Tuesday, September 23, 2014

மகாளய அமாவாசை வழிபாடு

ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள் மகாளய அமாவாசை என அழைக்கப்படுகின்றது.
புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தத்தமது சந்ததியர்களை காணவருகின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் வரும் இக் காலம் மகாளய பட்ச காலமாக போற்றப்படுகின்றது. (மகா+ஆலயம்=மகாளயம்). எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வீட்டில் காலம் சென்ற மூதாதயரின் ஒருவரது படமேயாயினும் இருக்குமானால் அதன் முன் இக் காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.
அல்லது பழவர்க்கங்களில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர் களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.
மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும். மகாளய பட்ச அமாவாசை வரும் 26-ந்தேதியாகும். அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், "என்றோ ஒரு பாட்டன் மூலம் இன்று வரை நம்குலம்'' என்ற நிலையில் இருந்த நாம் இனி வரும் காலங்களில் நாம் பாட்டன்களாகவே இருக்கும் நிலையும் சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.
கடவுளுக்கு நாம் செய்யும் பூஜையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கினைத்தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்கின்றோம். கடவுளையே நமக்கு அடையாளம் காட்டிய அந்த அன்பு ஜீவிகள் நாம் செய்யும் பூஜையில் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவதில் தெய்வத்திற்கு நிகரான வரம் தருகின்றார்கள். நாம் கடவுளிடம் செலுத்தும் அன்பைப் போல் நமது முன்னோர்களிடமும் செலுத்தினால் கை மேல் பலன் கிட்டும்.
`நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. நாமும் நமது மூதாதயரை எண்ணி பித்ரு பூஜையை செய்வதன் மூலம் மூதாதயரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.
நோயில் இருந்து விடுதலை:
பணம் உள்ளவர்கள் தான் ஆடம்பரத்துக்காக பூஜை செய்கின்றனர். நமக்கு ஏன் இந்த வேலை என யாரும் புறக்கணிக்க வேண்டாம். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.
பிதுர் தேவதைகள்:
நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.
1. நம் பித்ருக்கள் (மண்),
2. புரூரவர் (நீர்),
3. விசுவதேவர் (நெருப்பு),
4. அஸீருத்வர் (காற்று),
5. ஆதித்யர் (ஆகாயம்)
என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன. ஆனால் இëக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது.
இவ்அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழவர்க்கங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதர வற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் வெற்றியாளர்களே!
புனித நீர் ஸ்தலங்கள்:
காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.
காருண்ய பித்ருக்கள்:
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.
இவர்கள் "காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
பலன்கள்:
நீண்ட நாள் கடனாளியா நீங்கள்? இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும். உத்தி யோகம் கிடைக்கும். உத்யோக உயர்வுகள் உண்டாகும். தடையாக இருந்த திருமண வாழ்வு சுகமாக தொடரும். திருமணத் தடை அகலும்.
இல்லறம் இனிக்கும் குழந்தைகள் கல்வியில் உயர்வு பெறுவர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது. கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும்.
சீரான மழை கிடைக்கும். அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். புகழ் பரவும். புன்னகை தங்கும், பொன்நகை அதிகரித்து கிடைக்கும், குடும்ப ஒற்றுமையாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்

மஹாளய அமாவாசையும் நமது ஏழு தலைமுறையும் - அரிதினும் அரிய உண்மைகள்!

ஹாளய அமாவாசை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் சொல்லிகொண்டே போகலாம். பொதுவாகவே அமாவாசை தினத்தை மிகவும் புனிதமாக கருதுவர். ஆகையால் தான் அதற்க்கு 'நிறைந்த நாள்' என்ற பெயரும் கூட உண்டு.

நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகும் எவ்வித குறைகளும் இன்றி நலமுடன் வாழ, இல்லறம் தழைக்க, நமது முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசி மிக மிக அவசியம். அவர்களுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர மத ரீதியிலான சம்பிரதாயங்களை புறக்கணித்துவிட்டு, நீங்கள் என்ன தான் புண்ணிய காரியங்கள் செய்தாலும், கோவில் கோவிலாக சுற்றினாலும் அது பலன் தராது. காரணம், நீங்கள் செய்யும் சிரார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் மற்றும் அவரவர் வழக்கப்படியிலான சம்பிரதாயங்கள் மூலம் தான் அவர்களுக்கு மேல் உலகத்தில் கிடைக்கவேண்டிய உணவும், நீரும் கிடைக்கும். நீங்கள் அவற்றை செய்யாது தவிர்க்கும்போது பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும்.

