
அன்பர்களே!
நீங்கள் ஆன்மிக செயல்பாடுகளில்
அதிகமாக ஈடுபடுவீர்கள். கடந்த ஆண்டு இறுதியில்
குரு பகவான் பல்வேறு முன்னேற்றங்களை
தந்திருப்பார். எந்த பிரச்னையையும் முறியடிக்கும்
வல்லமையை கொடுத்திருப்பார். இந்த ஆண்டு குருபகவான்
8-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான
நிலை அல்ல. பொதுவாக மன
வேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருளாதாரச் சரிவை ஏற்படுத்துவார்.
வீண் விரோதத்தை உருவாக்குவார்.
இந்த நிலை ஜூலை துவக்கம்
வரை தான். மேலும், குரு
சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து
பார்வை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அந்த
வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும்,
அதை குரு பார்வை முறியடித்து
வெற்றிக்கு வழிவகுக்கும். அதாவது சவாலுக்கு சவால்
விடுவீர்கள். இப்போது சனி பகவானும்
12-ம் இடமான விருச்சிக ராசியில்
இருக்கிறார். அவரால் நற்பலனை எதிர்பார்க்க
முடியாது. பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர்
பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம்
. இதற்காக நீங்கள் அஞ்ச வேண்டாம்.
காரணம் சனியின் 7-ம் இடத்து பார்வை
மூலம் அவர் நல்ல பொருளாதார
வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில்
வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும்.
நிழல் கிரகமான ராகு
தற்போது 10-ம் இடமான கன்னியில்
இருக்கிறார். அங்கு பொல்லாப்பையும், பெண்கள்
வகையில் தொல்லைகளையும் தரலாம். இன்னொரு நிழல்
கிரகமான கேது தற்போது 4-ம்
இடமான மீனத்தித்தில் உள்ளார். அங்கு அவர் உங்களை
தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கி தொல்லைகளை தரலாம்.
ஆகா! இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று
நீங்கள் நினைக்கிற வேளையில், இதற்காக கொஞ்சம் கூட
பயம் கொள்ளத் தேவையில்லை என்பதை
நினைவில் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு,
ஒரு சம்பவம்.சீதாபிராட்டிக்கு குரு
பகவான் அவளது ராசியிலேயே ஒரு
சமயம் அமர்ந்தார். அதாவது ஜென்ம குரு
காலம். ஜென்ம குரு காலத்தில்
சீதை வனத்திலே என்பார்கள். ஆம்..அவள் ராவணனால்
கடத்தப்பட்டு அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டாள்.
அவள் என்ன சாதாரணமானவளா!
லட்சுமி தாயாரின் அவதாரம். அவள் நினைத்திருந்தால், வீரலட்சுமியாய்
மாறி, ராவணனை அந்தக் கணமே
அழித்திருக்க முடியும். ஆனால், தன்னைக் கொண்டு
உலகத்துக்கு ஒரு பாடம் கற்பிக்க
நினைத்தாள். தனக்கு வந்த சோதனைகளைத்
தாங்கிக் கொண்டாள். ராமபிரான் அவளைத் தேடி அலைந்த
போது, சுக்ரீவன், அனுமன், விபீஷணன் போன்ற
நல்லவர்களின் நட்பையெல்லாம் பெற்றார். அவர்களின் உதவியோடு சீதையை மீட்டார். அவரோ,
திருமாலின் அவதாரம். அவரது கண்ணசைவில் ராவணன்
மாண்டு விடுவான். இருப்பினும், மனிதனாகப் பிறந்து விட்டதால், அவனுக்கே
உரித்தான சோதனைகளை சந்தித்தார். அவற்றை நல்லவர்கள் உதவியோடு
வெற்றி கொண்டார்.அந்த ராமனுக்கே உரித்தான
வில்லும், அம்புமே உங்கள் ராசியின்
சின்னம். பிறகென்ன! சோதனைகளை தைரியத்துடன் சந்திப்பீர்கள். அவற்றை வென்று சாதனையும்
படைப்பீர்கள்.
ஆக, மேற்கண்ட கிரகநிலையில்,
இந்த ஆண்டு முழுமைக்குமான விரிவான
பலன்களைக் காணலாம். செலவுகள் அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில்
வருமானம் வரும். மதிப்பு, மரியாதை
சுமாராகத் தான் இருக்கும். வீண்
விரோதத்தை தவிர்க்கவும். குரு ஜூலை 6 முதல்
டிசம்பர் 21 வரை நன்மை தருவார்.
எந்த ஒருசெயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். தடைகள் அகலும். பொருளாதார
வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர்
மறையும். செல்வாக்கு மேலோங்கும்.
அக்கம் பக்கத்தினர் உங்களை
புகழ்வர். மேலும் சனி ஜூன்
12 முதல் செப்டம்பர் 5 வரையிலும் வக்கிரம் அடைகிறார். இந்த காலக்கட்டத்தில் கெடுபலன்கள்
நடக்காது.குடும்பம்குடும்பம் ஒன்று சேரும். ஆனாலும்
மார்ச், ஏப்ரல் மாதங்களில் தம்பதிகளிடையே
அவ்வப்போது கருத்துவேறுபாடு வரத்தான் செய்யும். அனுசரித்து போவது நல்லது. குடும்பத்தை
விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். அலைச்சல்
அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர்
பயணம் ஏற்படலாம்.
உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம்.
அவர்களிடம் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும்.
ஜூலை 6முதல் குடும்ப நிலைமை
மேம்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். அவர்களது
படிப்புத்திறமை கண்டும், விளையாட்டு போன்றவற்றில் மிளிர்வது கண்டும் மனம் மகிழ்வீர்கள்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக
நடக்கும். அதற்கான தொகைக்கு சிறிது
சிரமம் இருந்தாலும், முன் பின் தெரியாத
ஒருவர் கூட கடனுதவி செய்கிற
வகையிலே நிலைமை அமைந்து விடும்.
தொழில், வியாபாரம்தொழில் சீராக
நடக்கும். உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும்.
பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும்
அதை எளிதில் முறியடிப்பீர்கள். சிலரிடம்
வீண் விரோதம் வர வாய்ப்பு
உண்டு. எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன்
பேசவும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த
சலுகைகள் கிடைக்காமல் போகலாம். புதிய வியாபாரம் தற்போது
வேண்டாம். எதிலும் அதிக முதலீடு
போட வேண்டாம். இருக்கிற முதலீட்டைக் காப்பாற்றுகிற வகையிலும், அதிலிருந்தே அதிக வருமானம் பெறும்
வகையிலும் நீங்கள் அதிகபட்ச உழைப்பைச்
சிந்தினாலே போதும்.
நிலைமை உங்கள் கட்டுக்குள்
இருக்கும். பணியாளர்கள்வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சலும்
இருக்கும். சிலர் பொறுப்புகளை இழக்க
நேரிடலாம். கவனம் தேவை. உங்கள்
கோரிக்கைளை தீவிர முயற்சி எடுத்து
நிறைவேற்றிக் கொள்ளவும். மேலும் அதிகாரிகளிடம் அனுசரித்து
போகவும். சிலர் வேலை காரணமாக
குடும்பத்தைவிட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியிருக்கும். ஜூன்
மாதத்திற்கு பிறகு வேலையில் பிரச்னை
குறையும். சம்பள உயர்வு, பதவி
உயர்வு கிடைக்கும். நிறுவனத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
ஒத்துழைக்க மறுத்த சக ஊழியர்கள்,
உங்கள் சொல்லுக்கு மதிப்பளிப்பார்கள்.
கலைஞர்கள்முயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள்
கிடைக்கும். பாராட்டு புகழை விட பொருளாதார
வளத்தில் மேம்பாடு காண்பீர்கள். இதை சுபச்செலவுகளுக்கு பயன்படுத்துவதன்
மூலம், தேவையின்றி பணம் கரைவதைத் தடுத்து
விடலாம்.
அரசியல்வாதிகள்அரசியல் எதிரிகள் கடுமையாக மோதுவர். ஆனால், அவர்களின் ஜெகஜாலமெல்லாம்
ஜூன் வரை தான். ஜூனுக்குப்
பிறகு புதிய பதவி கிடைக்கும்.
வெளிநாடு சென்று வரலாம். சில
சமயங்களில் கடும் உழைப்பும் பலனின்றிப்
போகும். அதற்கு இடம் கொடுக்காத
அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
மாணவர்கள்நடப்பு கல்வியாண்டில் சிரத்தை எடுத்து படிக்க
வேண்டியிருக்கும், அதே நேரம் குருவின்
பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த
பலன் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டில்
அதிக மார்க் பெற்று வெற்றி
பெறலாம். விளையாட்டிலும் ஜொலிக்கலாம். விரும்பிய கல்லுõரியில் விரும்பிய
பாடத்தில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகள்ஆண்டின் ஆரம்பத்தில் சுமாரான மகசூலைக் காண்பர்.
அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஜுன்
மாதத்தில் புதிய சொத்து வாங்க
வாய்ப்புண்டு. மகசூல் அதிகரிக்கும். வழக்கு
விவகாரங்களில் பாதகமான தீர்ப்பு வர
வாய்ப்பு உண்டு. எனவே சமாதானமாக
போக முயற்சி செய்யவும்.
பெண்கள்ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெரியோர்களின்
ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன்
இருப்பர். ஜூன் மாதத்திற்கு பிறகு
மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து
உதவிகள் வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு
மழலை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சிறப்படையும்.
பரிகாரப் பாடல்: காராய் வண்ண
மணிவண்ண கண்ணகண சங்கு சக்ர
தர நீள்சீர்வாய துõய மலர்வாய
நேய
ஸ்ரீராம ராமன் எனவேதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்கதாமோ தரயா நமவோம்நாராயணா நம வாமனாய
நமகேச வாய நமவே.
ஸ்ரீராம ராமன் எனவேதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்கதாமோ தரயா நமவோம்நாராயணா நம வாமனாய
நமகேச வாய நமவே.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்க தவறாதீர்கள். ஏழைகள்
படிக்க இயன்ற பொருள்உதவி செய்யுங்கள்.
சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி
வணங்கலாம். முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யலாம். ஏழுமலையானை
விரதமிருந்து தரிசனம் செய்து வாருங்கள்.
ராமரை வழிபடுவதன் மூலமும், ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை
தினமும் 108 தடவை சொல்வதன் மூலமும்
எந்தச் சோதனையையும் வெற்றி கொள்ளும் ஆற்றல்
கிடைக்கும்.
மகரம் – 2015 புத்தாண்டு ராசிபலன்
செவ்வாயின் உச்ச வீடாகத் திகழும்மகர
ராசி அன்பர்களே!
கடந்த சில ஆண்டுகளாக
உங்கள் ஆட்சி நாயகன் சனி
பகவான் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும்
தந்து கொண்டிருந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு 10ம்
இடத்தில் இருந்து உங்கள் முயற்சிகளில்
பல்வேறு தடைகளை உருவாக்கி இருப்பார்.
அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக
உடல் உபாதைகளையும், தொழிலில் மந்த நிலையையும் கொடுத்திருப்பார்.
உங்கள் செல்வாக்கு கவுரவம் போன்றவைக்கு பங்கம்
வந்திருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற
அங்கீகாரம் கிடைத்திருக்காது.
ஆனாலும், குருபகவானும், கேதுவும் உங்களுக்கு நன்மை தந்து உங்களை
தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த
ஆண்டைவிட, இந்த ஆண்டு நன்மைகள்
அதிகம் நடக்கும். குரு பகவான் 7ம்
இடத்தில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான
நிலை. அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை
அதிகரித்து சுப நிகழ்ச்சிகளை உருவாக்குவார்.
செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற
வசதிகள்கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அதோடு
குருபகவானின் 5-ம் இடத்துப் பார்வையும்
நன்மை தரும்.சனிபகவான் இப்போது
11-ம் இடத்தில் இருக்கின்றார்.
இது சாதகமான இடம்.
பல்வேறு நன்மைகளைத் தருவார். அவரால் பொன், பொருள்
கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும்.
படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து
மேம்பட்டு இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார
வளம் அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த
பொருளை வாங்கி மகிழலாம். எந்த
ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பும்,
பாசமும் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் போன்ற
சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உறவினர்கள் வருகையும்,அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும்
யோகம் தொடரும். விருந்து, விழா என உல்லாச
பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.நிழல்
கிரகமான ராகு தற்போது 9-ம்
இடத்தில் உள்ளார். அங்கு அவரால் முயற்சிகளில்
தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை வரலாம்.பொதுவாகவே ராசிபலன் வாசிப்பவர்கள், எனக்கு சனிப்பெயர்ச்சி பலன்
நன்றாகத் தானே இருந்தது. திடீரென
இடையில் சிரமம் வருகிறதே! இது
எதனால் வந்தது என குழம்பிப்
போகிறார்கள். இதற்கு காரணம், வேறு
ஏதாவது ஒரு கிரகத்தின் சஞ்சார
நிலையே. மாதம் ஒருமுறை ராசி
விட்டு ராசி மாறும் சூரியனும்,
ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை மாறும்
செவ்வாயும், ஏன்..குறைந்த பட்சமாக
இரண்டரை நாட்களுக்குள்ளேயே மாறி விடும் சந்திரனும்
கூட, அவர்கள் தங்கும் அந்த
குறைந்த பட்ச காலத்தில் மாற்றங்களை
ஏற்படுத்தி விடலாம்.
கடவுள் நம்மை சிறந்த
பாதையில் வழிநடத்தவே இவ்வாறு செய்கிறார். ஒரு
குறிப்பிட்ட கிரகம், நமக்கு நன்மை
தரும் என்றாலும், அந்தப் பெயர்ச்சி காலத்திற்குள்ளேயே
அது வக்ரமாகி விட்டால், நன்மையோ சிரமங்களோ தரலாம்.
நடப்பதöல்லாம் நல்லதாக இருக்கிறதே!
இதனால், நாம் இஷ்டத்துக்கு ஆட்டம்
போடலாமே என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்
வேளையில், கடவுள் ஒரு கிரகத்தின்
சஞ்சாரத்தை மாற்றுவதன் மூலம் ஒரு கடிவாளத்தைப்
போட்டு விடுவார். இவ்வகையில், மகர ராசியினருக்கு ராகுவின்
மூலம் ஒரு வேகத்தடை போட்டு
வைத்திருக்கிறார். இன்னொரு நிழல் கிரகமான
கேது தற்போது 3-ம் இடத்தில் உள்ளார்.
அவர் இறை அருளையும்
காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார்.மேற்கண்ட
கிரக நிலையில் இருந்து ஒட்டுமொத்த பலனைக்
காணலாம்.பொருளாதார வளம் மேம்படும். தடைகள்
விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும்
நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
ஜூன் மாதத்திற்கு பிறகு செலவுகள் அதிகரிக்கும்.
