Wednesday, January 28, 2015

பாவங்களைப் போக்கி, பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத ஆலயங்கள்



மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்!

தம்பதி ஒற்றுமை ஓங்க :

தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கர வனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தல மரம். மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியி லிருந்தும் வேளா ங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத்தம்பதியர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கே வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.

வியாபாரம் மேன்மையுற :

மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் பாதையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, செம்பொன்னார் கோயில். இங்கே மருவார்குழலி சமேத சொர் ணபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. வில்வ மரமும், வன்னி மரமும் தல விருட்சங்கள். இங்குள்ள குளம், சூர்ய தீர்த்தம். கல்வியில் தேர்ச்சி பெறவும் வியாபார மேன்மைக்கும் இங்கே வந்து பிரார்த்திக்கிறார்கள்.

கடன் தொல்லை நீக்கும் வள்ளல் :

மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலை வில் உள்ளது, விளநகர் ஆலயம். இங்குள்ள இறைவ னை துறை காட்டும் வள்ளல் என்றும் இறைவியை வேயுறு தோழி அம்மை என்றும் அழைத்து வழி படுகிறார்கள். சம்பந்தர் பாடிய இவ்வா லயத்தில் மெய்ஞானத் தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி, இறைவனைத்தொழுதால் கடன் தொல்லை கள் நீங்கும்.

பேச்சு தரும் பிரசாதம் :

இலங்கை தலை மன்னாரிலிரு ந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கேதீஸ்வரம். இதுவும் இலங் கையிலுள்ள புகழ் மிக்க சிவத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ள்ள இறைவன் கேதீஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் கௌரி அம்மை என்றும் வணங் கப் படுகிறார்கள். இங்கு தரப்படும் திருநீறு பிரசாதம் மிகுந்த சக்தி படை த்தது. பேச்சிழந்தவர் களைப் பேச வைத்த அதிசயம் நிகழ்ந்த ஆலயம் என்கிறார்கள். கொழும்பிலி ருந்து ரயிலில் செல்லலாம். தமிழ் நாட்டிலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று, அங்கிருந்து காரில் பயணிக்கலாம்.

நோய் தீர்க்கும் நாயகன் :

கொடுங்குன்ற நாதர்-குயிலமுத நாயகி, மங்கைபாக நாதர்-தேன் மொழி, காசி விஸ்வநாதர்-விசாலாட்சி ஆகிய மூன்று சந்நதிகள் கொண்டது கொடுங் குன்றம் (பிரான்மலை) மலைக் கோயில். இங்கே காணப்படும் பைரவர், முருகன் சந்நதிகளும் விசேஷமானவை. உறங்கா ப்புளி மரம், தல விருட்சமாக உள்ளது. தேவர்கள் வந்து நீராடிய தேனாழித் தீர்த்தம், நோய் நொடிகளைப் போக்க வல்லது. சம்பந்தர் பாடிய சிறப்புமிக்க சிவாலயம் இது. மதுரையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் கோயில் அமைந்திருக்கிறது. மேலூர், சிங்கம் புனரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களி லிருந்தும் கொடுங்குன்றம் வரலாம்.

வாத நோய் வாராதிருக்க :

மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில். இறைவன் பெயர், திரு ஆப்பு டையார். இறைவி, குரவங்கமழ் குழலி. சம்பந்தர் பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது.

ஆண் சந்ததி அருளும் ஆண்டவன் :

அறந்தாங்கியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம், திருப்புனவாயில். திருவாடானையில் இருந்து 18 கி.மீ. திருப்பெருந் துறையில் இருந்தும் வரலாம். அம்பாள் பெரியநாயகியோடு, விருத்த புரீஸ்வரர் அருட்காட்சி தருகிறார். சதுரக்கள்ளி, குருந்து, மகிழம், புன்னை ஆகிய நான்கு தலவி ருட்சங்க ளைக் கொண்ட ஆலயம் இது. இந்திர தீர்த்தம் முதலான பத்து தீர்த்தங்களும் உண்டு. ஆண் சந்ததி வேண்டுவோர் இங்கே வந்து பிரார்த்திக்கிறார்கள்.

பில்லி, சூனியம், பெரும்பகை அகல :

மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக் கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகி ன்றன. இங்கே எழுந்த ருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.