பலரின் வீடுகளில் வசதியிருந்தும், தகுதியிருந்தும் சுபகாரியத் தடைகள் ஏற்படும் காரணம் இந்த பித்ரு சாபம் தான். 

அப்படிப்பட்டவர்கள், இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கடைசி நேரத்தில் சொன்னா நான் என்ன பண்ணுவேன் என்று எவரும் கலங்க வேண்டியதில்லை. கீழே தரப்பட்டுள்ள முழு கட்டுரையையும் படியுங்கள். உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள் அடுத்த முறை, நன்கு திட்டமிட்டு மனநிறைவோடு செய்யுங்கள். பலன் பெறுங்கள்.


மஹாளயம் என்னும் மகத்தான் நாள் !

இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயச் சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நல்ல நல்ல நிலைக்கு உயர்ந்ததர்க்கு நன்றி சொல்வதற்கும் ஒவ்வொரு அமாவாசை அன்று முன்னோருகளுக்கு (பித்ருக்களுக்கு) வழிபாடு செய்கிறோம்.

பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு உணவு கொடுப்பது போலவும், அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.

மஹாளய பட்ச அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருகின்றனர்.

இந்த நாட்களில் தினமும் அன்னதானம் செய்யவேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் தம் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் புரட்டாசி மாத அமாவாசை அன்றாவது அன்னதானம் செய்யலாம். வசதியிருந்தால் திருவண்ணாமலை போன்ற கோவில்களில் அன்னதானம் செய்யலாம். இதுவும் முடியாவிட்டால் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப் பழங்கள் கொடுக்கலாம்.

பித்ருக்களுக்கு விசேஷ தினம்

பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பொது அமமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.

புரட்டாசி மாதத்தில் சூரியனின் தென்பாகம் நடுப்பக்கம் பூமிக்கும் நேராக நிற்கிறது. அப்போது சந்திரனின் தென்பாகமும் நேராக நிற்கிறது. இந்த தருணமே பித்ருக்களுக்கு விசேஷ தினமாகும்.

7 தலைமுறைகளுக்கு மரபணுக்கள்

மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் 28 அம்சங்கள் தாய், தந்தை உட்கொள்ளும் உணவில் இருந்து உண்டாகிறது. மீதமுள்ள 56 அம்சங்கள் அவனது முன்னோர்கள் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக தந்தையிடம் இருந்து 21 அம்சங்களும், பாட்டனாரிடம் இருந்து 15 அம்சங்களும், முப்பாட்டனாரிடமிருந்து 10 அம்சங்களுமாக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. மீதமுள்ள 10 அம்சங்களில் நான்காவது மூதாதையரிடமிருந்து 6 -ம், ஐந்தாவது மூதாதையரிடமிருந்து 3 -ம், ஆறாவது மூதாதையரிடமிருந்து 1 -ம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன. 7 தலைமுறைக்கு மரபணுக்கள் தொடர்பு உள்ளது.

இதனால் தான் தலைமுறை 7 என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள். இதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும் ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது.

பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து ஆசி வழங்கி மகிழ்கிறார்கள். அன்னதானமும் தீப வழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் அதனால் சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.

சூரியோதய நேரத்தில் அமாவாசை

தர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம். திவசத்தின் பொது இங்கே நாம் கொடுக்கின்ற எல், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது.

சூரிய, சந்திரர்கள் 12 டிகிரிக்குள் ஒருங்கிணையும் நாள் தான் அமாவாசை ஆகும். . 'அமாசோமவாரம்' என்று கூறப்படும் இந்த நேரத்தில் அரசமரத்தை வளம் வருவது நன்மை பயக்கும். அரசமரம் பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன், என்னும் மும்மூர்த்திகளில் சொரூபமாக சிறப்பித்து சொல்வார்கள். மஹாளய அமாவாசையான நாளைய தினம் பித்ருகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி வாழ்க்கையில் உயரலாம்.