குருபகவான் 6-7-2015ல் சிம்மத்திற்கு மாறுகிறார்.
அவர் சாதகமற்ற இடத்துக்கு சென்றுவிட்டாலும், அவரது 7-ம் இடத்துப்பார்வை
சாதகமாக அமையும்.அந்த பார்வையால்
மந்த நிலை மாறும். துணிச்சல்
பிறக்கும்.
பணவரவு கூடும். தேவையான
பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை
ஏற்படும்.குடும்பம்வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும்
கிடைக்கும். கணவன்-மனைவி இடையே
அன்பு மேம்படும். தொடக்கத்தில் உறவினர்கள் வகையில் பிணக்குகள் வரலாம்.
அவர்களிடம் சற்று ஒதுங்கி இருக்கவும்.
மே,ஜூன் மாதங்களில் சிலர்
தொழில் நிமித்தமாக குடும்பத்தை வெளியூருக்கு மாற்ற வேண்டி இருக்கும்.இதனால் பெரும் சிரமம்
வருமோ என்று அஞ்ச வேண்டாம்.
காரணம், இந்த வெளியூர் பயணம்
உங்களுக்கு சகல வளத்தையும் தரும்.
பொருளாதார ரீதியான முன்னேற்றம் உங்கள்
குழந்தைகளின் திருமணம், கல்வி விஷயங்களுக்கு பெருமளவு
பயன்படுவதாய் இருக்கும். எல்லாம் நன்மைக்கே என்று
நினைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
தொழில், வியாபாரம்வருமானம் அதிகரிக்கும்.
ஊர் விட்டு ஊர் செல்லும்
நிலை வந்தாலும் உடலை வருத்தி வளர்ச்சி
காண்பீர்கள். எந்த தொழிலிலும் அதிக
முதலீடு செய்ய வேண்டாம். அறிவைப்
பயன்படுத்தி வருமானத்தை காணலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு
குரு நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். லாபத்தில் குறைவு ஏற்படலாம். போட்டி
அதிகமாக வாய்ப்புள்ளது.பணியாளர்கள் திருப்திகரமான நிலை இருக்கும். பதவி
உயர்வு மற்றும் சம்பள உயர்வு
கிடைக்கும். பக்கத் தொழில் செய்பவர்களுக்கு,
வருவாய் அதிகரிக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம், பதவி மாற்றம் கிடைக்க
வாய்ப்பு உண்டு. வேலையின்றி இருப்பவர்களுக்கு
வேலை கிடைக்கும். அக்டோபர் மாதம் வேலையில் சற்று
பின்தங்கிய நிலை ஏற்படலாம்.வேலையில்
சிலருக்கு பங்கம் வரலாம். சிலர்
கூடுதல் பொறுப்புகளை இழந்து வருமான இழப்புக்கு
ஆளாகலாம். எனவே, அக்டோபரில் வேலையில்
கவனமாக இருக்கவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து
போகவும். சக பெண் ஊழியர்களின்
ஆதரவு கிடைக்கும். பொருள் சேரும்.
கலைஞர்கள்நல்ல புகழையும், பாராட்டையும் பெறலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணச்செழிப்பிலும்
எந்த குறையும் இருக்காது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பலன்கள் குறையும். எதையும்
சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும்.
எதிரிகளால் தொல்லைகள் இருக்கும்.
மாணவர்கள்ஆண்டின் முற்பகுதியில் கல்வியில் சிறப்பு அடைவீர்கள். நல்ல
மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுõரியில், விரும்பிய
பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு
வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு
கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டில்
சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
ஆனாலும் உங்கள் முயற்சிக்கு தகுந்த
பலன் உண்டு.
விவசாயிகள் மகசூல் அதிகரிக்கும். நெல்,
கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் நல்ல
லாபம் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் புதிய
சொத்து வாங்கலாம். நிலம் தொடர்பான வழக்கு
விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு
போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்நல்ல பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள்
வருகையால் செலவு கூடும். குடும்பம்
உங்களால் சிறப்படையும். பிறந்த வீட்டில் இருந்து
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருள், சொத்துகள் கிடைக்க
வாய்ப்பு உண்டு. மார்ச், ஏப்ரல்
மாதங்களில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர்.
தொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். உடல்நலம்
சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். ஜூன்
மாதத்திற்கு பிறகு சிலர் மனஉளைச்சலுக்கு
ஆளாகலாம்.
பரிகாரப் பாடல்: நாற்கரத்து நாயகியாள்நாற்றிசையின்
நல்வினையாள்கார்மேகம் போல் தனத்தைக்காத்திடவே பெய்திடுவாள்நுõற்புலவர் தம்முகத்தாள்நுõதனத்தின் ஒரு வடிவாள்பாற்பணியும் ஐஸ்வரியபரவையாளே
போற்றியம்மா!