இருதயக் காப்பு மந்திரம்



கலியுகத்தில் இதய நோயால் பலரும் வருந்துவர் என தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த முனிவர்கள் எம்பிரானிடம் வேண்டி பன்னெடுங்காலம் கடுந் தவம் இயற்றி இருதய நோய் அகல அற்புதமான இறைத் துதிகளைப் பெற்றுள்ளனர். நம்பிக்கையுடன் இத்துதிகளை ஓதி வருவோர்க்கு இருதயம் பலம் அடைந்து நன்னிலை அடைவர். மேலும் இவர்கள் திருச்சி திருவானைக்கோயில் பிரகாரத்தில் உள்ள கொடி மரங்களுக்குச் சுத்தமான 16 பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருதலால் இதய இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள், வீக்கம் நீங்கி சுகமடைவர்.

இருதயக் காப்பு மந்திரம் :

அங்காதங்கால் லோம்னோ லோம்னோ
ஜாதம் பர்வணி பர்வணி
யக்ஷ்மம் ஸர்வஸ் மாதாத் மனஸ்தமிதம்
விவ்ருஹாமி தே
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

இதயக் கவசத் துதி தமிழில் : 

இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்

சிறிதளவு நெய் விட்டு லேசாக வறுத்த 10 பூண்டு பற்களை திங்கட் கிழமை தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கி இதயம் சீராக இயங்க ஆரம்பிக்கும்.

சித்தர்களின் மனையடி சாத்திரம்



சித்தர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்தியவர்கள். தங்களின் நுட்பங்கள், தெளிவுகள் அனைத்துமே இயற்கையின் தன்மையோடு அமைந்தவையே... மனையடி சாத்திரம் தொடர்பாக சித்தர்கள் பாடல்களில் அறிவார்ந்த தகவல்களே நமக்கு காணக் கிடைக்கிறது.

நவீன கட்டிடவியலில் கட்டிடம் கட்டத் துவங்குவதற்கு முன்னர் அந்த இடத்தின் மண்ணின் தன்மையை பரிசோதிப்பதை அறிவோம்.ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் இதை வலியுறுத்தி இருக்கின்றனர். சித்தர்கள் நிலத்தின் தன்மையை ஐந்து கூறுகளாய் கூறியிருக்கின்றனர்.
அவையாவன...

நிறம்
மணம்
ஓசை
தொடுகை
தூளி

நிறம்

வெள்ளை நிறம் , பொன்னிறம், சிவப்பு நிறம், கருமை நிறம், என்று நான்குவகை நிலங்கள் உண்டு என்றும் அவற்றின் நிறத்தை கொண்டு நிலத்தின் தன்மையை அறிவது பற்றி கூறியிருக்கின்றனர்.

மணம்

பால், மலர் , கிழங்கு, நீர் போன்ற மணம் வீசும் நிலங்கள் பெரிய கட்டடங்கள் கட்ட பயன்படும் என்றும், புன்னை , ஜாதிமுல்லை , தாமரை, தானியங்கள், பாதிரிப்பூ, பசு போன்ற வாசம் வீசும் நிலங்கள் வீடு கட்ட உகந்தது என்றும் தயிர் , நெய், தென், எண்ணெய், இரத்தம், மீன் போன்ற மணம் வீசும் நிலங்கள் கட்டிடம் கட்ட விலக்கப்பட்ட நிலங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஓசை

நிலத்தை கொத்தும் போது குதிரை, யானை, மூங்கில், வீணை, சமுத்திரம் இவைகள் எழுப்பும் ஓசை போல் கேட்குமானால் இந்த பூமியானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதலாம் என்கின்றனர்.

தொடுகை

தொட்டுப் பார்த்து அறியும் முறை இது. அதாவது தொடுகையின் மூலம் பசைத் தன்மை, சொர சொரப்பு முதலியவைகளை பார்த்து பூமியை பற்றி அறிதல்.

தூளி

உலர்ந்த காலத்தில் பூமியின் ஒரு பிடி மண்ணை எடுத்து நன்கு கசக்கி கிழக்கு முகம் நோக்கி ஊதினால் அதில் பறக்கும் தூசி, மற்றும் கீழே விழும் மண்ணின் அளவு கொண்டு கொண்டு பூமியைக் தன்மையை கணிப்பது பற்றியும் கூறியிருக்கின்றனர்.
ஆச்சர்யமான தகவல்கள்தானே!

தைபூசம்


அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாவென்று ஓதுவார் முன்.

தைப்பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டுவரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும். தமிழ் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள் தான் தைபூசமாக கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தைப்பூசத்தின் சிறப்புகள்:

இராமனுக்கு தம்பியாகப் பிறந்து அவன் பொருட்டு தனக்கு கிடைத்த அரசுப் பதிவியையும் துச்சமாக மதித்து துறந்த,அப்பேற்பட்ட பரதன் பிறந்த நட்சத்திரம் "பூசம்". பூசத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சகோதர/சகோதரி பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள். தை மாசத்தில் பௌர்ணமியன்று பூசம் நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூசம். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.

திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும். சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது.

சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம். வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் - ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான். அதன் காரணமாகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

` வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி, ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூச விரத முறை:

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையிலும் குளித்து விட்டுச் சிவபூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சரஸ்வதி மகிமை



ஒருவர் வெற்றி பெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல்வார்கள். தோல்வியை மட்டும் விதி என்று கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம் செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது.
இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம் செய்து பயன் பெற்ற பலர் உண்டு.
வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுத வேண்டும என்று சோழ அரசர் ஒருவர் விரும்பி அந்த பொறுப்பை ஒட்டக்கூத்தரிடமும் கம்பரிடமும் ஒப்படைத்தார். சரஸ்வதி தேவியையும் அன்னை சக்திதேவியையும் வணங்கி ஒட்டக்கூத்தரும் கம்பரும் இணைந்து ராமாயண காவியத்தை எழுத ஆரம்பித்தார்கள்.
“பெரும் புலவரான நம்மை கம்பருடன் இணைந்து பணியாற்ற சொல்வதா?” என்று கடும் கோபம் அடைந்தார் ஒட்டக்கூத்தர். ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். இதனால் கம்பருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார். ஆனாலும் கம்பர் எதையும் அறியாதவர் போல் அமைதியாக இருந்து அரசர் தந்த இலக்கிய பணியை சிறப்பாக செய்து கொண்டு இருந்தார். ஒட்டக்கூத்தரின் ஒத்துழைப்பு இல்லாததை பற்றி கம்பர் கவலைப்படவில்லை.
ஆனால் ஒட்டக்கூத்தரோ விரோத மனதுடன் இருந்ததால் அந்த நேரத்தில் அவருக்கு சரஸ்வதிதேவியின் அருளும் கருணை பார்வையும் முழுமையாக கிடைக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தை ஒட்டக்கூத்தர் தனியாக இயற்றினாலும் அதற்கான முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஞானம் இருந்தால் மட்டும் போதாது. கர்வம் இருக்கக் கூடாது. கர்வம் உள்ள மனதில் எந்த யோகமும் தங்காது. அதுவும் சரஸ்வதி தேவி, வெள்ளை நிறத்தை விரும்கிறவள். அந்த வெள்ளை நிறத்தில் ஒரு சிறு கறை பட்டாலும் அது மிகவும் பளிச்சென்று தெரியும். அதுபோல் தன்னுடைய அருளால் கல்வியறிவு பெற்றவர்கள், கர்வத்தோடு இருந்தால் அது சரஸ்வதிதேவிக்கு பிடிக்காமல் அவர்களின் மேல் கோபப் பார்வை செலுத்துவார். இதனால் ஞானம் கிடைத்தாலும் அதன் மூலமாக பெருமை கிடைக்காது.
வால்மீகி இராமாயணத்தை இயற்றியவர்
சோழ அரசர் ஒருநாள், “இராமாயண காவியத்தை எதுவரை இயற்றினீர்கள்.?“ என கேட்டார் கம்பரிடமும் ஒட்டக்கூத்தரிடமும். கம்பர் மட்டும்தான் இராமாயண காவியத்தை அதிக அளவு எழுதினார். இதை அறிந்த அரசர் மிக மகிழ்ச்சியடைந்து, கம்பரை பாராட்டினார். இதை ஜீரணிக்க முடியாத ஒட்டக்கூத்தர், “அரசே…இனி கம்பரே இராமாயண காவியம் எழுதி முடிக்கட்டும்.” என்று கூறி சொல்லி விலகி கொண்டார்.
இராமாயணத்தை சிறப்பாக இயற்றிய பிறகு, அதை சபையில் காவிய பாடல்களாக பாடினார் கம்பர். சரஸ்வதியின் அருள் பெற்றவராக கம்பர் திகழ்ந்ததால், சபையில் இருந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிலை, கம்பரின் பாடல்களை கேட்டு மகிழ்ந்து தலையசைத்து கர்ஜனை எழுப்பியது. இதை கண்ட அரசரும், மற்றவர்களும் அதிர்ச்சியும் – ஆனந்தமும் அடைந்தார்கள்.
இப்படி சரஸ்வதி தேவியின் அருள் இருந்தால்தான் எந்த கலைகளும் எளிதாக வரும். அதில் புகழ் பெறுவார்கள். நன்மை தீமைகளை சிந்திக்கும் ஆற்றலும், தைரியசாலியாகவும் இருப்பார்கள். கற்ற கல்வியின் பயனால் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
சரஸ்வதியின் அருள் பெற அன்பான உண்மையான பக்தியுடன் வழிப்பட்டு அதன் பயனால் சிறந்த கல்வி அறிவு பெறலாம்.