Sunday, September 21, 2014

சனி யாரை பாதிப்பதில்லை


'சனி கொடுக்க எவர் தடுப்பார்'
1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.
4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.
6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.
7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை.
8. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.
9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.
10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.
11. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
தீமை தரும் சனி பார்வை
1. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
2. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
3. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.
4. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.
5. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.
6. பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனிக்கு பிடிக்கும்.
7. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.
8. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.
9. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில்¢ ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.
10. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.
11. தாயிக்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.

ஆன்ம விசாரம்

ஆன்மாவை காண முடியாது. ஆனால் உணரலாம். நல்ல தெய்வீக சிந்தனைகள் , பகவத் நாம ஸ்மரணம் சத் சங்கம் பூர்வ புண்யம் எல்லாம் வாய்க்கும் பொழுது ஒருவருக்கு இதைப்பற்றி உணரும் வாய்ப்பு அமையும்.
இதில் அத்வைதம் ஆத்மா ஒன்றே என்று சொல்லும். மற்றவை ஆன்மா பல என்ற நிலயை சொல்லும். இந்த பயிற்ச்சிகளுக்கு இந்த கேள்விகள தேவையில்லை. நாளடைவில் அதுவாக புரிகிற அனுபூதி வாய்க்கும்.
பிராணாயாம்ம் மிக முக்கியமான பயிர்ச்சியாகும்.

சரியான பூரக கும்பக ரேசகங்களை கால அளவுப்படி செய்து வரும் சாதகனுக்கு நல்ல ஆற்றல் சித்திக்கும்.பிராணாயாம்ம் செய்யும் பொழுது மூல பந்தம் செய்வது அவசியம். அபான்னையும் மேலேற்றி பிரான்னை சந்திக்க வைக்கும். இடையறாத பயிற்சியால் சுழுமுனையில் பிராணனை சேர்க்கும் பொழுது பிராணாயாம்ம் சித்தி ஆகும். மித உணவும் சாத்வீக உணவும் அவசியம். காய் கனிகள் கீரை வகைகள் சேர்க்கலாம். பாலும் தயிரும் சேர்ப்பது நலம். இரவில் தயிர் சேர்க்க கூடாது.

ஆன்மா உடலில் தரிக்கும் இடங்கள் முப்பது.இவற்றின் மூலாம் நாம் ஆன்ம பிராபவத்தை உணர முடியும்.

1, கபாலத்தில் பிரம்மரந்தரம்-உள்:ளொளியால் பிரம்ம ஞானம் உதித்து ஸ்தித பிர்க்ஞை நிலையை அடைய செய்வது.உயர்ந்த ஞானத்தின் நிலை இது.

2. சத்யம்-உச்சந்தலைக்கும் புருவ மத்திக்கும் நடுவில் இருப்பது. இது பயிலும் ஸ்தானத்தில் உறைவிடம்

3.ஆக்ஞை-புருவ மத்தி-தேஜஸின் உறைவிடம்.

4.தப:-ஸ்திரதன்மை விளையுமிடம். 3க்கும் 5 க்கும் இடையில்.

5.ஜீவன சக்கிரம்-மூக்கின் மூலஸ்தானம்.கட்டமைந்தெழிலை விளைவிக்கும் ஒஜஸ் உதிக்குமிடம்

6.ஜன:உற்சாகம் உதிக்கும் இடம்.5க்கும் 7க்கும் நடுவில்.

7.விசுத்தி- கண்டம்.தூய்மையின் பிறப்பிடம்

8.மஹ: அச்சமின்மையையும் துணிவையும் தருமிடம்.7க்கும் 9க்கும் நடுவிலிருப்பது.

9.அனாகதம்-இங்கு உள்ளொலி கேட்கப்படும் பொழுது தெய்வ தரிசனகள் நிகழும். பரம் ஆன்ந்த அனுபவத்தின் ஆரம்பம்.இறையின் மீது பற்றை அதிகரிக்க செய்யுமிடம்!

10.ஸ்வ: உடல் அனைத்துக்கும் நலம் விளைவிக்குமிடம்-9க்கும் 11க்கும் இடையில்.