பரிகாரம்: நாக தேவதையை வணங்கி
வாருங்கள். ராகு காலத்தில் பைரவர்
பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு
இயன்ற உதவி செய்யுங்கள். லட்சுமி
தாயாரை வணங்கி வாருங்கள். ஜூன்
மாதத்திற்கு பிறகு குருபகவானுக்கு மஞ்சள்
வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள். இதன்மூலம்
தடையின்றி முன்னேறலாம். சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வலம் வந்து வணங்குங்கள்.
கும்பம் – 2015 புத்தாண்டு ராசிபலன்
சனியை ஆட்சியாக கொண்டு
இயங்கி வரும் கும்ப ராசி
அன்பர்களே!
மதிப்பு, மரியாதையும், கவுரவமும் உங்கள் உடன் பிறந்தவை.
இதனை விட்டு கொடுக்க மாட்டீர்கள்.
இந்த ஆண்டு பெரும்பாலான கிரகங்கள்
சாதகமற்ற இடத்தில் இருக்கும் நிலையில்தான் பிறக்கிறது. இருந்தாலும் ஆண்டின் மத்தியில் குருபகவான்
சாதகமான இடத்துக்கு வருகிறார். சனி உங்கள் ராசிக்கு
10-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம்
என்று சொல்ல முடியாது. தொழிலில்
சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு
போல் இல்லாமல் போகலாம்.
உடல் உபாதைகள் லேசாக
நோக செய்யலாம். குரு பகவான் ராசிக்கு
6-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான நிலை
இல்லை. பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும்
குரு உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார்.
மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். ஆனாலும் கவலை வேண்டாம்.
குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து
பார்வையால் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும்.
இதனால் எந்த இடையூறையும் நீங்கள்
முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும்
அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு
கொண்டு இருக்கும். அதனைக் கண்டு பகைவர்களும்
அஞ்சும் நிலைஉருவாகும்.
நிழல் கிரகமான ராகு
தற்போது 8-ம் இடமான கன்னியில்
இருக்கிறார். அங்கு முயற்சிகளில் பல்வேறு
தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம்.
இன்னொரு நிழல் கிரகமான கேது
2-ம் இடத்தில் இருக்கிறார். அங்கு பொருள் களவு
ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில்
தொல்லை வரும். வீட்டில் பொருட்கள்
திருட்டு போகலாம். மேற்கண்ட கிரக நிலையின் அடிப்படையில்,
ஆண்டு முழுமைக்குமான பலனை காணலாம். வீண்விவாதங்களில்
ஈடுபடவேண்டாம். ஜூன் மாதத்திற்கு பிறகு
குருவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு,
மரியாதை சிறப்பாக இருக்கும். குரு ஜூலை 6-ந்
தேதி சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம்.
அதோடு அவரின் 5-ம் இடத்துப் பார்வையும்
சிறப்பாக உள்ளது. உங்கள் மீதான
பொல்லாப்பு மறையும். மதிப்பு மரியாதை சிறப்படையும்.
பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த
செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆற்றல்
மேம்படும்.
வீடு-மனை வாங்கும்
எண்ணம் கைகூடி வரும். ஆனால்,
இதற்காக சில காலம் பொறுமையுடன்
காத்திருக்க வேண்டும். ஜூன் வரை அவசரம்
கூடாது. பதறாத காரியம் சிதறாது
என்பார்கள். இந்த இடத்தில் தான்,
நீங்கள் நளமகாராஜாவை மனதில் நினைக்க வேண்டும்.
அவர் பூஜை செய்ய கிளம்பும்
முன் கால் அலம்பினார். என்ன
அவசரமோ தெரியவில்லை. அரைகுறையாகக் கழுவி விட்டார். இந்த
அவசரத்தின் விளைவை சனி பகவான்
பயன்படுத்திக் கொண்டார். அவரது குதிகால் வழியே
புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டார். காட்டிற்கே அவரை குடும்பத்தோடு அனுப்பி
சோதித்து விட்டார். ஏன் இந்த அவசரம்?
சோதனைகளைத் தடுப்பதும், அதை விலை கொடுத்து
வாங்கிக் கொள்வதும் என்பதும் நமது கையில் தான்
இருக்கிறது. நீங்கள் அவசரப்படாமல் இருந்து
ஜூலைக்குப் பின் மனை அல்லது
வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். அவசரப்பட்டால்
சட்டசிக்கலோ, பணச்சிக்கலோ வரலாம். நீங்களோ சனீஸ்வரரின்
வீட்டுக்குச் சொந்தக்காரர். உங்களை அவருக்கு மிகவும்
பிடிக்கும். அப்படிப்பட்டவர், உங்களுக்கு ஒரு இடம் வாங்கித்
தராமலா போய் விடுவார்! எனவே
பொன்னான இந்த ஆண்டின் பிற்பகுதி
வரை பொறுமை காக்கவும். குடும்பம்ஆண்டின்
முதல் ஆறு மாதங்களில் தாய்,
தந்தை மற்றும் உறவினர்கள் வகையில்
மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர்
செல்லும் நிலை உருவாகும். திருமணம்
போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு உறவினர்கள்
உதவுவர்.