குரு பக்தி



‘ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர். ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன்?' என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்துவிட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால் தான்,

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:|

என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சுலோகத்தில் குருவுக்கும் பரமாத்மாவுக்கும் அபேதம் சொல்லியிருப்பது ஒரு விசேஷம். Incidental - ஆக இதிலேயே இன்னொரு விசேஷம், இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த சுலோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு அபேத பாவமும் உண்டாகி விடும்.

ஜகத்தை சிருஷ்டிப்பது, பரிபாலிப்பது போன்ற பல காரியங்கள் ஈசுவரனுக்கு இருக்கின்றன. அவை எல்லாம் குருவுக்கு இல்லை. அவனுக்கு ஆபீஸ் உண்டு. இவருக்கு ஆபீஸ் இல்லை. ஆபீஸ் இருக்கிறவனிடம் போய்த் தொந்தரவு கொடுப்பதைவிட ஆபீஸ் இல்லாமல் சும்மா இருக்கிறவரிடம் நம் காரியத்தை மிக எளிதாக முடித்துக் கொண்டு விடலாம்.

ஈச்வரனுக்கு என்ன என்ன உத்தமமான குணங்கள் எல்லாம் இருக்கின்றனவோ அவை எல்லாம் இந்த குருவிடத்தில் இருக்கின்றன. இவர் சுத்தமானவர். பொய் சொல்லாதவர். வஞ்சனை தெரியாதவர். இந்திரியங்களை எல்லாம் வென்றவர். கருணை நிறைந்தவர். மகா ஞானி. இவரைப் பிரத்யக்ஷமாக பார்க்கிறோம். பகவானையோ பிரத்யக்ஷத்தில் பார்க்க முடியவில்லை. ஆகவே குருவின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு பக்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், ஈசுவர பக்தியினால் நமக்கு என்ன அனுகூலங்கள் உண்டாகின்றனவோ அத்தனையும் சுலபமாக உண்டாகிவிடும். அதனால் தான் குருபக்தி உயர்ந்தது என்று சொன்னார்கள்.

ஆனால் தெய்வ பக்தியை மறக்கக் கூடாது. இந்த குருவை இவனோடு சேர்த்து வைப்பதே தெய்வந்தானே? தெய்வ அநுக்ரஹம் இல்லாவிட்டால் இந்த குருவை இவன் எப்படி அடைவான்?

தெய்வாநுக்ரகத்தாலேயே ஒருத்தனுக்குக் கிடைக்கிற மூன்று பெரிய வாய்ப்புகள்: ஒன்று, மநுஷ்ய ஜன்மா கிடைப்பது. இரண்டு, சத்ய தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறப்பது. மூன்று, மகா புருஷனான ஒரு குரு கிடைப்பது என்று ஆசார்யாள் 'விவேக சூடாமணி' யின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார்.

எல்லோருக்கும் எக்காலத்திலும் குரு ஈச்வரன்தான். தக்ஷிணாமூர்த்திதான். நம் குருவுக்கும் அந்த குருவுடைய குருவுக்கும் அவருடைய குருவுக்கும் ஞானம் எப்படிப் பூர்ணமாக ஏற்பட்டிருக்கும்? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு குருவைச் சொல்லிக்கொண்டே போனால் கடைசியில் ஒருத்தருக்கு சாக்ஷாத் ஈசுவரனேதான் குருவாக இருந்து ஞானத்தைத் தந்திருக்க வேண்டும் என்று தெரியும். அதனால்தான் தெய்வத்தை மறக்கக் கூடாது என்றார்கள்.

இதையே வேறு விதமாகவும் சொல்வதுண்டு. குரு, ஈசுவரன் என்ற இரண்டு பேர் என்று வைத்துக் கொள்ளாமல் ஈசுவரனே குருவாக வந்திருக்கிறான் என்று வைத்துக் கொண்டு விட்டோமானால் குரு பக்தி, ஈசுவர பக்தி என்ற இரண்டு தனித்தனியாகப் பண்ணவேண்டாம். குருவே ஈசுவரன் என்று கருதி அந்த குருவான ஈசுவரன் ஒருத்தனிடத்திலேயே பூர்ண சரணாகதி பண்ணிவிடலாம்.