11.மணிபூரகம்-நாபிகமலம்-பொறுமை ஆற்றல் சாமர்த்தியம் தருவது.

12.புவ: நோயற்ற தன்மை சித்திக்கும் இடம். 11க்கும் 13க்கும் நடுப்பட்ட்து.

13.ஸ்வாதிஷ்டானம்-வீர்யதுக்கான இடம்.

14.பூ: சத்வ சுத்தி உண்டாகும் இடம். 13க்கும் 15க்கும் நடுவில்.

15. மூலாதாரம்-குல சஹஸ்ராரம். அகண்ட பிரம்மசர்யம்-ஊர்தவ்ரேதஸ்-வலிமை ஏற்படும்

16.போதம்-மூளையின் மேற்கு பாகத்தில் இருப்பது.இதன் ஒளியால் புத்தி நேர் பாதையில் செல்லும்

17.மேதா-சிறு மூளையில் இருப்பது. விஞ்ஞான நுட்பங்களை அறிய வைப்பது

18.சரஸ்வதி-16ம் 17ம் கூடுமிடம். இது ஒளிரும் பொழுது வாக் வசமாகும்.

19.அமுர்தம்-மூளையில் சுரக்கும் திரவம்

20-ஜோதிஸ்-நெற்றி-வாழ்வில் ஜோதி ஏற்படுவது இதனால்

21 மனம்-இருதயத்தில் உள்ளது

22-சித்தம்-மனத்தின் அகத்தே இருப்பது

23.ஆத்ம ஸ்தானம்-சித்த்த்தினுள் ஆன்ம ஒளி திகழ திகழ ஆன்மா இருதயத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை ஏறி செல்வது

24.திருஷ்டி-கண்ணில் உள்ளது. தெய்வீக பார்வை தருவது.

25.ஸ்ருதி-காதில் உள்ளது-நல்ல தெய்வீக ஒலிகளை கேட்க வைக்கும்

26.பிராணன்-இது ஒளிர்வதால் நீண்ட ஆயுள்

27ஸ்வரம்-நாக்கிலும் கழுத்திலுமுள்ளது. இனிய குரல் வளம் ஏற்படும்.
த்வனியில் கம்பீரமும் பெரும் ஆகர்ஷணமும் சித்திக்கும்.

28.ஸ்பர்சம்-தோலிலுள்ளது.இதன் உள்ளொளியால் தெய்வீக ஸ்பரிசமும் பற்றட்ர தன்மையும் விளங்கும்.

29.அக்னி-வயிற்றில்-சமத்துவ தன்மை எழில் விளங்கும்

30.குண்டலினி-முதுகு தண்டின் கீழ் மூலாதாரத்தில் உள்ளது. மூன்றரை அடி நீளத்தில் பாம்பு போல தன் வாலை கவ்வியபடி துயிலில் இருப்பது.இது விழித்தெழத்தான் பிராணாயாம்ம் மற்ற தீக்ஷிகள் எல்லாம். இது வேலை செய்யும் பொழுது பேரொளியுடன் விளங்க வைக்கும்.

Saturday, September 20, 2014

பிரதோஷ விரதமும், பலன்களும்



சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண் ணியத்தை பெறு கிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

நாள் : தேய்பிறை, வளர்பிறை, திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்

விரதமுறை : 

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதல் இந்த விரதத்தை தொடங்கலாம். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

பிரதோஷ வழிபாடு பலன்:

ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்
திங்கள் சோம பிரதோஷம் - நல்எண்ணம், நல்அருள் தரும்
செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும்
வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:

1. பால் நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் பல வளமும் உண்டாகும்
3. தேன் இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் செல்வம் பெருகும்
6. நெய் முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் நல்ல மக்கட்பேறு கிட்டும்
8. சர்க்கரை எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் சுகவாழ்வு
10. சந்தனம் சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் தெய்வ தரிசனம் கிட்டும்

பலன் : 

கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். பாவங்கள் நீங்கும்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

Friday, September 19, 2014

சென்ற பிறவி ரகசியம்

நான் பிறக்கிறோம்....

எங்கிருந்து வந்தோம் தெரியாது? 

எங்கே போக போகபோகிறோம் அதுவும் தெரியாது.  இடை பட்ட காலத்தில் இது ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் நடிகர்கள்.