சிலரது வீட்டில் பொருட்கள்
திருட்டுபோகலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு
குதுõகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே பிரச்னை
மறைந்து அன்பு பெருகும். பிள்ளைகளால்
பெருமை கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் எளிதில்
கைகூடும். பெற்றோர் மற்றும் உறவினர் வகையில்
இருந்துவந்த கருத்து வேறுபாடு மறைந்து
விடும்.
தொழில், வியாபாரம்ஓரளவு லாபம்
இருக்கும். எதிலும் அதிக முதலீடு
போட வேண்டாம். இருப்பதைப் பயன்படுத்தி முன்னேற வழிகாணுங்கள். அரசு
வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே,
கணக்கு வழக்கு விஷயங்களில் நேரடி
கவனம் வைத்திருங்கள். அது தொடர்பானஆவணங்களையும் பத்திரமாக வையுங்கள்.
ஜூனுக்குப் பிறகு லாபம் வெகுவாக
அதிகரிக்கத் துவங்கி விடும். தொழில்
தொடர்பாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். இதைப்
பயன்படுத்தி கிளைகளைத் துவங்கும் பணியைத் தீவிரப்படுத்தலாம். கூடுதல்
முதல் போடாமல் முன்னேற வழிவகை
காண்பது நல்லது. மே, ஜூன்
மாதங்களில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.
பணியாளர்கள்ஆண்டின் தொடக்கத்தில் சுமாரான நிலை இருக்கும்.
வேலைப்பளு கூடும். இடமாற்றம் ஏற்படலாம்.
ஜூன் மாதத்திற்கு பிறகு பின்தங்கிய நிலை
மறையும். வேலையில் திருப்திகரமான நிலையையும், பல சிறப்பான பலன்களையும்
காணலாம். வேலைப்பளு குறையும். விருப்பமான இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு, சம்பள
உயர்வு வரும். சக ஊழியர்கள்
உதவிகரமாக இருப்பர். அதிகாரிகளின் ஆதரவுடன் சிறந்த இடத்துக்கு வருவீர்கள்.
தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் ஆவல்
அதிகரிக்கும். இவற்றைத் தெரிந்து கொண்டால் எதிர்காலத்தில் அதிக சம்பளம் பெறுவதற்கான
வாய்ப்பு கிடைக்கும்.
கலைஞர்கள்ஆரம்பத்தில் சுமாரான நிலைதான் இருக்கும்.
அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய
ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜூலைக்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படும்.
அரசியல்வாதிகள்எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. ஆனால், ஜூன் மாதத்திற்கு
பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.
மாணவர்கள்கடந்த கல்வி ஆண்டைபோல் மிகவும்
பிற்போக்கான நிலை இருக்காது. ஆனாலும்
கஷ்டப்பட்டு படிக்க வேண்டி வரும்.
முயற்சி எடுத்தால் தான் எதிர்பார்க்கும் மதிப்பெண்ணைப்
பெற முடியும். அடுத்த கல்வி ஆண்டில்
சிறப்பான பலன் காணலாம். மேல்
படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். பொழுதுபோக்கு
விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிருங்கள்.
டிவியும் மொபைல் போனுமே வாழ்க்கை
என நினைக்காதீர்கள். உங்கள் பெற்றோர் மகிழும்
விதத்தில் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். முதல் ஆறு மாதங்கள்
இதைக் கடைபிடித்தால், அடுத்து வரும் அட்மிஷனில்
சிக்கல் இருக்காது. படிப்பை முடிப்பவர்கள் சிறந்த
நிறுவனங்களில் வேலை பெறுவதையும் யாராலும்
தடுக்க இயலாது.
விவசாயிகள் திருப்திகரமான வருவாய் காணலாம். அதிக
செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். மார்ச்,
ஏப்ரல் மாதங்களில் சிலர் புதிய சொத்து
வாங்குவர். மே மாதத்திற்கு பிறகு
நெல், கோதுமை மற்றும் மானாவாரி
பயிர்களில் நல்ல மகசூலை பார்க்கலாம்.
வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு
உங்கள் பக்கம் அமையலாம். கைவிட்டுப்போனபொருட்கள்
மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வர். குடும்ப
மேம்பாட்டுக்காக குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள்
நலனில் அதிக அக்கறை காட்ட
வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களில்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று
சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
செல்வாக்கு அதிகரிக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு
பதவி உயர்வு கிடைக்கும்.மதிப்பு
மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏறபடும்.
பிள்ளைகள் உடல் நலனிலும் அக்கறை
காட்ட வேண்டி வரும்.ஜூனுக்குப்
பிறகு திருமணமாகாதவர்களுக்கு கெட்டிமேளம் கொட்டி, தங்கத்தாலி கட்ட
மணமகன் வருவார்.
பரிகாரப் பாடல்: அல்லல் போம்!
வல்வினை போம்!அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம்! போகத்துயரம் போம்!நல்ல குணமதிக மாமருணைகோபுரத்தில்
வீற்றிருக்கும்கணபதியைக் கைதொழுதக்கால்.
பரிகாரம்: தினமும் விநாயகரை வணங்குங்கள்.