குரு பரம சுத்தமானவராக, உத்தமமானவராக இல்லாவிட்டாலும்கூட, இவர் மூலமாக நாம் நித்திய சுத்தனும் உத்தமோத்தமனுமான ஈசுவரனையே பக்தி பண்ணுவதால், அந்த ஈச்வரனே இவர் மூலமாக நமக்கு அனுக்கிரகம் பண்ணிவிடுவான். இதனால் தான் குருவையே பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்த மூன்றுக்கும் ஆதாரமான பரப்பிரம்மம் என்று எடுத்த எடுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு : குருர் தேவோ மஹேச்வர :|
குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம :||

Thursday, January 8, 2015

அக்னிசாட்சியாக திருமணம் ஏன்?


இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன்.
திருமண உறுதி (நிச்சயதார்த்தம்):
திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.
சடங்கு முறைகள் :
அவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும்.
இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும்.
மணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும். சான்றோர்கள் மஞ்சள், அரிசி தூவி ஆசீர்வதித்து பின் மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும்.
தமிழ்திருமுறை, திருமண தீபம்:
மனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும்.
அம்மை அப்பர் கலச வழிபாடு:
மூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும்.
நவகோள் வழிபாடு:
முழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும்.
முளைப்பாலிகை வழிபாடு:
தமிழ் திருமணங்களில் முளைப்பாலிகை வழிபாடு மிக முக்கியமாக இடம் பெறுமாம் திருமண விழாவில் இறைவனின் திருவுளத்தை அறிந்த கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும்.
மணமக்களை கன்னியர்களாக வரவழைத்தல்:
மணமகள், மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள், முளைப்பாலிகை இவற்றை வணங்க செய்து புண்ணியகவாசம் செய்த நீரை மணமக்கள் மீது தெளித்து புத்தாடை மற்றும் தங்க நகைகளை கொடுக்க வேண்டும்.
மங்கள நான் வழிபாடு:
மங்கல நானை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க வேண்டும். மங்கல நாணில் உள்ள திருமாங்கல்யத்தை மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தை தொட்டு கொண்டு தமிழ் வேத மந்திரம் அல்லது அபிராமி அந்தாதி பாடலை பாட வேண்டும்.
முன்னோர்கள் வழிபாடு:
வந்தவுடன் மணப்பொங்கல் வைத்திருப்பார்கள். அதற்கு பூஜை செய்து விட்டு, முன்னோர்கள் உருவப் படத்தையோ அல்லது அருவமான மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல பொருட்கள் கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்கள் கொண்டு தமிழ் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.
பாத பூஜை:
பெற்றோர்களுக்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும்.
மங்கல நான் ஆகுதி:
அவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்கப்பட்ட மங்கல நாணை குண்டத்தில் அருகில் வைப்பார்கள். திருமந்திரம் ஓதி மணமக்களை தொட்டு வணங்கி தமிழ் வேதியர் திருமந்திரம் ஓதி பெரிய மனிதரிடம் மங்கல, நானை கொடுக்க அவர் மணமகனிடம் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சு இட வேண்டும்.
விளக்கேற்றும் உரிமை, பட்டம் கட்டுதல்:
மணமக்கள் பின்புறம் நாத்தனார்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி நிற்க வேண்டும். தாலி கட்டிய பிறகு மணமகளின் அப்பா, மணமகளின் தாய்மாமன் இவர்கள் மணமகளுக்கு நெற்றியில் பட்டம் கட்ட வேண்டும்.
அக்னி வலம் நிகழ்ச்சி:
மணமகன் சுண்டு விரலோடு மணமகள் சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்னி வலம் வரவேண்டும். காமாட்சி அம்மன் தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு பெண் செல்ல வேண்டும். மணமகளுக்கு பின்னால் முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு சிறுமிகள் செல்ல வேண்டும்.
அம்மி மிதித்தத்தலும் மெட்டி அணிவித்தலும்:
அம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சி அக்னி வலம் வரும் பொழுது மூன்றாவது சுற்றில் நடைபெறும் அம்மி, என்பது கருங்கல்லால் ஆனது. இது உடையுமே தவிர வளையாது. மணமகளானவள் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற இந்த அம்மியை போல் உழைத்து தேய்ந்து உடைய வேண்டுமே தவிர, குடும்ப கௌரவத்தை என் இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன் என்று உறுதி கூறும் நிகழ்ச்சி.
ஆசீர்வாத நிகழ்ச்சி:
வேதியர் தமிழ் வேத மந்திரம் ஓதி மணமக்களுக்கு திருநீறுஇட்டு ஆசீர்வதித்த பின் பெரியோர்கள் தத்தம் குல வழக்கப்படி மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவார்கள். இறுதியில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில் அமர செய்து வாழ்த்துவார்கள்.