யார் பெத்த பொண்ணுக்கோ கணவராக,  யாரோ ஒருவருக்கு மனைவியாக,  பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பனாக, பெற்ற தாய் தந்தையருக்கு மகனாக. மாமனாக, மச்சானாக, சகோதரனாக, சகோதரியாக  இப்படி பல வேடங்களை போடுகிறோம்.

நாடகம் முடிந்ததும் போகிறோம்.  இந்த ரகசியம் அறிந்தது பிரம்மா என்கிறார்கள். அந்த ரகசியத்தை முன் பிறவி என்கிறோம்.

முன் பிறவி ரகசியம் என்பதே, அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, அக்கினி நீருற்றை கடந்தது சென்றால்..கிளியின் உடம்புக்குள் இருக்கும் மந்த்திரவாதி உயிர் மாதிரி, பல்வேறு மர்மங்கள் நிறைந்தது முன் பிறவி ரகசியம்.
இதை அகத்தியர் தீர்த்து வைகைக்காமல் இல்லை.  தன் காலத்திலேயே ஓலை சுவடிகளில் இதை பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார்.

இப்போது பிறவி எடுத்திருக்கும் மனிதர்களில் யாருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே ஓலைகளில் எழுத பட்டு இருக்கிறது. 

இது உண்மையே. 

ஆனால் இதை ஒரு தொழிலாக கொண்டு  பலர் செய்யும்  தகிடு தித்தங்களை பற்றியும், இதை வைத்தே ஏமாற்றி பிழைப்பவர்களை பற்றியும் தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன். 

பொதுவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் கர்ம வினை கிரகம் என்கிற ராகு கேது முக்கியமானவர்கள்.  இதற்கு அடுத்த படியாக  குரு முக்கியமானவர். முதலில் ராகு கேது.

இருப்பது ஒன்பது கிரகங்கள்.  இதில்  ராகு கேது தவிர்த்து,  ஏனைய ஏழு கிரகங்களும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர கிரகங்கள் என்று சொல்லபடுகிறது. 

என்றாலும் இந்த ஏழு கிரகங்களும் தேவர்களே. மீதம் இருக்கும் ராகுவும் கேதுவும் அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள்.  இரக்க குணம் குறைந்தவர்கள், துர்சிந்தனை நிறைந்தவர்கள்.

இவர்கள் 1 . 7 இல் இருந்தால் நாக தோஷம் என்றும்,  5 . 9 இல் இருந்தால் பிரம்மகத்தி தோஷம் என்றும் சொல்ல படுகிறது.

அதாவது முன் பிறவியில் பாம்பு புற்றை உடைத்து,  பாம்புகளை அடித்து கொன்ற பாவம் இந்த பிறவியில் நாக தோஷமாக வருகிறது என்பார்கள்.  இந்த நாக தோஷம் என்பது ஜோடி பாம்புகளை கொன்றவர்களுக்கும், ஜோடி பாம்புகளில் ஒன்றை கொன்றவர்களுக்கும் வருகிறது.

அதனால் தான் திருமண வாழ்க்கை அமைய தடை,  மீறி அமையும் வாழ்க்கையில்  குழப்பம், கணவன் மனைவிக்கு இடையே  கருத்து வேறுபாடுகள்,  பிரிவினை, விவகாரத்துகளையும் தந்து விடுகிறது.

அதே சமயம் 5 . 9 இல் இருக்கும் பொது பிரம்மகத்தி தோஷம் என்று சொல்ல பட்டாலும்,  புத்திர சோகத்தை தருகிறது.  காரணம் குட்டி பாம்புகளை கொன்ற குற்றம்.

இப்பிறவில் குழந்தை பிறப்பில் தாமதம், பிறந்த பிள்ளைகளால் கவலை, பெற்றோரை மதிக்காத துர்குணம் கொண்ட பிள்ளைகள்,  பிறந்த பிள்ளைகள் அகால மரணம் என்று புத்திர சோகத்தில் ஆழ்த்துகிறது.

சரி.... அடுத்த தகவலுக்கு வருவோம்.