சதுர்த்தி நாட்களில் அருகம்புல் மாலை அணிவியுங்கள். சனி
சாதகமாக இல்லாததால் சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். வியாழக்கிழமை
குருபகவானுக்கு கொண்டை கடலை படைத்து
வழிபாடு செய்யுங்கள். ஏழைக் குழந்தைகள், மாற்றுத்
திறனாளிகளுக்கு இயன்ற பொருள் உதவி
செய்யலாம். ப”வுக்கு அகத்திக்கீரை
கொடுங்கள்.
மீனம் – 2015 புத்தாண்டு ராசிபலன்
குருவை ஆட்சி நாயகனாகக்
கொண்ட மீன ராசி அன்பர்களே!
பெரியவர்கள் மீது மரியாதை செலுத்துவதில்
உங்களுக்கு நிகர் நீங்களே. உள்ளத்தில்
உள்ளதை வெளிப்படுத்துவதில் சாமர்த்தியசாலியாக விளங்குவீர்கள். சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய
மாத கிரகங்கள் சாதகமான நிலையில் இந்த
புத்தாண்டு மலர்கிறது. இப்போது குரு பகவான்
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார்.
இது மிகவும் சிறப்பான நிலை.
இந்த இடத்தில் குரு பகவான் இருக்கும்போது
குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். பொன், பொருள் சேர்க்கை
உண்டாகும்.
திட்டமிட்டுச் செயல்பட்டு வாழ்வில் சாதனை புரிவீர்கள். பண
வரவையும், வாழ்க்கை வளத்தையும், சுபங்களையும் தருவார். இது தவிர குருவின்
5-ம் இடத்துப்பார்வையும், 7-ம் இடத்துப் பார்வையும்
சாதகமாக அமைந்துள்ளது. இதனால் எங்கள் வீட்டில்
எல்லாநாளுமே புத்தாண்டு தான் என்று மகிழ்வீர்கள்.
சனி பகவான் விருச்சிக ராசியில்
உள்ளார். இதனால். உங்கள் முயற்சிகளில்
தடங்கல் குறுக்கிடலாம். மறைமுக எதிரிகளின் இடையூறு
தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலையும் கூட
உருவாகும். அதேநேரம், அவரது 3,7,10 பார்வைகளால் சிறப்பான பலன்கள் உங்களுக்கு காத்திருக்கிறது.
நிழல் கிரகமான ராகு
7-ம் இடத்தில் இருக்கிறார். அங்கு அவர் குடும்பத்தில்
சில பிரச்னைகளை உருவாக்குவார். வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
தொழில், பணி ரீதியாக சிலருக்கு
வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும்.
இன்னொரு நிழல் கிரகமான கேது
உங்கள் ராசியிலேயே இருக்கிறார். இதனாலும் விடாமுயற்சியால் மட்டுமே வெற்றிகளைப் பெறலாம்.
பகைவர்களின் தொல்லை அவ்வப்போது குறுக்கிடும்.
உடல் நலம் பாதிக்கப்படலாம். மருத்துவச்
செலவைத் தவிர்க்க முடியாது. உணவு விஷயத்தில் விழிப்புடன்
இருப்பது நல்லது. இந்த கிரக
நிலைகளின் அடிப்படையில், ஆண்டு முழுவதற்குமான விரிவான
பலனைக் காணலாம்.
பொருளாதார வளம் இருக்கும். வருமானத்திற்கான
புதிய வழிவகை உருவாகும். எடுத்த
செயல்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.
குருபகவான் ஜூலை 6ல் சிம்மத்திற்கு
மாறுகிறார். இது சாதகமாக அமையவில்லை.
அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.
குருபகவானின் 9-ம் இடத்துப்பார்வை சாதகமான
சூழலை ஏற்படுத்தும். பொருளாதார வளம் சிறக்கும். அதே
சமயத்தில் திடீர் செலவும் உருவாகும்.
உங்கள் செயல்களில் ஏற்படும் தடைகளை தீவிரமுயற்சி எடுத்தால்
எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு,
மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை
தவிர்ப்பது நல்லது. குடும்பம்பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ராகுவால் கணவன்-மனைவி இடையே
சிற்சில பிரச்னை குறுக்கிடலாம். ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்துப் போகவும். வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும்.
தீயவர்களின் சேர்க்கை சகவாசத்தால் சிரமம்உருவாகலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு
அதிக முயற்சி எடுத்தால் புதிய
வீடு கட்டலாம். ஆனால் அதற்காக கடன்
பெற அலைய வேண்டியிருக்கும். ஜூலை,
ஆகஸ்ட் மாதங்களில் எடுத்த முயற்சியில் வெற்றி
கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதாக
நிறைவேறும். புதுமணத் தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அக்கம் பக்கத்தினரின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள்.