என்னதான் ரேகை கொண்டு சொன்னாலும்,  ஜாதகம் கொண்டுதான் பலன் சொல்லபடுகிறது.   ஜோதிட சாஸ்த்திரத்தில் குருவும், சூரியனும் சிவனை குறிக்கும் கிரகங்கள். 

இந்த சூரியனோடும், குருவோடும் சனியோ,  ராகுவோ, கேதுவோ பிறப்பு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால்,  அது ஒரு வகையான பிரம்மகத்தி தோஷம். 

அதாவது... முன் பிறவியில் சிவன் சொத்தை அழித்தவர்கள், சிவனடியார்களை  வதைத்தவர்கள்,  சிவ நிந்தனை செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பிறவியில் பல துன்பங்களை சந்திக்க வேண்டி வருமாம்.

மேலும் இந்த பிறவி தொடர்பாக ஒரு தகவலும் உண்டு.

உதாரணமாக பரணி  நட்சத்திரத்தில் ஒருவர் பிறப்பதாக வைத்து கொள்வோம்.   அவரின் ஆரம்ப திசை சுக்கிர திசையாக அமையும்.  சுக்கிர திசை என்பது ௨௦ வருடம் கொண்டது. 

ஆனால் அவர் பிறக்கும் போது இருப்பு  திசையாக  5 வருடம் 6 வருடம் அல்லது 10 வருடம்  என்று குறைந்த அளவே தசையாக வருகிறது. 

காரணம் என்ன?

முன் பிறவியில் பெற்ற ஜென்மாவில் அவரின் இறுதி காலத்தில் சுக்கிர திசை நடப்பில் இருந்த போது தான் இறந்து போனார்.  சுக்கிர திசையின் மொத்த வருடமான 20 வருடத்தில்,  இறக்கும் போது இருந்த மீதம் என்னவோ, அதையே  இப்பிறவில் மீதமுள்ள திசையாக கொண்டு பிறந்த்திருப்பார் என்பது ஜோதிட ரகசியம்.

நாடி ஜோதிட பிரகாரம் குரு தான் அந்த ஜாதகரை குறிக்கும் கிரகம்.  இப்போது அவர் ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதற்கு முதல் வீட்டில்  சென்ற பிறவியில் குரு இருந்திருப்பார்.  மற்ற கிரகங்கள் மாறாது.

ஒருவர் சென்ற பிறவியில் எந்த குலத்தில் பிறந்தார் என்பதை,  இப்போதைய சந்திரன் இருக்கும் இடத்திற்கு 5 ம் இடமே சொல்லும்.

ஒருவர் மீன ராசியில் பிறந்தால்,  அவர் ராசி படி 5 ம் இடமாக கடகம் வருகிறது,  அந்த வீட்டற்கு உரிய கிரகம் சந்திரன் வருகிறார். 

சந்திரன்  கடல் கடந்த வாணிபத்தை குறிப்பவர்.   அதாவது வியாபாரம் செய்யும் குடும்பம்.   ஆக ஜாதகர் வைசிய குலத்தில் பிறந்திருப்பார்.

அந்த வகையில் கீழ்காணும் வகையில் அட்டவணை அமையும். இது நாடி ஜோதிட விதி.

நீங்கள் பிறந்த ராசிக்கு 5 ம் இடமாக .......

மேஷம்,  தனுசு  - சத்திரிய குலம்.   அதாவது அரச வம்சம், ஜமீன் பரம்பரை, அரச நிர்வாக அதிகாரிகள் போன்ற குலத்தில் பிறந்தவர்.

ரிசபம், கடகம், கும்பம், மீனம், வைசிய குலம்அதாவது... வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.

மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம்  பிராமண குலம்.  அதாவது கோவில் பூஜை  மற்றும் புரோகிதம் செய்யும் குலத்தில் பிறந்தவர்.
கன்னி துலாம்  சூத்திர குலம். 

இங்கே சொல்லப்படும் சூத்திர குலம் என்பது, உழைப்பாளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும்.  அவரின் தாய் தந்தையர் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதும் புலனாகிறது. 

வழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள்

வசி வசி என்று தினம் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும் என்றார்கள் நம் சித்தர்கள். 

வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம் ஆட்டி படைக்கிறது  என்று பார்ப்போம். 

நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது, சிலர் குறுக்கு வழியில் கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.

ஒரு தாய் தன் மகன் மீது அன்பு செலுத்துகிறாள். அந்த அன்புக்கு போட்டியாக மருமகள் என்பவள் வந்து தன்னை உதாசீன படுத்தும்போது அவர்கள் இருவரையும் தன் கட்டுக்குள் கொண்டுவர அவள் கையில் கொண்டு வரும் ஆயுதம்தான் இந்த வசியம்.

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணின் மைந்தருக்கு மாமலையும் கடுகளவாம் என்கிறார் பாரதிதாசன். 

அந்த கடை கண் பார்வை தனக்கு கிடைக்காத போது, அந்த இளைஞனின் கண்ணில் படுவதுதான் இந்த வசியம் என்கிற போர் ஆயுதம்.

ஒரு பெண் தன் கணவன் மீது மாறாத அன்பு வைத்திருக்கிறாள். அவனுக்கு வேறு தொடர்பு ஏற்பட்டு தானும் தன் குடும்பமும் சீரழிக்கப்படும் போது, என்ன விலை கொடுத்தாவது அவனை தன் வழிக்குள் கொண்டுவர அவள் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த வசியம் என்ற A .K .47 .

பங்காளி பழிஎடுப்பான் என்பார்கள். பங்காளியால் மட்டும் அல்ல, மற்ற எதிரிகள் தொல்லையாலும், பாதிக்கபடுகிற பொழுது மனதளவில் பாதிக்க படுகிற போது, அவர்களை அழிக்க தங்கள் கையில் ஏந்துகிற ஒரு வெடிகுண்டு தான் இந்த வசியம்.

தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக  முயற்சியே இந்த வசியம் எனப்படும்.

இதை அத்தனை பேருமே கடைபிடிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அதுபோன்ற குறுக்கு வழிகளை நாடி, அதனால் நன்மையோ அல்லது தீமையோ பெறவேண்டும் என்கிற விதியமைப்பு இருக்கிற நபர்கள் மட்டுமே அந்த பக்கம் போகிறார்கள். 

நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான் வசியம்.

இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம். சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர் வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம், பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று ஆறு வகையாக பிரித்துள்ளனர். 

உலகம், பகைவர் மற்றும் விலங்கு வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும், அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர் வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும் பயன்படுத்தி உள்ளனர். 

வசியத்தை நடைமுறை  வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது 

1 . மந்திரம்
2 . யந்திரம் அல்லது சக்கரம்.
3 . மூலிகை
4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி இவைகளை பற்றி ஆராய்வோம்.

மந்திரம் 

குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே மந்திரம் எனப்படும். 

வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும் அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர எழுத்துகளுக்கு உண்டு. 

நமது சித்தர்களும் நமசிவாய என்ற ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின் ரகசியங்களும் அடங்கி இருந்ததை அறிந்திருந்தார்கள். 

நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள். 

இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும் பயன் படுத்தி உள்ளனர்.

ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது வசியதிற்கான முலமந்திரமாகும். 

இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள் சித்தர்கள். 

கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது.  உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம் இந்திரன்.  

வசிய ஆற்றலைத்தான் இன்றைய  விஞ்ஞானம் மெஸ்மரிசம் என்று குறுப்பிடும். 

எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை படுத்தி படிக்கும் போது நமது உடலில் மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும். இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று குறிப்பிடுவார்கள். 

தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம் தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின் மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது யந்திர முறையாகும். 

இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22 வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால் செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம் அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால் ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.

இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள் பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர். நாம் வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.



இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும். இது ஒரு முறை.

எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும் மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன. இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர முறையாகும். 

தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால் எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும் தராது.

தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின் பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை சிதற விட மாட்டார்கள். 

அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?

ஐயோ பாவம்..முறையாக உருவேற்றபடாத எந்த சக்கரத்திற்கும் சக்தி இல்லை. 

நீங்கள் ஏமாறவும் வேண்டாம், ஏமாற்று காரராகவும் மாற வேண்டாம். நீங்கள் நீங்களாகவே வாழ  முயற்சியுங்கள்.