தொழில், வியாபாரம்எதிர்கால முன்னேற்றத்துக்கான
அடித்தளம் அமைப்பீர்கள். புதிய தொழில் முயற்சி
ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். அதிக பணத்தை முதலீடு
செய்வதை விட உழைப்பின் மூலம்
வருவாயை தேடுவது நல்லது. சிலர்
தொழில் காரணமாக இருப்பிடத்தை வேறு
இடத்துக்கு மாற்ற வேண்டிய கட்டாயம்
உருவாகும். ஜூன் மாதத்திற்கு பிறகு
லாபம் படிப்படியாக அதிகரிக்கும். அதே நேரம் நிர்வாகச்
செலவும் அதிகரிக்கும். கஷ்டப்பட்டு முன்னேற வேண்டிய சூழல்
உருவாகும்.
அரசாங்க வகையில் நன்மையேதும்
கிடைக்க வாய்ப்பில்லை. வரவு-செலவு கணக்கை
சரியாக வைத்துக் கொள்வது நல்லது. தொழிலாளர்
ஆதரவு நல்ல முறையில் அமைந்திருக்கும்.
பணியாளர்கள்சீரான முன்னேற்றம் காணலாம். வேலையில் பளு இருந்தாலும் அதற்கான
ஆதாயபலன் கிடைக்கும். சிலர் இழந்த பதவி
மீண்டும் கிடைக்க பெறுவர். சலுகைகள்
கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது.
ஏப்ரல் மே, மாதங்களில் போலீஸ்,
ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.
புதிய சொத்து வாங்கும் முயற்சியில்
வெற்றி கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு
வேலையில் பளு அதிகரிக்கும். சிலர்
எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர்.
முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும்
போகப்போக அது உகந்ததாக அமையும்.
சம்பள உயர்வு வழக்கம் போல்
இருக்கும். வேலை நிமித்தமாக சிலருக்கு
குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும்
நிலையும் உருவாகலாம். சக ஊழியர்களுடன் நட்புணர்வுடன்
பழகி மகிழ்வீர்கள்.
கலைஞர்கள்சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள்
கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல்
போகலாம். உங்களுக்கு வர வேண்டிய விருது
தட்டி பறிக்கப்படலாம். அதே நேரம் வருமான
விஷயத்தில் எந்த பின்னடைவும் இருக்காது.
சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு எப்போதும் போல
இருந்து வரும். தொழில்ரீதியான பயணத்தின்
மூலம் இனிய அனுபவத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள்பொருளாதார வளம் இருக்கும். ஆனால்
எதிர்பார்த்த பதவி கிடைக்காது. அரசு
அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தலைமையின்
சொல்லுக்கு கட்டுப்பட்டு நற்பெயர் காண்பீர்கள். மாற்றுக் கட்சியினரிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மக்கள் நலப்பணிகளில்
ஈடுபட்டு செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
மாணவர்கள் இந்த கல்வியாண்டில் முன்னேற்றத்திற்கு
வழி கிடைக்கும். நல்ல தேர்ச்சியும், உயர்
மதிப்பெண்ணும் கிடைக்கும். விரும்பிய பாடப் பிரிவில் சேர்ந்து
ஆர்வமுடன் படிப்பீர்கள். ஆனால். அடுத்த கல்வி
ஆண்டில் சிரத்தை எடுத்து படிக்க
வேண்டியிருக்கும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்க வேண்டும். எதிர்காலத்தில்
விரும்பிய பாடம் கிடைக்க இந்த
கல்வியாண்டில் கடுமையாகப் படியுங்கள்.
விவசாயிகள் சீராக நடக்கும். அதிக
உடல் உழைப்பை சிந்த வேண்டி
வரும். புதிய சொத்து வாங்கும்
எண்ணம் தடைபடுவதும் நன்மை தான். அதிக
செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். மே மாதத்திற்கு பிறகு
வருமானம் சற்று அதிகரிக்கும். ஏப்ரல்
மே, மாதங்களில்வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
புதிய வழக்கு எதிலும் சிக்க
வேண்டாம். கால்நடை வளர்ப்பின் மூலம்
ஓரளவு ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்கள்பல்வேறு முன்னேற்றமான பலனைக் காணலாம். குழந்தை
பாக்கியம் பெறலாம். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம்
நற்பெயர் பெறுவர். ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
அக்டோபர்,நவம்பர், மாதங்களில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
புத்தாடை, நகை விருப்பம் போல
வாங்கலாம். பிள்ளைகளின் செயல்பாட்டால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.
பரிகாரப் பாடல்: உலகம் யாவையும்
தாமுள வாக்கலும்நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே
சரண் நாங்களேஅருள்மறை முதல்வனை ஆழி மாயனைக்கருமுகில் வண்ணனைக்
கமலக் கண்ணனைத் திருமகள் தலைவனைத் தேவ தேவனை இருபத
முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.
பரிகாரம்: விநாயகரை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு
உதவி செய்யுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் துயரத்தை
போக்கி தைரியத்தை வரவழைக்கும். புதன்கிழமைகளில் குல தெய்வத்தை வணங்கி
ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். கிருஷ்ணரை
வழிபட்டு பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க பிரச்னை நீங்கிநன்மை
மேலோங்கும். வெள்ளியன்று அம்மன் கோயிலில் விளக்கேற்றி
வழிபடுங்கள்
No comments:
Post a Comment